இந்திய எல்லையோரத்தில் 409 கி.மீ நீளமுள்ள புதிய அதிவிரைவு சாலையை திறந்து வைத்த சீனா..!!

Written By:

இந்திய எல்லையோரத்தில் சீனாவிற்கு சொந்தமான பகுதியில் அந்நாடு 409 கிலோ மீட்டர் நீளமுள்ள புதிய அதிவிரைவு சாலையை திறந்துள்ளது.

இந்திய எல்லையோரத்தில் புதிய அதிவிரைவு சாலையை திறந்தது சீனா

திபெத் தலைநகரான லஹாசா மற்றும் நியிங்ச்சி பகுதிகளுக்கு இடையே சீனா இந்த அதிவிரைவு சாலையை கட்டமைத்துள்ளது.

இந்திய மதிப்பில் ரூ.35 ஆயிரம் கோடி செலவில் பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில்,

இந்திய எல்லையோரத்தில் புதிய அதிவிரைவு சாலையை திறந்தது சீனா

சீன அரசு லஹாசா, நியிங்ச்சி பகுதிகளுக்கு இடையிலான இந்த அதிவிரைவு சாலையை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துள்ளது.

இந்திய எல்லையோரத்தில் புதிய அதிவிரைவு சாலையை திறந்தது சீனா

முன்னதாக லஹாசா, நியிங்ச்சி நகரங்களுக்கு சென்று வர 8 மணி நேரங்கள் இருந்த பயண அளவு, தற்போது இந்த அதிவிரைவு சாலை பயன்பாட்டிற்கு வந்த பின்பு 5 மணிநேரமாக குறைந்துள்ளது.

இந்திய எல்லையோரத்தில் புதிய அதிவிரைவு சாலையை திறந்தது சீனா

அதன்படி, இந்த அதிவிரைவு சாலையில் ஒரு மணிநேரத்திற்கு 80 கி.மீ வேகத்தில் செல்லலாம் என்று சீன அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய எல்லையோரத்தில் புதிய அதிவிரைவு சாலையை திறந்தது சீனா

சுங்க கட்டணமில்லாமல் மக்கள் சென்று வரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த அதிவிரைவு சாலையில், கனரக வாகனங்கள் செல்ல சீன அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

இந்திய எல்லையோரத்தில் புதிய அதிவிரைவு சாலையை திறந்தது சீனா

எனினும், சீன தனது ராணுவத் தளவாடங்களை எல்லைப்பகுதிக்கு விரைவாக கொண்டு வரும் நோக்கிலேயே இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இந்திய எல்லையோரத்தில் புதிய அதிவிரைவு சாலையை திறந்தது சீனா

திபெத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அதிவிரைவு சாலையின் கட்டமைப்பு இந்தியாவிற்கு புதிய அழுத்தத்தை தரும்.

அதன்காரணமாக இந்திய அரசு தனது எல்லையோர பகுதிகளில் தனக்கான உள்கட்டமைப்பில் கவனம் செலுத்த நேரிடும் என்று தெரிகிறது.

இந்திய எல்லையோரத்தில் புதிய அதிவிரைவு சாலையை திறந்தது சீனா

கடந்த ஆகஸ்டு 28ல், சிக்கிமில் உள்ள டோக்லஹாம் பீடபூமிக்காக சீனா மற்றும் இந்தியா மேற்கொண்டு வந்த நீண்ட நாள் தாக்குதல்களை சமீபத்தில் இருநாடுகளும் முடிவிற்கு கொண்டு வந்தன.

இந்திய எல்லையோரத்தில் புதிய அதிவிரைவு சாலையை திறந்தது சீனா

தற்போது இந்த அதிவிரைவு சாலை டோக்லஹாம் பீடபூமிக்கு அருகில் தான் அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்திய - சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: China Opens New Express Highway Near Arunachal Pradesh Border. Click for Details...
Story first published: Tuesday, October 3, 2017, 14:09 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark