6 வயது சிறுமியிடம் இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட வாலிபர்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க... வீடியோ

6 வயது சிறுமியிடம் இரக்கமே இல்லாமல் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட வாலிபரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

6 வயது சிறுமியிடம் இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட வாலிபர்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க... வீடியோ

இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்ஹாம்ஷையர் பகுதியில் தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்த ஒரு ஜோடி, அவ்வழியாக சைக்கிளில் வந்த குழந்தைக்கு வழி விடாமல், அடாவடி செய்துள்ளனர். மேலும் அந்த குழந்தை சைக்கிளில் இருந்து விழுந்தபோது தூக்கி கூட விடாமல் அந்த குழந்தையின் தந்தையுடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.

6 வயது சிறுமியிடம் இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட வாலிபர்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க... வீடியோ

நாட்டிங்ஹாம்ஷையர் பகுதியில் உள்ள ஒரு குறுகிய பாதையில் ஒரு ஆணும், பெண்ணும் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் 6 வயது மட்டுமே நிரம்பிய சிறுமி ஒருவர் சைக்கிள் ஓட்டி வந்தார். அவரது தந்தையும் அப்போது உடன் வந்து கொண்டிருந்தார். வழி விடும்படி அவர்களிடம் பல முறை கேட்கப்பட்டது. ஆனால் அந்த ஜோடி, சிறுமிக்கு வழி விடவே இல்லை.

6 வயது சிறுமியிடம் இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட வாலிபர்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க... வீடியோ

எனவே அந்த ஜோடிக்கு இடையே கிடைத்த சிறிய இடைவெளியை பயன்படுத்தி அந்த சிறுமி முன்னே செல்ல முயன்றார். அப்போது அவர் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். ஆனால் அந்த சிறுமியை அவர்கள் தூக்கி கூட விடவில்லை. அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலை தளங்களில் அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

6 வயது சிறுமியிடம் இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட வாலிபர்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க... வீடியோ

அந்த வீடியோவில் சிறுமி சத்தம் போட்டு கதறி அழுவதை நம்மால் கேட்க முடிகிறது. ஆனால் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல், அந்த ஆண், அச்சிறுமியின் தந்தையுடன் வாக்குவாதம் செய்கிறார். அத்துடன் அங்கு இருந்து செல்வதற்கு முன்னதாக, அந்த சிறுமியின் சைக்கிளை காலால் எட்டி அவர் எட்டி உதைக்கவும் செய்கிறார்.

6 வயது சிறுமியிடம் இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட வாலிபர்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க... வீடியோ

இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியின் தாய் மிச்செலி ப்ராஸ்ட் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் தனது மகள் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ''எனது மகள் சைக்கிள் பெல்லை அடித்து கொண்டுதான் வந்தார். ஆனால் அந்த ஜோடி வேண்டுமென்றே எனது மகளுக்கு வழிவிடுவதற்கு மறுத்துள்ளனர்'' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

6 வயது சிறுமியிடம் இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட வாலிபர்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க... வீடியோ

குழந்தையை கஷ்டப்படுத்திய அந்த ஜோடி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமியும் இச்சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வைரலாகி வரும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

சிறுமிக்கு ஜோடி வழிவிடாததாலும், அதை தொடர்ந்து சிறுமி கீழே விழுந்ததாலும், அந்த சிறுமியின் தந்தை மற்றும் அந்த ஜோடிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சாலையில் நாம் வாகனங்களில் பயணிக்கும் போது இதுபோன்று பல்வேறு காரணங்களால் மற்ற வாகன ஓட்டிகளுடனும், பாதசாரிகளுடனும் வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

6 வயது சிறுமியிடம் இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட வாலிபர்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க... வீடியோ

குறிப்பாக இந்தியாவில் வாகன ஓட்டிகளுக்கு இடையே வாக்குவாதம், கைகலப்பு போன்ற நிகழ்வுகளை நாம் அடிக்கடி பார்க்க முடியும். இவ்வாறான வாக்குவாதம் மற்றும் கைகலப்புகளை தவிர்க்க வேண்டுமென்றால், நாம் ஒரு சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சாலையில் மற்றவர்களுடன் பிரச்னைகளை தவிர்க்க வேண்டுமென்றால், முதலில் அதிவேகத்தை தவிர்த்து விடுங்கள்.

6 வயது சிறுமியிடம் இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட வாலிபர்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க... வீடியோ

அதிவேகத்தில் பயணம் செய்வதே பெரும்பாலான பிரச்னைகளுக்கு முக்கியமான காரணம். அதிக வேகத்தில் பயணம் செய்வதை தவிர்த்தால், தேவையில்லாத பிரச்னைகளில் இருந்து தப்புவதுடன், சாலை விபத்தில் இருந்தும் நீங்கள் தப்பிக்கலாம். இதனை நம்மால் மிக எளிதாக பின்பற்ற முடியும். எந்தவொரு இடத்திற்கு செல்வதாக இருந்தாலும், 10 நிமிடம் முன்கூட்டியே கிளம்புங்கள்.

6 வயது சிறுமியிடம் இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட வாலிபர்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க... வீடியோ

இதன் மூலம் நீங்கள் அவசரமாக பயணம் செய்வதை தவிர்க்க முடியும். அதேபோல் போக்குவரத்து விதிகள் அனைத்தையும் முறையாக பின்பற்றுங்கள். இதனை செய்வதன் மூலம், நீங்கள் மற்ற வாகன ஓட்டிகளிடம் மதிப்பு பெறுவீர்கள். இல்லாவிட்டால் அவர்கள் உங்களுக்கு சண்டைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

6 வயது சிறுமியிடம் இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட வாலிபர்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க... வீடியோ

அதேபோல் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை அறவே தவிர்த்து விடுங்கள். வாகன ஓட்டிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுவதற்கு இதுவே முக்கியமான காரணம். அதேபோல் விபத்துக்களுக்கும் இதுவே முக்கிய காரணம். அதேபோல் வாகனம் ஓட்டும்போது சாந்தமான இருங்கள். நல்ல மனநிலையில் வாகனங்களை ஓட்டுவதும், தேவையில்லாத பிரச்னைகளை தவிர்க்க உதவும்.

6 வயது சிறுமியிடம் இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட வாலிபர்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க... வீடியோ

அனைவரும் வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்டுவதுடன், போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றினால், தேவையில்லாத வாக்குவாதங்கள் மற்றும் பிரச்னைகள் எளிதாக தவிர்க்க கூடிய ஒன்றுதான். வாகனங்களை எடுத்து கொண்டு சாலைக்கு செல்வதற்கு முன் எப்போதும் இதனை மனதில் கொள்ளுங்கள்.

Article Published On: Thursday, May 14, 2020, 15:30 [IST]
English summary
Child Is Knocked Off Her Cycle When Couple Refuse To Get Out Her Way On Footpath: Video. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+