9 வயதில் பல இலட்ச ரூபாய் காருக்கு ஓனர்... ரசிகர்களை அதிர வைத்த குழந்தை நட்சத்திரம்!!
சமூக வலைத்தளங்கள் பலரது வாழ்க்கையை மாற்றியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. சிறியவர்களில் இருந்து வயதான முதியவர்கள் வரையில் பலர் இணையம் மூலமாக பிரபலமாகி உள்ளனர். அதேபோல், சினிமா திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக சிறுவர், சிறுமியர் கூட இளம் வயதிலேயே டாப் ஸ்டார் ரேஞ்சுக்கு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளனர். அந்த வகையில், வெற்றி பெற்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமாகிய கேரளாவை சேர்ந்த சிறுமி ஒருவர் விலையுயர்ந்த டொயோட்டா இன்னோவா காரை வாங்கியுள்ளார். குடும்பத்தினருடன் அந்த சிறுமி தனது புதிய டொயோட்டா இன்னோவா காரை டெலிவிரி பெறும் வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
மலையாள சினிமாவில் நல்ல கதையை கொண்ட திரைப்படங்களுக்கே மக்கள் ஆதரவு தருவார்கள் என்பது ஊரறிந்த விஷயம். இதனால், சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் இளம் நடிகர், நடிகையர் கூட ரசிகர்களால் தூக்கி வைத்து கொண்டாடப்படுகின்றனர். இன்னும் சொல்ல போனால், மலையாள திரைப்படங்களில் சிறுவர், சிறுமியர் கதாபாத்திரங்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள் கூட மக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை பெறுவது உண்டு.

நம் கோலிவுட்டிலும் குழந்தை சினிமா நட்சத்திரங்கள் முன்னணி நடிகர், நடிகைகளாக உருவெடுத்துள்ளனர் என்றாலும், மலையாள சினிமாவில் ஆக்ஷன் திரைப்படங்களை காட்டிலும், நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிக ஆதரவு தருவதால் குழந்தை நட்சத்திரங்கள் கூட அதிகம் கவனிக்கப்படுகின்றனர். இந்த வகையில், மலையாள சினிமாவில் சமீப காலமாக குழந்தை நட்சத்திரமாக பிரபலமாகி வருபவர் தேவநந்தா ஜிபின்.
மலையாளத்தில் 2022ஆம் ஆண்டில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற மல்லிகாபுரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அதிக ரசிகர்களை ஈர்த்தவர், தேவநந்தா ஆவார். இந்த திரைப்படத்தில் தேவநந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2019ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்துவரும் இவர் இந்திய அளவில் வெற்றி பெற்ற மின்னல் முரளி, 2018 உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஆனால், தேவநந்தாவை கேரளா முழுவதும் பிரபலமாக்கிய திரைப்படம் மல்லிகாபுரம் ஆகும். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த வரவேற்பில் தமிழில் அரண்மனை 4 மற்றும் தெலுங்கில் பாக் உள்ளிட்ட திரைப்படங்களிலும் தேவநந்தா நடித்துள்ளார். இவ்வாறு சிறு வயதிலேயே பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் தேவநந்தா தனது பிறந்த நாளை முன்னிட்டு விலையுயர்ந்த டொயோட்டா காரை வாங்கியுள்ளார்.
குழந்தை நட்சத்திரம் தேவநந்தா தனது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக வாங்கியிருப்பது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் ஆகும். கருப்பு நிறத்திலான இன்னோவா ஹைகிராஸ் காரை அதற்கேற்ப மேட்சிங்காக கருப்பு நிற உடையில் தேவநந்தா தனது குடும்பத்தினருடன் சென்று டெலிவிரி பெறும் வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது. தேவநந்தா வாங்கியிருப்பது புத்தம் புதிய இன்னோவா ஹைகிராஸ் கார் கிடையாது, செகண்ட் ஹேண்ட் கார் ஆகும்.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.30.98 லட்சமாக உள்ளது. செகண்ட்-ஹேண்ட் கார் என்பதால், நிச்சயமாக இந்த விலையில் இன்னோவா ஹைகிராஸை தேவநந்தா வாங்கியிருக்க மாட்டார். மார்க்கெட்டில் பிரபலமான டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரின் அடுத்த தலைமுறை மாடலாக 2022ஆம் ஆண்டில் இன்னோவா ஹைகிராஸ் அறிமுகம் செய்யப்பட்டது.
இது ஒரு ஹைப்ரீட் கார் ஆகும். அதாவது, இந்த காரில் பெட்ரோல் என்ஜின் உடன் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 186 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை இன்னோவா ஹைகிராஸ் காரில் பெறலாம். மைல்ட்-ஹைப்ரீட் மற்றும் ஸ்ட்ராங்-ஹைப்ரீட் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் இன்னோவா ஹைகிராஸ் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டிலும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிச்சயமாக, செகண்ட்-ஹேண்ட் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை குழந்தை நட்சத்திரமான தேவநந்தா புக் செய்து வாங்கியிருக்க வாய்ப்பில்லை. அவரது குடும்பத்தினர் தான் காரை தேர்வு செய்து, அதற்கான இதர வேலைகளையும் செய்து இருப்பர். இருப்பினும், காருக்காக செலவிடப்பட்ட பணத்தில் தேவநந்தாவின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









