வெயில், மழையில கிடந்து வீணா போகுது... உடனே ஏலத்துக்கு விட்டு காச கருவூலத்துல போடுங்க... வெ.இறையன்பு அதிரடி!!

பழைய பயன்பாடில்லாமல் இருக்கும் வாகனங்களை உடனடியாக அப்புறத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் வெ. இறையன்பு சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிட்டுள்ளார்.

வெயில், மழையில கிடந்து வீணா போகுது... உடனே ஏலத்துக்கு விட்டு காச கருவூலத்து போடுங்க... வெ.இறையன்பு அதிரடி!!

பயன்பாடு இல்லாமல் அரசு அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகையை அரசு கருவூலத்தில் சேர்க்குமாறு தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மாட்ட ஆட்சியர்களுக்கு ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வெயில், மழையில கிடந்து வீணா போகுது... உடனே ஏலத்துக்கு விட்டு காச கருவூலத்து போடுங்க... வெ.இறையன்பு அதிரடி!!

இதுகுறித்து ஓர் அறிவிப்பையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு அவர் அனுப்பி வைத்திருக்கின்றார். அதில், "அரசு அலுவலகங்கள் அல்லது அரசுக்கு சொந்தமான இடங்களில் பழைய வாகனங்கள் பயன்பாடில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.

வெயில், மழையில கிடந்து வீணா போகுது... உடனே ஏலத்துக்கு விட்டு காச கருவூலத்து போடுங்க... வெ.இறையன்பு அதிரடி!!

அவை (வாகனங்கள்) ஏன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன? என விசாரித்ததில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. குறிப்பாக, அந்த அலுவலகத்தின் அரசு பணியாளர்களுக்கே அதுகுறித்த தகவல் தெரிவதில்லை. ஆகையால், இதுபோன்று இடங்களை அடைத்துக் கொண்டு, மேலும் பாழாகிக் கொண்டிருக்கும் வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

வெயில், மழையில கிடந்து வீணா போகுது... உடனே ஏலத்துக்கு விட்டு காச கருவூலத்து போடுங்க... வெ.இறையன்பு அதிரடி!!

அதன்மூலம் கிடைக்கும் வருவாயை அரசின் கருவூலத்தில் சேர்க்க வேண்டும். அமலாக்கத் துறைகளின் அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை, அதன் மீதிருக்கும் வழக்குகளை உடனடியாக முடித்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெயில், மழையில கிடந்து வீணா போகுது... உடனே ஏலத்துக்கு விட்டு காச கருவூலத்து போடுங்க... வெ.இறையன்பு அதிரடி!!

அதிகப்படியான வெயில், மழை ஆகியவற்றால் வாகனங்கள் மேலும் சேதமடைந்து வருகின்றன. இதனால், அவற்றின் மதிப்பு மிகக் கடுமையாக குறைந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையில், அவை ஏலத்திற்கு போகுமானால், அவற்றின் மதிப்பு பல மடங்கு குறையும் வாய்ப்பு இருக்கின்றது.

வெயில், மழையில கிடந்து வீணா போகுது... உடனே ஏலத்துக்கு விட்டு காச கருவூலத்து போடுங்க... வெ.இறையன்பு அதிரடி!!

இதனால், அரசின் வருவாயும் பாதிக்கின்றது. ஆகவே, அரசு அலுவலகங்களில் பழைய, பயன்பாடற்று நிற்கும் வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெயில், மழையில கிடந்து வீணா போகுது... உடனே ஏலத்துக்கு விட்டு காச கருவூலத்து போடுங்க... வெ.இறையன்பு அதிரடி!!

அரசு அலுவலகங்களுக்கு சென்றிருப்பீர்களானால் உங்களால் குறைந்தது ஒரு வாகனத்தையாவது அந்த அலுவலகத்தில் வீணாக துருப்பிடித்த நிலையில் நிற்பதைக் காண முடியும். பழைய அம்பாஸ்டர் தொடங்கி விலையுயர்ந்த வாகனங்கள் வரை அனைத்திற்கும் இதேநிலைதான்.

வெயில், மழையில கிடந்து வீணா போகுது... உடனே ஏலத்துக்கு விட்டு காச கருவூலத்து போடுங்க... வெ.இறையன்பு அதிரடி!!

அவை தூசிக்கும், துருவிற்கும் இரையாகிக் கொண்டிருக்கும். இந்த நிலையை உணர்ந்தே பல ஆண்டுகளாக வீணாய் போய்க் கொண்டிருக்கும் அந்த வாகனங்களை அகற்றி, அவற்றின்மூலம் கிடைக்கும் வருமானத்தை அரசு கருவூலத்தில் சேர்க்குமாறு தலைமை செயலாளர் இறையன்பு, அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

வெயில், மழையில கிடந்து வீணா போகுது... உடனே ஏலத்துக்கு விட்டு காச கருவூலத்து போடுங்க... வெ.இறையன்பு அதிரடி!!

இதன்மூலம், அரசுக்கு கணிசமான வருவாய் வருவதோடு, அரசு அலுவலகங்களில் வீணாக அடைத்துக் கொண்டிருக்கும் இடங்களும் விடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களை தங்கு தடையின்றி நிறுத்த முடியும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chief Secretary Iraianbu Orderd To Auction Rusty Vehicles. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X