விலை உயர்ந்த காரை வாங்கிய குழந்தை நட்சத்திரம்.. இவ்ளோ சின்ன வயசுலேயே இந்த பாப்பா இந்த காரை வாங்கிருச்சா!!
கன்னட டிவி சீரியல் உலகின் ஃபேமஸான நாடகங்களில் ஒன்றாக 'லக்ஷ்மி நிவாஸ்' சீரியல் உள்ளது. ஒரு நடுத்தர வர்க்க தம்பதியினரின் வாழ்க்கைக் கதையை சொல்லும் ஓர் சீரியலே லக்ஷ்மி நிவாஸ் ஆகும். இதனாலேயே கர்நாடகாவின் மிகவும் பிரபலமான சீரியலாக இது உள்ளது. குறிப்பாக, இந்த நாடகத்தில் 'குஷி' எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரத்திற்கு ஃபேன்கள் பட்டாளம் மிக அதிகம். தன்னுடைய மழலை நடிப்பினால் கன்னடம் பேசும் மக்களின் மனதைக் கொள்ளை கொண்ட இந்த குழந்தை நட்சத்திரமாகவே அவர் மாறிவிட்டார்.
இந்த குழந்தை நட்சத்திரமே தற்போது விலை உயர்ந்த கார் மாடல் ஒன்றை வாங்கி இருப்பாதக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக குழந்தை நட்சத்திரம் நிஷிதா காருடன் நிற்கும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு உள்ளது. சிறுமிக்கு ஆறு வயதே ஆகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

இத்தகைய இளம் வயதிலேயே அவர் ஓர் விலை உயர்ந்த காருக்கு சொந்தக்காரராக ஆகிவிட்டார். புத்தம் புதிய ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) காரையே அவர் வாங்கி இருக்கின்றார். இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஓர் கார் மாடலே இந்த கிரெட்டா என்பது கவனிக்கத்தகுந்தது.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் இந்தியாவில் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களின் வரிசையில் மூன்றாவது இடத்தில் இந்த ஹூண்டாய் கிரெட்டாவே இருக்கின்றது. முதல் இடத்தில் டாடா பஞ்ச் கார் மாடலும், இரண்டாவது இடத்தில் மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் மாடலும் இருக்கின்றன என்பது கவனித்தக்கதகுந்தது.
இந்த நாட்டின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல் கிரெட்டாவை வாங்கி இருப்பதனால், குழந்தை நட்சத்திரம் நிஷிதாவின் இமேஜ் இன்னும் அதிகரித்திருக்கின்றது என்றே கூறலாம். ஹூண்டாய் கிரெட்டா ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் ரூ. 10.99 லட்சம் தொடங்கி ரூ. 20.15 லட்சம் வரையிலான விலையிலேயே இந்த கார் விற்கப்படுகின்றது.
இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த கார் மாடலில் அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட என்-லைன் ஆப்ஷனும் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது. அது ரூ. 16.82 லட்சம் தொடங்கி ரூ. 20.44 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஹூண்டாய் நிறுவனம் இந்த எஸ்யூவி ரக கார் மாடலில் பிரீமியம் மற்றும் அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை வாரி வழங்கியிருக்கின்றது. அந்தவகையில், 10.25 அங்குல திரை இரண்டு இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும். அதில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று டிரைவருக்கான திரையாகவும் செயல்படும்.
இத்துடன், காற்றோட்டத்தை உறுதிப்படுத்தக் கூடிய வசதிக் கொண்ட இருக்கைகள், டூயல் ஜோன் கிளை மேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், விரைந்து கேபினை குளிர்விக்கும் வசதிக் கொண்ட ஏசி துவாரங்கள் ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுவிர, க்ரூஸ் கன்ட்ரோல், டிரைவருக்கான பவர் இருக்கை மற்றும் ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற அம்சங்களும் கிரெட்டா காரில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இதுதவிர, பாதுகாப்பு அம்சங்களையும் இந்த காரில் மிக தாராளமாக வாரி வழங்கி இருக்கின்றது ஹூண்டாய். அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் லெவல் 2 வகை அடாஸ் அம்சம் ஆகியவையும் புதுப்பிக்கப்பட்ட கிரெட்டாவில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குழந்தை நட்சத்திரம் விலை உயர்ந்த காரை வாங்கியதற்காக அவரது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்துக் கொண்டிருக்கின்றார். மேலும், ஒரு சிலர் இந்த குழந்தை நட்சத்திரம் இதுபோல் இன்னும் பல்வேறு வளர்ச்சியைக் காண வேண்டும் என்றும் வாழ்த்தி வருகின்றனர். அவருடைய வளர்ச்சியும் இதற்கேற்பவே இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








