சீனா- பிரான்ஸ் இடையே நேரடி சரக்கு ரயில் அறிமுகம்!

By Saravana

சீனா- பிரான்ஸ் இடையே நேரடி சரக்கு ரயில் சேவை துவங்கப்பட்டிருக்கிறது. உலகில் மிக நீண்ட தூரம் பயணிக்கும் சரக்கு ரயில் சேவைகளில் ஒன்றாக இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐரோப்பிய யூனியனுடன் சீனா செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தத்தின் பயனாக இந்த ரயில் சேவை துவங்கப்பட்டிருக்கிறது. கூடுதல் சிறப்புத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிதல்ல

புதிதல்ல

ஐரோப்பிய யூனியனுடன் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்கு ரயில்களை சீனா இயக்கி வருகிறது. அதிலும், இது நேரடி சரக்கு ரயில் சேவையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 பயண தூரம்

பயண தூரம்

மத்திய சீனாவில் உள்ள வூஹான் நகரிலிருந்து பிரான்ஸ் நாட்டின் லயோன் நகருக்கு இந்த சரக்கு ரயில் செல்கிறது. மொத்தம் 11,600 கிமீ தூரம் இந்த ரயில் பயணிக்கும். கடந்த புதன்கிழமை பயணத்தை துவங்கிய இந்த ரயில் 16 நாட்களில் பிரான்ஸ் நாட்டை சென்றடையும்.

வழித்தடம்

வழித்தடம்

சீனாவிலிருந்து கஜகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து மற்றும் ஜெர்மனி வழியாக இந்த ரயில் பிரான்ஸ் நாட்டிற்கு செல்கிறது. அதே வழித்தடத்தில் திரும்பும். வழியில் 6 விதமான நேர மண்டலங்களை கடந்து செல்லும்.

சரக்குகள்

சரக்குகள்

எந்திரங்களுக்கான பாகங்கள், மின்னணு சாதனங்கள், ரசாயன பொருட்கள் இந்த ரயிலில் எடுத்துச் செல்லப்படுகின்றன. திரும்பும்போது ஆட்டோமொபைல் தயாரிப்புகள், ஒயின் மற்றும் வேளாண் விளை பொருட்களுடன் சீனா வந்தடையும்.

 பயன் என்ன?

பயன் என்ன?

தற்போது சீனாவிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு கடல் மார்க்கமாக கப்பலில் சரக்குகளை அனுப்பும்போது, அது சென்றடவைதற்கு 50 நாட்கள் முதல் 60 நாட்களாகும். ஆனால், இந்த நேரடி சரக்கு ரயில் சேவை மூலமாக வெறும் 16 நாட்களில் பொருட்களை அனுப்பும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

சிக்கனம்

சிக்கனம்

விமானத்தில் பொருட்களை அனுப்புவதைவிட மிகவும் சிக்கனமானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், இந்த ரயில் சேவை மிகவும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்தாகவும் குறிப்பிடப்படுகிறது.

டிமான்ட்

டிமான்ட்

ஐரோப்பிய மார்க்கெட்டில் சீன தயாரிப்புகள் மிகவும் மலிவு விலையில் கிடைப்பதால், அதிக வரவேற்பு இருக்கிறது. எனவே, ஐரோப்பிய நாட்டு சந்தையை தக்கவைத்துக் கொள்வதற்கு இந்த நேரடி சரக்கு ரயில் சேவைகளில் சீனா தொடர்ந்து மும்முரம் காட்டி வருகிறது.

 நேரடி சேவைகள்

நேரடி சேவைகள்

ஐரோப்பிய நாடுகளுக்கு ரயில் மார்க்கமாக பொருட்களை அனுப்புவதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. சீனாவின் சான்கிங், வுஹான், செங்ஸோ, சங்ஸா, ஷெங்யாங் போன்ற பல நகரங்களிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இதுபோன்ற நேரடி சரக்கு ரயில் சேவைகள் ஏற்கனவை துவங்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக நீளமான சரக்கு ரயில்

682 வேகன்கள், 8 எஞ்சின்கள்... உலகின் மிக நீளமான சரக்கு ரயில் பற்றியத் தகவல்கள்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
China Commences Direct Freight train service to France.
Story first published: Friday, April 8, 2016, 15:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X