சீனா- இங்கிலாந்து இடையே நேரடி சரக்கு ரயில் சேவை துவக்கம்!

Written By:

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனா தற்போது சரக்கு ரயில் சேவையை விரிவுப்படுத்தி வருகிறது. நீர் வழி போக்குவரத்தைவிட இந்த சரக்கு ரயில் போக்குவரத்தானது பல்வேறு அனுகூலங்களையும், கால விரயத்தையும் தவிர்ப்பதாக இருப்பதே இதற்கு காரணம்.

பொருளாதாரத்திற்கும், வர்த்தகத்திற்கும் வலு சேர்க்கும் விதத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு தொடர்ந்து நீண்ட தூர சரக்கு ரயில்களை சீனா அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு நேரடி சரக்கு ரயிலை அறிமுகம் செய்துள்ளது.

சீனாவிலிருந்து லண்டனுக்கு நேரடி சரக்கு ரயில் அறிமுகம்!

சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் உள்ள யுவூ நகரிலிருந்து லண்டன் மாநகருக்கு இந்த சரக்கு ரயில் சேவை துவங்கப்பட்டு இருக்கிறது. நேற்று யுவூ நகரிலிருந்து முதல் சரக்கு ரயில் லண்டனுக்கு புறப்பட்டது.

சீனாவிலிருந்து லண்டனுக்கு நேரடி சரக்கு ரயில் அறிமுகம்!

சீனாவிலிருந்து கஜகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய பல தேசங்களை கடந்து லண்டன் மாநகரை அந்த ரயில் அடையும்.

சீனாவிலிருந்து லண்டனுக்கு நேரடி சரக்கு ரயில் அறிமுகம்!

யுவூ மற்றும் லண்டன் நகரங்களுக்கு இடையிலான கிட்டத்தட்ட 12,000 கிமீ தூரத்தை 18 நாட்களில் கடக்க இருக்கிறது அந்த சரக்கு ரயில்.

சீனாவிலிருந்து லண்டனுக்கு நேரடி சரக்கு ரயில் அறிமுகம்!

யுவூ நகரில் உற்பத்தி செய்யப்பட்ட து. ஆயத்த ஆடைகள், சூட்கேஸுகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை அந்த ரயிலில் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சீனாவிலிருந்து லண்டனுக்கு நேரடி சரக்கு ரயில் அறிமுகம்!

கப்பல்கள் வழியாக பொருட்களை அனுப்பும்போது நீண்ட கால தாமதம் ஏற்படுகிறது. வான் வழி போக்குவரத்துக்கான கட்டணம் அதிகம். எனவே, விரைவாகவும், குறைவான கட்டணத்திலும் பொருட்களை அனுப்புவதற்கு ரயில் சேவையே சிறந்ததாக இருக்கிறது.

சீனாவிலிருந்து லண்டனுக்கு நேரடி சரக்கு ரயில் அறிமுகம்!

இதனால், ஆசிய, ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சரக்கு ரயில் சேவையை துவங்குவதில் சீனா முனைப்பு காட்டி வருகிறது. இதனால், அந்த நாட்டின் வர்த்தகமும், பொருளாதாரமும் மேம்படும் என்று அந்நாட்டு அரசு கருதுகிறது.

சீனாவிலிருந்து லண்டனுக்கு நேரடி சரக்கு ரயில் அறிமுகம்!

ஏற்கனவே பிரான்ஸ் நாட்டுக்கு நேரடி சரக்கு ரயிலை சீனா இயக்கி வருகிறது. தற்போது அங்கிருந்து லண்டன் மாநகரை இணைக்கும் விதத்தில் இந்த புதிய ரயில் சேவை துவங்கப்பட்டு இருக்கிறது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
China has launched its first freight train to London.
Story first published: Monday, January 2, 2017, 17:41 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark