சில்லறை காசுகளை சேர்த்து வைத்து ரூ. 40 லட்சம் பிஎம்டபுள்யூ காரை வாங்கிச்சென்ற அதிசய வாடிக்கையாளர்..!
சில்லறை காசுகளை சேர்த்து வைத்து ரூ. 40 லட்சம் பிஎம்டபுள்யூ காரை வாங்கிச்சென்ற அதிசய வாடிக்கையாளர்..!!
பல ஆண்டுகளாக சில்லறை காசுகளை கொண்டு அடையாளம் தெரியாத வாடிக்கையாளர் ஒருவர் புதிய ரக பிஎம்டபுள்யூ காரை வாங்கி சென்றுள்ளார்.

சீனாவில் கார் ஷோரூம் ஒன்றில் 10 அட்டைப்பெட்டிகளுடன் உள்ளே வந்த நபர் ஒருவர், பிஎம்டபுள்யூ கார் வாங்க வேண்டும், அதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஷோரூம் ஊழியர்களும் அவருக்கான கார்களை காட்ட, அந்த நபர் அதில் ஒரு பிஎம்டபுள்யூ காரை தேர்வு செய்துள்ளார்.
தொடர்ந்து அந்த காரை தான் இப்போதே வாங்கிக்கொள்வதாக அவர் கூற, ஷோரூம் ஊழியர்கள் ஆச்சர்யம் அடைந்த போயினர்.

காருக்கான முதல் தவணை தொகையாக, அந்த நபர் தன்னிட்டமிருந்த 10 அட்டைப்பெட்டிகளை நீட்டியுள்ளார்.
பெட்டிகளை பிரித்து பார்த்த ஷோரூம் ஊழியர்கள் அதிர்ந்து போயினர். காரணம், அதில் பல நூறு சில்லரை காசுகள் அடுக்கப்பட்டு இருந்தன.

மொத்தமாக 10 அட்டை பெட்டிகளில் அந்த நபர் சில்லறை காசுகளை சேர்த்து வைத்துள்ளார். ஆசைப்பட்ட பிஎம்டபுள்யூ காரை வாங்க பல ஆண்டுகளாக அவர் சில்லறை காசுகளை சேமித்து வந்தது பிறகு தெரியவந்தது.

ஷோரூம் ஊழியர்களும் அந்த நபரின் பல ஆண்டுகள் சேமிப்பிற்கு மதிப்பளித்து, ஒவ்வொருவராக பத்து பெட்டிகளில் இருந்த சில்லறை காசுகளை எண்ணத்தொடங்கினர்.

சீனாவில் சில்லறை காசுகள் 'மேவோ' என்று குறிப்பிடப்படுகிறது. அந்த வாடிக்கையாளர் கொண்டுவந்த பத்து பெட்டிகளிலும் 5 மேவோ காசுகள் மட்டுமே இருந்தன.

ஷோரூம் ஊழியர்கள் எல்லா பெட்டிகளையும் எண்ணிப்பார்த்ததில் இந்திய மதிப்பில் ரூ. 6.84 லட்சம் இருந்தன.
பிஎம்டபுள்யூ காரின் விலை ரூ. 40 லட்சம். ரூ.6.84 லட்சம் சில்லறை காசுகள் முதல் தவணை பணமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

சீனாவின் ஃபூஜியான் மாகாணத்தில் நடைபெற்ற இந்த சம்பவம், அந்த நாட்டின் பரபரப்பு செய்தியாக மாறிப்போனது.
குறிப்பாக சமூக வலைதளங்கில் சில்லறை காசுகளை வைத்து பிஎம்டபுள்யூ வாங்கிய செய்தி டிரென்டிங்கானது.

ஆனால் அந்த வாடிக்கையாளரை குறித்த தகவல்களை கார் ஷோரூம் ஊழியர்கள் வெளியிட மறுத்துவிட்டனர். ஷோரூம் மேலாளர் அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

ரூ. 40 லட்சம் மதிப்பிலான அந்த பிஎம்டபுள்யூ காருக்கு மொத்தம் 5 தவணைகளாக பணம் தருவதாக வாடிக்கையாளர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதனால் எப்படியும் அந்த அதிசிய வாடிக்கையாளர் 2வது தவணை பணத்தை செலுத்த ஷோரூம் வந்துதானே ஆகவேண்டும் என பல ஊடக பத்திர்க்கையாளர்கள், சீனா ஃபூஜியான் ஷோரூம் முன் காத்துக்கிடக்கின்றனர்.
சாலையில் கார் உரசியதால் மூத்த டாக்ஸி ஓட்டுநரை கடுமையாக தாக்கிய இளம்பெண்..!! (வீடியோ)

ஃபிலிப்பைன்ஸில் உள்ள க்யூஸன் நகரில் இளம் பெண் ஒருவருக்கும், டாக்ஸி ஓட்டுநருக்கும் பிரதான சாலையில் நடைபெற்ற தள்ளு முள்ளு இணையதளங்கள் வரை வைரலானது.

52 வயதான அந்த மூத்த டாக்ஸி ஓட்டுநரை, பொதுவெளியில் இளம் பெண் ஒருவர் கடுமையாக தாக்கியது, நெட்டிசன்கள் மத்தியில் கண்டனங்களை குவித்தது.

சம்பவம் நடந்த நாளில், க்யூஸன் நகர பிரதான சாலையில் சென்றுக்கொண்டு இருந்த 52 வயதான டாக்ஸி ஓட்டுநர் வெர்ஜிலோ, தனது காரை சாலையில் இருந்து பிளாட்ஃபாரமை நோக்கி ஓரம்கட்டியுள்ளார்.

அப்போது அதே சாலையில் வந்துக்கொண்டு இருந்த ஷர்மைன் என்ற பெண்ணின் கார் மீது, வெர்ஜிலோவின் வாடகைக்கார் லேசாக மோதியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ஷர்மைன், தன் காரிலிருந்து கீழே இறங்கி முதியவர் என்றும் பாராமல், வெர்ஜிலோவை கடுமையாக திட்டியுள்ளார்.

தொடர்ந்து காரை விட்டு கீழே இறங்கி வருமாறு அவரை மிரட்டிய ஷர்மைன், கார் கண்ணாடிகளை உடைத்து, அமர்ந்திருந்த வெர்ஜிலோவை கடுமையாக தாக்க தொடங்கினார்.

எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானர் வெர்ஜிலோ. தாக்குதலுக்கு பதில் தாக்குதல் தர முடியாமல், நிலைகுலைந்து சாலையோரத்தில் அழுதபடி வந்து அமர்ந்துக்கொண்டார்.

ஆத்திரம் தீராத ஷர்மைன், சாலையில் அமர்ந்திருக்கும் வெர்ஜிலோவை கைப்பேசியில் புகைப்படம் எடுத்துவிட்டு, என்ன செய்கிறேன் பார் என்ற ரீதியில் கத்திவிட்டு தன் காரில் ஏறி புறப்பட்டு செல்கிறார்.

தற்போது, பாதிக்கப்பட்ட முதியவர் வெர்ஜிலோ க்யூஸன் நகர போலீசாரிடம் இந்த தாக்குதல் சம்பவம் பற்றி புகார் தெரிவித்துள்ளார்.

புகாரை ஏற்ற க்யூஸன் நகர காவல்துறை, இளம்பெண் ஷர்மைன் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிரதான சாலையில் அனைவரும் வேடிக்கை பார்க்கும் விதமாக நடைபெற்ற இந்த சம்பவத்தை சாலை பயணி ஒருவர் கைப்பேசியில் வீடியோ எடுத்துள்ளார்.

இணையதளங்களில் வேகமாக பரவி வரும் அந்த வீடியோவை, பார்க்கும் நெட்டிசன்கள் பலர், இளம் பெண் ஷர்மைனிற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் ஷர்மைனை டேக் செய்து அவரது நண்பர் ஒருவர் இந்த வீடியோவை அனுப்ப, தற்போது ஷர்மைன் தனது செயலுக்கு மன்னிப்புக்கோரி முகநூலில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் ஷர்மைன் மீது கோபத்தில் கொப்பளிக்கும் நெட்டிசன்கள் சிலர், அவர் வேலை செய்யும் நிறுவனத்தையும் டேக் செய்து, இந்த வீடியோவை பரவ விட்டுள்ளனர்.

இதனால் இந்த சம்பவம் மேலும் பரபரப்பாக தற்போது ஷர்மைன் பணிசெய்யும் நிறுவனம் அவரை, வேலையில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.

தவிர, மற்ற கம்பெனிகளில் வேலை கிடைக்காத வகையில், ஷர்மைன் விரைவில் பிளாக்லிஸ்டு செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.


Click it and Unblock the Notifications