ச்சோ ஸ்வீட்... காருடன் சண்டை போட்ட சுட்டி பையன்... ஏன் தெரியுமா? மனதை நெகிழ வைக்கும் வீடியோ...

மனதை நெகிழ வைக்கும் வகையில், காருடன் சண்டை போட்ட சுட்டி பையனின் வீடியோ உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

ச்சோ ஸ்வீட்... காருடன் சண்டை போட்ட சுட்டி பையன்... ஏன் தெரியுமா? மனதை நெகிழ வைக்கும் வீடியோ...

சாலை விபத்துக்கள் மிகவும் கொடுமையானவை. கண்ணிமைக்கும் நேரத்தில், ஒருவரின் உயிரை சாலை விபத்து பறித்து விடும். உலகம் முழுவதும் தினந்தோறும் பல லட்சக்கணக்கான சாலை விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன. இதில், தாங்கள் மிகவும் நேசித்த நபரின் உயிரை பறிகொடுத்து விட்டு பல லட்சக்கணக்கானோர் வாழ்நாள் முழுவதும் வேதனைப்பட்டு வருகின்றனர்.

ச்சோ ஸ்வீட்... காருடன் சண்டை போட்ட சுட்டி பையன்... ஏன் தெரியுமா? மனதை நெகிழ வைக்கும் வீடியோ...

வாகனங்களை இயக்குபவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதுதான் சாலை விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. எனவே வாகனங்களை இயக்கும்போது போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுவதுடன், மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் கவனமாகவும் இருக்க வேண்டியது அனைவரின் கடமை.

ச்சோ ஸ்வீட்... காருடன் சண்டை போட்ட சுட்டி பையன்... ஏன் தெரியுமா? மனதை நெகிழ வைக்கும் வீடியோ...

ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இதனை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வது கிடையாது. இந்த வகையில், போக்குவரத்து விதியை மீறிய வாகன ஓட்டி ஒருவரால் நடந்த ஒரு சாலை விபத்தின் வீடியோ தற்போது உலகம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரல் ஆவதற்கு ஒரு சிறுவனின் கோபம்தான் காரணம்.

ச்சோ ஸ்வீட்... காருடன் சண்டை போட்ட சுட்டி பையன்... ஏன் தெரியுமா? மனதை நெகிழ வைக்கும் வீடியோ...

கோபம் மட்டுமல்ல. அந்த சிறுவனின் தாய் பாசமும் இதற்கு முக்கிய காரணம். இங்கே நாங்கள் குறிப்பிடும் சாலை விபத்து சீனாவில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று தாய் ஒருவர் தன் மகனுடன் சாலையை கடந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் இருவர் மீதும் எதிர்பாராத விதமாக மோதியது.

ச்சோ ஸ்வீட்... காருடன் சண்டை போட்ட சுட்டி பையன்... ஏன் தெரியுமா? மனதை நெகிழ வைக்கும் வீடியோ...

இதனால் நிலைகுலைந்து போன தாயும், மகனும் கீழே விழுந்தனர். தன்னுடைய தாய் மீது கார் மோதியதால் உண்டான கோபத்தில் அந்த சிறுவன் செய்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. முதலில் தன் தாய்க்கு என்ன ஆனது என பார்த்த அந்த சிறுவன், பின்னர் கோபத்தில் அழுது கொண்டே ஓடி சென்று விபத்திற்கு காரணமான காரை எட்டி உதைத்தான்.

MOST READ: டூவீலர் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சேல்ஸ்மேன்... அந்தரத்தில் பறந்து சென்ற அதிர்ச்சி வீடியோ

ச்சோ ஸ்வீட்... காருடன் சண்டை போட்ட சுட்டி பையன்... ஏன் தெரியுமா? மனதை நெகிழ வைக்கும் வீடியோ...

அதன்பின் அந்த காரை ஓட்டி வந்த டிரைவரிடம் சண்டையிட்டான். இதனால் காரை விட்டு கீழே இறங்கி வந்த அந்த டிரைவர், உடனடியாக அந்த சிறுவனின் தாய்க்கு என்ன ஆனது? என பார்த்தார். முன்னதாக அந்த சிறுவனும், டிரைவருடன் சண்டையிட்டு விட்டு, பின் தன் தாயிடம் திரும்பி ஓடி வந்து விட்டான். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.

MOST READ: 2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவைதான்...

ச்சோ ஸ்வீட்... காருடன் சண்டை போட்ட சுட்டி பையன்... ஏன் தெரியுமா? மனதை நெகிழ வைக்கும் வீடியோ...

பின்னர் அந்த டிரைவர் தன் காரிலேயே ஏற்றி அந்த சிறுவனின் தாயை மருத்துவமனைக்கு கூட்டி சென்றதாக கூறப்படுகிறது. தன் தாய் மீதான பாசத்தால், காருடனும், கார் டிரைவருடனும் சண்டைக்கு சென்ற அந்த சுட்டி பையனின் வீடியோ அனைவரது மனங்களையும் கவர்ந்துள்ளது. உலகம் முழுக்க வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

சம்பந்தப்பட்ட காரின் டிரைவர் சிக்னலை மதிக்காமல் வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என தெரிகிறது. இந்த விபத்திற்கு காரின் டிரைவர்தான் முழு பொறுப்பு என போலீசாரும் கூறியுள்ளனர். நல்ல வேளையாக இந்த விபத்தால் பெரும் அளவிலான அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. கார் இன்னும் சற்று வேகமாக வந்திருந்தால் கூட ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க கூடும்.

MOST READ: புதிய மாடல்கள் வெகு விரைவில் அறிமுகம்... பஜாஜ் பல்சர் பைக்குகளில் அதிரடி மாற்றம்... என்ன தெரியுமா?

ச்சோ ஸ்வீட்... காருடன் சண்டை போட்ட சுட்டி பையன்... ஏன் தெரியுமா? மனதை நெகிழ வைக்கும் வீடியோ...

சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மனம் எவ்வளவு துயரப்படும்? என்பதற்கு இந்த சம்பவம் சிறு எடுத்துக்காட்டு மட்டுமே. இதனை புரிந்து கொண்டு வாகனங்களை ஓட்டும்போது, போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் இனிமேல் முறையாக பின்பற்றுங்கள்.

Source: South China Morning Post

Most Read Articles

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
China: Little Boy Fighting With Driver Due To Car Hitting His Mom: Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more