வைரலாகும் வீடியோ... பாலத்தின் படிக்கட்டுகளில் காரை ஏற்றி, இறக்கிய சாகச டிரைவர்... எதற்காக தெரியுமா?

பாலத்தின் படிக்கட்டுகளில் கார் ஏறி, இறங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வைரலாகும் வீடியோ... பாலத்தின் படிக்கட்டுகளில் காரை ஏற்றி, இறக்கிய சாகச டிரைவர்... எதற்காக தெரியுமா?

இந்தியாவில் பாதசாரிகள் பயன்படுத்துவதற்கான ஓவர்பாஸ்கள் அதிக அளவில் கட்டமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ நகரங்களில், அவற்றை எளிதாக காண முடியும். ஆனால் சாலையின் மறுபுறத்திற்கு செல்வதற்கு, ஒரு சில இரு சக்கர வாகன ஓட்டிகள் அவற்றை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்துகின்றனர். அதனை நீங்களே கண் கூடாக பார்த்திருக்க முடியும்.

வைரலாகும் வீடியோ... பாலத்தின் படிக்கட்டுகளில் காரை ஏற்றி, இறக்கிய சாகச டிரைவர்... எதற்காக தெரியுமா?

ஆனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் இப்படி செய்வதை மட்டுமே நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்படி என்றால், இந்த செய்தி உங்களுக்கு நிச்சயமாக அதிர்ச்சியளிக்க கூடியதாகதான் இருக்கும். ஏனெனில், கார் டிரைவர் ஒருவர், பாதசாரிகளுக்கான பாலத்தின் மீது, சுஸுகி ஜிம்னி (Suzuki Jimny) காரை ஏற்றி இறக்கியிருக்கிறார்.

வைரலாகும் வீடியோ... பாலத்தின் படிக்கட்டுகளில் காரை ஏற்றி, இறக்கிய சாகச டிரைவர்... எதற்காக தெரியுமா?

பாலத்தின் மீது ஏறி, இறங்கியிருப்பது மூன்றாவது தலைமுறை சுஸுகி ஜிம்னி கார் ஆகும். சாலையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக, அந்த காரின் டிரைவர் இந்த விபரீத காரியத்தை செய்ததாக கூறப்படுகிறது. சீனாவில் அரங்கேறியுள்ள இந்த வினோத சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வைரலாகும் வீடியோ... பாலத்தின் படிக்கட்டுகளில் காரை ஏற்றி, இறக்கிய சாகச டிரைவர்... எதற்காக தெரியுமா?

அந்த சாகச டிரைவருக்கு காவல் துறையினர் 200 யுவான்களை அபராதமாக விதித்துள்ளனர். மேலும் அவரது டிரைவிங் லைசென்ஸில் புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் மீது ஏறி, இறங்கிய ஜிம்னி மாடல் சர்வதேச மார்க்கெட்களில், வெவ்வேறு பெயர்களின் கீழ், மிக நீண்ட காலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வைரலாகும் வீடியோ... பாலத்தின் படிக்கட்டுகளில் காரை ஏற்றி, இறக்கிய சாகச டிரைவர்... எதற்காக தெரியுமா?

அனைத்து ஜிம்னி மாடல்களும் ஆஃப் ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்படுகின்றன. ஜிம்னி மாடல்கள் லைட்வெயிட் என்பதாலும், காம்பேக்ட்-ஆக இருப்பதாலும், சுறுசுறுப்பானவையாக திகழ்கின்றன. தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், இந்த மூன்றாவது தலைமுறை சுஸுகி ஜிம்னி எந்தவித பிரச்னையும் இல்லாமல் படிக்கட்டுகளில் ஏறி, இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது.

வைரலாகும் வீடியோ... பாலத்தின் படிக்கட்டுகளில் காரை ஏற்றி, இறக்கிய சாகச டிரைவர்... எதற்காக தெரியுமா?

சுஸுகி ஜிம்னி கார் டிசைனில் காம்பேக்ட் ஆக இருக்கிறது. அதனால்தான் குறுகிய பாலத்தால், அதற்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. மேலும் அடிப்பகுதி பாதிப்பு இல்லாமல், படிக்கட்டுகளில் ஏறுவதன் மூலமாக இந்த கார் போதுமான க்ரவுண்ட் க்ளியரன்ஸை பெற்றிருப்பதையும் உணர முடிகிறது. இந்த மூன்றாவது தலைமுறை ஜிம்னி, கடந்த 1998ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

வைரலாகும் வீடியோ... பாலத்தின் படிக்கட்டுகளில் காரை ஏற்றி, இறக்கிய சாகச டிரைவர்... எதற்காக தெரியுமா?

சர்வதேச மார்க்கெட்களில், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக விற்பனையில் இருந்து வருகிறது. இந்திய மார்க்கெட்டை பொறுத்தவரை, சுஸுகி நிறுவனம் இரண்டாவது தலைமுறை ஜிம்னியை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதுதான் ஜிப்ஸி என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டது. ஜிப்ஸி கார் இந்திய மார்க்கெட்டில் எவ்வளவு பிரபலம் என்பது உங்களுக்கே தெரியும்.

வைரலாகும் வீடியோ... பாலத்தின் படிக்கட்டுகளில் காரை ஏற்றி, இறக்கிய சாகச டிரைவர்... எதற்காக தெரியுமா?

குறிப்பாக ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் மத்தியில் ஜிப்ஸி மிகவும் பிரபலம். சிறப்பான ஆஃப் ரோடு திறன்கள் மற்றும் லைட்வெயிட் ஆகிய காரணங்களால், பாதுகாப்பு படைகளின் முதல் சாய்ஸ் ஆக ஜிப்ஸி திகழ்ந்தது. ஆனால் கடுமையான பாதுகாப்பு விதிகள் மற்றும் பிஎஸ்6 விதிகளால், ஜிப்ஸி காரின் உற்பத்தியை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஆண்டு நிறுத்தியது.

வைரலாகும் வீடியோ... பாலத்தின் படிக்கட்டுகளில் காரை ஏற்றி, இறக்கிய சாகச டிரைவர்... எதற்காக தெரியுமா?

ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில், புத்தம் புதிய நான்காம் தலைமுறை ஜிம்னி காரை மாருதி சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக காட்சிப்படுத்தியது. இந்திய மார்க்கெட்டில் வரும் 2021ம் ஆண்டு இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஜிம்னி பாலத்தில் ஏறி, இறங்கிய வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இத்தகைய விபரீத செயல்களில் நீங்கள் ஒரு போதும் ஈடுபட வேண்டாம். ஏனெனில் இது மிகவும் ஆபத்தானது. போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி வாகனங்களை ஓட்டுங்கள். அதுதான் உங்களுக்கும், சாலையில் உங்களுடன் பயணிப்பவர்களுக்கும் பாதுகாப்பை தரும்.

Image Courtesy: South China Morning Post/YouTube

More from DriveSpark

Article Published On: Friday, April 17, 2020, 14:01 [IST]
English summary
China: Man Drives Jimny Up & Down A Pedestrian Bridge. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+