டாக்ஸி டிரைவர்கள் வேலைக்கு வேட்டு! டிரைவரே இல்லாமல் தானாக இயங்கும் டாக்ஸி சேவைக்கு அனுமதி!

சீனாவில் டிரைவரே இல்லாமல் இயங்கும் டாக்ஸி சேவையை வழங்க பைடு நிறுவனத்திற்கு உரிமத்தை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

பைடு சீன தலைநகர் பீஜிங்கை தலைமையாகக்கொண்டு செயல்படும் ஒரு டெக்னாலஜி நிறுவனம் நாம் எல்லாம் எப்படி கூகுளை ஒரு தேடு பொறியாகப் பயன்படுத்துகிறோமோ அதே போல சீன மக்கள் பைடுவை ஒரு தேடு பொறியாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாகத் தானியங்கி கார்களை வடிவமைக்கும் ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது.

டாக்ஸி டிரைவர்கள் வேலைக்கு வேட்டு! டிரைவரே இல்லாமல் தானாக இயங்கும் டாக்ஸி சேவைக்கு அனுமதி!

ஏற்கனவே எலான் மஸ்கின் டெஸ்லான நிறுவனம் தானியங்கி கார்களை வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அடுத்து பல்வேறு மேம்பாடுகள் மற்றும் வசதிகளுடன் தானியங்கி கார்கள் உலகில் பயன்பாட்டிற்கு வரத் துவங்கிவிட்டது. இதே போல பைடு நிறுவனமும் தானியங்கி கார்களை வடிவமைத்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ஆனால் பைடு நிறுவனத்திற்குத் தானியங்கி கார்களை விற்பனை செய்யும் நோக்கம் இல்லை.

தானியங்கி கார்களை கொண்டு டாக்ஸி சேவையை நடத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி அந்நிறுவனம் சீனாவில் ஒரு ஒரு தொழிற்நுட்ப பூங்காவில், உள்ள பயணிப்பதற்காக ஒரு தானியங்கி டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தியது. அது மிகப்பெரிய பூங்கா என்பதால் பலர் அதைப் பயன்படுத்தினர். இந்த சேவையில் கார் மட்டுமே இருக்கும். காரில் பாதுகாப்பிற்காக எப்பொழுதும் வேண்டுமானாலும் காரை கண்ட்ரோலில் எடுக்க டிரைவர்கள் கூட இருக்க மாட்டார்கள்.

இதைப் பயணிகள் புக் செய்து ஏறி அமர்ந்துவிட்டால் தானாக இந்த கார் செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்று சேரும். இந்த கார் வூகான், ச்சோங்க்விங் ஆகிய பகுதிகளில் பயன்பாட்டிற்கு வந்தது. சுமார் 9 மாதங்களில் இந்த சேவையை 14 லட்சம் முறை மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இதற்காக 10 வாகனங்கள் மட்டுமே சோதனை முயற்சியாகப் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் சீனாவில் இந்த சேவையைப் பொதுமக்களுக்கு பொது சாலைகளில் வழங்க அந்நிறுவனம் அனுமதி கோரியது.

இந்நிலையில் சீனா அரசு டிரைவர் இல்லாத டாக்ஸி சேவையை வழங்க பைடு நிறுவனத்திற்கு முதற்கட்ட அனுமதியை வழங்கியுள்ளது. இதையடுத்து விரைவில் சீனாவில் பொது சாலைகளில் டிரைவர் இல்லாமல் இயங்கும் டாக்ஸிகளின் பயன்பாடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால் பொது சாலைக்கு வரும் முதல் டிரைவர் இல்லாத கார் இதுவாக தான் இருக்கும்.

தற்போது டெஸ்லா நிறுவனம் தானியங்கி கார்களை வடிவமைத்திருந்தாலும் அதில் எப்பொழுதும் டிரைவர் ஒருவர் எப்பொழுது வேண்டுமானாலும் காரை கண்ட்ரோலில் எடுக்கும் ஆப்ஷன் இருக்க வேண்டும். ஆனால் சீனாவின் பைடு நிறுவனம் தயாரித்த இந்த தொழிற்நுட்ப வசதி பொருந்திய காரில் டிரைவரே தேவையில்லை. முற்றிலும் தானியங்கியாக கார் இயங்கும்.

அமெரிக்காவில் தற்போது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது தானியங்கி கார்களை டாக்ஸி பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கான முயற்சியில் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்காவிலும் தானியங்கி கார்கள் டாக்ஸி பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியா தானியங்கி கார்களை தயாரிக்கும் பணி விறுவிறுப்பான முன்னேற்றத்தைப் பெற்று வரும் சூழ்நிலையில் இந்த ஆய்வில் சில சறுக்கல்களும் ஏற்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவில் ஃபோர்டு நிறுவனம் மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஏஜி நிறுவனம் சேர்ந்து அக்ரோ ஏஐ என்ற பகிர்ந்து பயணிக்கும் தானியங்கி கார்களை வடிவமைக்கும் குழுவைக் கலைத்தனர்.இப்படியாகத் தானியங்கி கார்கள் பயன்பாட்டிற்கு வர அதிக காலம் ஆகும். அதற்கு முன் இப்படியாக இதை ஆய்வு செய்வது அதிகப் பணம் விரயமாகும் என்பதைக் கருதி இதை நிறுத்தினர். இந்த குழு கடந்த 2019ம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது.

சீனாவில் முதன்முறையாக டிரைவரே இல்லாமல் தானாக இயங்கும் டாக்ஸி சேவைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இதுவரை தானியங்கி கார்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. தானியங்கி கார்கள் இந்தியாவில் பல சிக்கல்களைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாகத் தானியங்கி கார்கள் இந்தியாவிற்கு வந்தால் எப்படி இருக்கும்? உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, December 30, 2022, 14:29 [IST]
English summary
China govt give license for driverless robotaxi test to Baidu
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+