அமெரிக்காவை உசுப்பேற்ற ஆளில்லா தாக்குதல் விமானம் தயாரிக்கும் சீனா: இந்தியாவிற்கு குறியா..??

’மேட் இன் சீனா’: அமெரிக்காவை உசுப்பேற்ற ஆளில்லா தாக்குதல் விமானம் தயாரிக்கும் சீனா..!!

By Azhagar

சீனாவின் புதியதாக தயாரித்துள்ள ஆளில்லா தாக்குதல் விமானங்களுக்கான சோதனை வெற்றி அடைந்துள்ளதாக அந்நாட்டின் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

சீனா தயாரிக்கும் ஆளில்லா தாக்குதல் விமானங்கள்..!!

சி.ஹெச்-5 என்ற பெயர் கொண்ட இந்த விமானங்கள், அமெரிக்காவின் எம்.கியூ-9 ரீப்பர் ஆளில்லா தாக்குதல் விமானங்களுக்கு போட்டியாக தயாரிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

2017 Mercedes Benz GLC 43 AMG Coupe Launched In India - DriveSpark
சீனா தயாரிக்கும் ஆளில்லா தாக்குதல் விமானங்கள்..!!

இதுகுறித்து பேசிய சீனாவின் பெய்ஹாங் பல்கலைக்கழக பேராசிரியர் வாங் சாங்,

"அமெரிக்காவின் போர் விமானங்களின் உற்பத்தி செலவில் பாதி மதிப்பில் தான் சி.ஹெச்-5 ரெயின்போ ஆளில்லா தாக்குதல் விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன". மேலும் இந்த அமெரிக்காவின் எம்.கியூ-9 ரீப்பர் விமானங்களை விட பலவீனமானது" என்று கூறுகிறார்.

சீனா தயாரிக்கும் ஆளில்லா தாக்குதல் விமானங்கள்..!!

இரண்டையும் ஒப்பிடுகையில், அமெரிக்க ரீப்பர் விமானங்கள் 12,000 முதல் 15,000 மீட்டர்கள் உயரம் வரை பறக்கும். அதனால் அதை தரையிலிருந்து தாக்கும் வாய்ப்பு குறைவு.

சீனா தயாரிக்கும் ஆளில்லா தாக்குதல் விமானங்கள்..!!

சீனாவின் சி.ஹெச்.5 விமானங்கள் வெறும் 9,000 மீட்டர்கள் உயரம் வரை மட்டுமே பறக்கும் திறன் கொண்டது. இதனால் இதை தரையிலிருந்து தாக்கும் வாய்ப்பு அதிகம் என்கிறார் பேராசிரியர் வாங் சாங்.

சீனா தயாரிக்கும் ஆளில்லா தாக்குதல் விமானங்கள்..!!

அமெரிக்காவிற்கு போட்டியாக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் சீனாவால், ராணுவம் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளில் மேற்கு நாடுகளை மிஞ்சும் சக்தியை பெறமுடியவில்லை.

சீனா தயாரிக்கும் ஆளில்லா தாக்குதல் விமானங்கள்..!!

அதை சாதித்து காட்டுவதற்கு முதற்கட்டமாக சீனா கையில் எடுத்திருக்கும் முதல் செயல்பாடு தான் இந்த ஆளில்லா விமானத்தின் கட்டுமானம்.

சீனா தயாரிக்கும் ஆளில்லா தாக்குதல் விமானங்கள்..!!

இருந்தாலும், பாதுகாப்பு விமானங்களை பொறுத்து சீனா செய்யும் முயற்சிகள் அதற்கு பலனளிப்பத்தில்லை என்பதும் பேராசிரியர் வாங் சாங்கின் கருத்தாக உள்ளது.

சீனா தயாரிக்கும் ஆளில்லா தாக்குதல் விமானங்கள்..!!

உலகிலேயே அதிக பொருட்செலவில் மற்றும் திறனுடன் தயாரிக்கப்படும் விமானங்கள் அமெரிக்காவின் ஆளில்லா ரீப்பர் தாக்குதல் விமானங்கள் தான்.

சீனா தயாரிக்கும் ஆளில்லா தாக்குதல் விமானங்கள்..!!

அமெரிக்காவின் டாலர் மதிப்புபடி 16.9 மில்லியன் மதிப்பில் தயாரிக்கப்படும் எம்.கியூ-9 ரீப்பர் போன்ற விமானங்களை சீனா அதில் பாதி செலவில் மட்டுமே தயாரித்துள்ளன.

சீனா தயாரிக்கும் ஆளில்லா தாக்குதல் விமானங்கள்..!!

சீனா தயாரித்துள்ள சி.ஹெச்.5 ஆளில்லா தாக்குதல் விமானங்கள் 21 மீட்டர் நீளமாகும். கிட்டத்தட்ட 1000 கிலோ எடை வரை ஆயுதங்களை இது சுமக்கவல்லது.

சீனா தயாரிக்கும் ஆளில்லா தாக்குதல் விமானங்கள்..!!

வானில் பறந்த படியே 60 மணி நேரம் வரை இதனால் இயங்க முடியும். மேலும் 10,000 கி.மீ தூரம் வரை சென்று ஆளில்லாமல் தாக்குதல்களை நடத்த முடியும்.

சீனா தயாரிக்கும் ஆளில்லா தாக்குதல் விமானங்கள்..!!

அமெரிக்காவிற்கு தான் சீனாவின் சி.ஹெச்.5 விமானங்கள் தூசி. ஆனால் ஆசியாவில் உள்ள மற்ற நாடுகள் இதனால் பதற்றமான சூழ்நிலை அடைந்துள்ளன.

இருந்தாலும் தயாரிப்பு நிலைக்கு பிறகு சி.ஹெச்.5 விமானம் குறித்த பல்வேறு தகவல்கள் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: China Starts Production Of CH-5, Copy Of The American Reaper Armed Drone. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X