பீஜிங்ல இருந்து கப்பல் கௌம்பீருச்சு! தேவா-ராஜசேகராக மாறிய இந்தியா-சீனா! அமெரிக்கலாம் ஓரமா போய் விளையாடு!
உலகின் வல்லமை மிக்க நாடுகளில் ஒன்றாக சீனா (China) வளர்ந்து வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. இதில், அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்களின் (Rare Earth Minerals And Magnets) உற்பத்தி மிகவும் முக்கியமான ஒரு காரணம் ஆகும். உலகின் அரிய வகை கனிமங்களின் உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பு சுமார் 90 சதவீதம் ஆகும்.
ஐசி இன்ஜின் கார்கள், எலெக்ட்ரிக் கார்கள், ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் ரோபோக்கள் ஆகியவற்றை தயாரிக்க, இந்த அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்கள் மிகவும் அவசியம். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்களின் ஏற்றுமதிக்கு சீனா திடீரென தடை விதித்தது.

இதனால் பாதிக்கப்பட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். குறிப்பாக இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை, மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்களின் ஏற்றுமதிக்கு சீனா விதித்த அதிரடி தடை காரணமாக, இந்தியாவில் வாகனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) உற்பத்தி மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து வரும் நிறுவனங்கள், தங்களின் உற்பத்தியை குறைத்து கொண்டன. அத்துடன் மாற்று வழிகளையும் ஆராய தொடங்கின. ஆனால் இந்த பிரச்னைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.

ஆம், அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்களின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கி கொண்டு, இந்தியாவிற்கு அவற்றை வழங்க சீனா தற்போது சம்மதம் தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் வாங் யி (Wang Yi) தற்போது இந்தியாவிற்கு வந்துள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சரான ஜெய்சங்கரை (Jaishankar), அவர் சந்தித்து பேசினார்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியாவிற்கு அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்களை வழங்க சீனா ஒப்பு கொண்டதாக, தி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்களின் ஏற்றுமதி உடனடியாக தொடங்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்ட காரணத்தால், அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்களின் ஏற்றுமதிக்கு சீனா விதித்த தடையை விலக்கி கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்தியாவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தன. இதை தொடர்ந்து இந்த பிரச்னையை சீன அரசு அதிகாரிகளிடம், இந்தியாவின் மத்திய அரசு கொண்டு சென்றது. இந்த நடவடிக்கைக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த சில வருடங்களாக தீவிரமான போர் (Russia-Ukraine War) நடைபெற்று கொண்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் இந்தியா கச்சா எண்ணெய்யை (Crude Oil) வாங்கி வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தால், இந்தியா பொருட்களுக்கு அமெரிக்கா மிக கடுமையான வரிகளை விதித்து வருகிறது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே, இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் (Donald Trump), அதிகப்படியான வரிகளை விதித்து வருவதாக வெள்ளை மாளிகை (White House) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தியா-அமெரிக்கா உறவில் தற்போது விரிசல் விழுந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவுடன் சீனா நெருக்கம் காட்ட தொடங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்களை இந்தியாவிற்கு வழங்க சீனா முன்வந்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். இது இந்தியாவை சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும். அத்துடன் சீனாவின் வெளியுறவு அமைச்சரான வாங் யீ, இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் (Narendra Modi) சந்தித்து பேசியுள்ளார். இது இந்தியா-சீனா உறவை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








