நவீன யுக டிராம் பஸ்... சீக்கிரமே கனவை நனவாக்கும் சீனா!

Written By:

போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் நகர்ப்புறங்களுக்காக புதுமையான போக்குவரத்து சாதனங்களை உருவாக்கும் முயற்சிகள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. அந்தவகையில், கடந்த மே மாதம் சீனாவில் ஒரு பிரம்மாண்ட பஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

அது கான்செப்ட் நிலையில் வெளியிடப்பட்டது குறித்து நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தநிலையில், கான்செப்ட் வெளியிடப்பட்டு இரண்டே மாதங்களில் உண்மையான டிராம் பஸ்சை உருவாக்கி சோதனை ஓட்டத்தையும் துவங்கிவிட்டனர். என்னா ஒரு ஃபாஸ்ட் என்று சொல்லுமளவுக்கு மளமளவென உருவாக்கப்பட்டு சோதனை ஓட்டத்திற்கு தயாரான அந்த பஸ்சின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

டிராம் பஸ்

டிராம் பஸ்

கொல்கத்தாவில் இயக்கப்படும் டிராம் ரயில் போன்றே இருந்தாலும், பல வித்தியாசங்களுடன் இது நவீன யுக டிராம் பஸ் மாடலாக இருக்கிறது. லேண்ட் ஏர்பஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பஸ் மாடலை சீனாவை சேர்ந்த டிரான்ஸ்போர்ட் எக்ஸ்ப்ளோரர் பஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு லேண்ட் பஸ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

சாலையின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டிருக்கும் தண்டவாளத்தில் செல்லும் இந்த பஸ்சின் தளம் இருக்கைகளுக்கான தளம் வாகன போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் அதிக இடைவெளியுடன் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. கீழே வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல முடியும்.

தீர்வு

தீர்வு

சாலையில் பஸ்களால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி முற்றிலும் நீங்கும். அத்துடன், இந்த பஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் ரயில் போல எந்த இடையூறும் இல்லாமல் குறித்த நேரத்தில் இயக்க முடியும்.

சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

தற்போது சாதாரண சாலைகளில் இந்த பஸ் இயக்கப்படவில்லை. சீனாவின் கின்ஹுவாங்டாவ் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் 300 மீட்டர் நீளமுடைய சோதனை ஓட்ட தடத்தில் இந்த பஸ் இயக்கி ஆய்வுகள் செய்யப்படுகின்றது.

பயணிகள்

பயணிகள்

இந்த பஸ்சில் 300 பேர் முதல் 1,400 பேர் வரை பயணிக்க முடியுமாம். எனவே, பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக அதிகமாக உயரும் என்று கணிக்கப்படுகிறது.

வேகம்

வேகம்

இந்த பஸ்சை மணிக்கு 60 கிமீ வேகம் வரை இயக்க முடியும். தண்டவாள அமைப்பில் பயணிப்பதால், வளைவுகளில் கூட வேகத்தை அதிகமாக குறைக்க வேண்டியிருக்காது.

லிஃப்ட் வசதி

லிஃப்ட் வசதி

மாடி பஸ் போன்று இருக்கும் இந்த பஸ்சின் மேல்புறத்திற்கு செல்வதற்கு வசதியாக லிஃப்ட் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைவரும் எளிதாக ஏறி, இறங்க முடியும். வீல் சேரில் வருபவர்களுக்கும் மிகவும் உகந்தது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

நிறுத்தங்களில் பயணிகள் இறங்கும்போது பின்னால் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுப்பதுடன், தானியங்கி முறையில் தடுப்புகளும் செயல்படும். இதனால், பயணிகள் வெகு எளிதாக சாலையின் இருபுறத்திற்கும் செல்ல முடியும்.

 செலவு குறைவு

செலவு குறைவு

மெட்ரோ ரயில் போன்ற போக்குவரத்து சாதனங்களைவிட இந்த பஸ்சிற்கான கட்டமைப்புகளுக்கு செலவு குறைவாக இருக்குமாம். எனவே, சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக முடிந்தவுடன், சாதாரண சாலையில் வைத்து இந்த பஸ்சை இயக்க அனுமதி கோர இருக்கின்றனர்.

சவால்கள்

சவால்கள்

இந்த பஸ்சின் கீழ் பகுதியில் கார்கள் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் மட்டுமே கடந்து செல்ல முடியும். டிரக்குகள் போன்ற கனரக வாகனங்கள் கடந்து செல்வது கடினமாக இருக்கும். இல்லையெனில், அதுபோன்ற வாகனங்களை இந்த டிராம் பஸ் செல்லும் சாலைகளில் தடை செய்ய வேண்டியிருக்கும்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
China Actually Built That Crazy Land AirBus.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark