மணிக்கு 4,000 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் ரயிலை தயாரிக்க சீனா திட்டம்!

ஹைப்பர்லூப் சாதனத்தைவிட பன்மடங்கு கூடுதல் வேகத்தில் பயணிக்கும் புதிய பறக்கும் ரயிலை தயாரிக்க சீனா திட்டமிட்டுள்ளது.

By Saravana Rajan

நம் நாட்டில் ரயில்களின் சராசரி வேகம் 100 கிமீ என்ற அளவை தாண்டுவதே கடினமான விஷயமாகி இருக்கிறது. ராஜ்தானி உள்ளிட்ட சில ரயில்களின் சராசரி வேகத்தை மணிக்கு 125 கிமீ வேகம் என்ற அளவில் உயர்த்துவதற்கான முயற்சிகள் நடந்து வந்தாலும், அவை நடைமுறைக்கு வருவதற்கான கால அளவுகோல் யாருக்கும் தெரியாத புதிராகவே உள்ளது.

இந்த நிலையில், எல்லா விதத்திலும் நம்மவர்கள் முஷ்டியை காட்ட நினைக்கும் சீனா தற்போது அதிவேக ரயில் போக்குவரத்து தொழில்நுட்பத்தில் உலகிற்கே முன்னோடியாக விளங்குகிறது.

மணிக்கு 4,000 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் ரயிலை தயாரிக்க சீனா திட்டம்!

உலகின் மிகப்பெரிய புல்லட் ரயில் கட்டமைப்பை கொண்டிருக்கும் அந்த நாடு, மணிக்கு 450 கிமீ வேகத்தில் செல்லும் மாக்லேவ் எனப்படும் காந்த விசையில் செல்லும் ரயில் தொழில்நுட்பத்திலும் வெற்றிகரமாக இருக்கிறது. இந்த நிலையில், அடுத்ததாக ஹைப்பர்லூப் மற்றும் விமானங்களை விட வேகமாக செல்லும் மின்னல் வேக ரயில்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

மணிக்கு 4,000 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் ரயிலை தயாரிக்க சீனா திட்டம்!

சீன அரசுக்கு சொந்தமான சீன விமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் உலகின் அதிவேக ரயில் தொழில்நுட்பத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதாவது, இந்த ரயிலின் வேகம் யாரும் நினைத்து பார்த்திராத வகையில் இருக்கிறது. ஆம், புதிதாக உருவாக்கப்பட இருக்கும் ரயில் மணிக்கு 4,000 கிமீ வேகத்தில் செல்லும் திறனை பெற்றிருக்குமாம்.

மணிக்கு 4,000 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் ரயிலை தயாரிக்க சீனா திட்டம்!

அதாவது, விமானங்களைவிட 4 மடங்கு கூடுதல் வேகத்தில் செல்லும் திறனை இந்த ரயில்கள் பெற்றிருக்கும். இந்த ரயில்களை ஒருநாள் நிச்சயம் தயாரித்து வெற்றி பெறுவோம் என்று சீன விமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.

மணிக்கு 4,000 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் ரயிலை தயாரிக்க சீனா திட்டம்!

தரையில் பறக்கும் சாதனம் என்று அதனை உருவகித்து கூறி இருக்கிறது சீனா. இந்த நிலையில், சீனா உருவாக்க இருக்கும் புதிய பறக்கும் ரயிலானது, ஹைப்பர்லூப் போக்குவரத்து தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணிக்கு 4,000 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் ரயிலை தயாரிக்க சீனா திட்டம்!

அண்மையில் சோதனை ஓட்டத்திற்காக பயன்படுத்தப்பட்ட மாதிரி ஹைப்பர்லூப் சாதனம் மணிக்கு 324 கிமீ வேகத்தை எட்டி வியக்க வைத்திருக்கிறது. தொடர்ந்து ஹைப்பர்லூப் சாதனத்தின் வேகத்தை படிப்படியாக அதிகரித்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

மணிக்கு 4,000 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் ரயிலை தயாரிக்க சீனா திட்டம்!

இந்த நிலையில், தனது மாக்லேவ் ரயில் தொழில்நுட்பத்தையும், ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தையும் கலந்து கட்டி புதிய பறக்கும் ரயிலை சீனா உருவாக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மணிக்கு 4,000 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் ரயிலை தயாரிக்க சீனா திட்டம்!

அதாவது, காற்று இல்லாத வெற்றிட குழாயில் மாக்லேவ் ரயிலை இயக்குவது சாத்தியம் என்று சீன விமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் கருதுகிறது. முதல்கட்டமாக இந்த பறக்கும் ரயிலை மணிக்கு 1,000 கிமீ வேகத்தில் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது.

மணிக்கு 4,000 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் ரயிலை தயாரிக்க சீனா திட்டம்!

தற்போது சீனாவின் முக்கிய பெருநகரங்களை புல்லட் ரயில்கள் இணைத்து வருகின்றன. இந்த நிலையில், புதிய பறக்கும் ரயிலை வெளிநாடுகளை இணைக்கும் விதத்தில் பயன்படுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளது.

மணிக்கு 4,000 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் ரயிலை தயாரிக்க சீனா திட்டம்!

அதாவது, தற்போது இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு நேரடி சரக்கு ரயில் சேவையை சீனா துவங்கியது. அதே பாணியில், இந்த புதிய பறக்கும் ரயில்களை ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கு இயக்குவதற்கான திட்டம் அந்நாட்டிடம் உள்ளது.

மணிக்கு 4,000 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் ரயிலை தயாரிக்க சீனா திட்டம்!

இந்த நிலையில், இதுபோன்று அதிவேகத்தில் செல்லும் சாதனங்களில் பயணிப்போருக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விண்வெளிக்கு செல்லும் வீரர்கள்தான் இதுபோன்ற அதிவேக சாதனங்களில் செல்வதற்கான பயிற்சிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள், உடைகளுடன் செல்கின்றனர். எனவே, இது சாதாரணமாக செல்லும் பயணிகளுக்கு எந்தளவு சிறப்பானதாக இருக்கும் என்பது தெரியவில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Chinese state-owned China Aerospace Science and Technology Corporation (CASIC) has revealed its plans to one day build a flying train that could reach speeds of up to 4,000kph.
Story first published: Thursday, September 7, 2017, 11:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X