சீனாவின் இந்த பறக்கும் காரை ஓட்ட விமானியும் தேவையில்லை... விமானிக்கான உரிமும் தேவையில்லை..!!

சீனாவின் இந்த பறக்கும் காரை ஓட்ட விமானியும் தேவையில்லை... விமானிக்கான உரிமும் தேவையில்லை..!!

By Azhagar

சீனாவின் குவாங்கிஸோவ் மாகாணத்தை சேர்ந்த புதிய நிறுவனம் ஒன்று, பறக்கும் தொழில்நுட்பத்திலான காரை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாகியுள்ளது.

சீனாவின் செயற்கை நுண்ணறிவு பெற்ற பறக்கும் கார்- விரைவில்..!!

2014ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இ-ஹாங் என்ற நிறுவனம் சீனாவிற்கு ட்ரோன் விமானங்களை கட்டமைப்பத்தில் பிரபலமாக உள்ளது.

சீனாவின் செயற்கை நுண்ணறிவு பெற்ற பறக்கும் கார்- விரைவில்..!!

தற்போது இந்நிறுவனம் தனது தொழில்நுட்பத்தை விரிவுப்படுத்தும் வகையில் பறக்கும் கார் ஒன்றை தயாரித்து வருகிறது. இ-ஹாங் நிறுவனத்தின் பறக்கும் கார் 300 மீட்டர் முதல் 500 மீட்டர் உயரம் வரை பறக்கும் திறன் பெற்றதாக உள்ளது.

சீனாவின் செயற்கை நுண்ணறிவு பெற்ற பறக்கும் கார்- விரைவில்..!!

மேலும் 100 கிலோவிற்கும் எடை குறைவான பயணி உடன், இந்த காரால் 20 முதல் 30 நிமிடங்கள் வரை வானில் பறந்த படியே இருக்க முடியும்.

எட்டு பிரோப்பல்லர்கள், 4 இறக்கைகள் கொண்ட இந்த பறக்கும் கார் முழுவதுமாக ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பத்தில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் செயற்கை நுண்ணறிவு பெற்ற பறக்கும் கார்- விரைவில்..!!

இ-ஹாங் நிறுவனத்தின் துணை நிறுவனரான டேரிக் ஸியோங் பேசும் போது, குறிப்பிட்ட தூரங்களுக்கு இடையில் மட்டுமே இந்த பறக்கும் காரால் போக்குவரத்து சேவையை வழங்கமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

Trending On Drivespark:

சீனாவின் செயற்கை நுண்ணறிவு பெற்ற பறக்கும் கார்- விரைவில்..!!

சமீபத்தில் இ-ஹாங் பறக்கும் காருக்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டத்து. அதில் டேரிக் ஸியோங் உடன் குவாங்கிஸோவ் நகர மேயர் வாங் டாங்வும் பயணம் செய்து பார்த்தார்.

Recommended Video

Switchblade Flying Car From Samson Motorworks - DriveSpark
சீனாவின் செயற்கை நுண்ணறிவு பெற்ற பறக்கும் கார்- விரைவில்..!!

சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து மக்கள் முன்னிலையில் பேசிய இ-ஹாங் துணை நிறுவனர் டேரிக் ஸியோங், விமானத்தில் பறக்க ஆசைப்படும் அனைவருக்கும் ஏற்ற வாகனமாக இந்த பறக்கும் கார் இருக்கும் என்றார்.

சீனாவின் செயற்கை நுண்ணறிவு பெற்ற பறக்கும் கார்- விரைவில்..!!

மேலும் அவர், செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் இயங்கும் இந்த விமானத்தை அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் டேரிக் ஸியோங் தெரிவித்தார்.

சீனாவின் செயற்கை நுண்ணறிவு பெற்ற பறக்கும் கார்- விரைவில்..!!

சீனாவில் மட்டுமின்றி ஈ-ஹாங்கின் பறக்கும் கார் நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் துபாய் போன்ற நாடுகளில் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

சீனாவின் செயற்கை நுண்ணறிவு பெற்ற பறக்கும் கார்- விரைவில்..!!

பலதரப்பட்ட சோதனைகள் மற்றும் கட்டுமான பணிகள் இவற்றுடன் தற்போதைய தொழில்நுட்பங்களுக்கு சவால் விடும் வகையில் ஈ-ஹாங் நிறுவனம் பறக்கும் காரை தயாரித்துள்ளது.

சீனாவின் செயற்கை நுண்ணறிவு பெற்ற பறக்கும் கார்- விரைவில்..!!

அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் தருணத்தில் கிட்டத்தட்ட பறக்கும் காரின் அனைத்து சோதனை செயல்பாடுகளும் வெற்றி தான் என்று ஈ-ஹாங்கின் பொறியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சீனாவின் செயற்கை நுண்ணறிவு பெற்ற பறக்கும் கார்- விரைவில்..!!

சீனாவிற்கு பிற்கு அனேகமாக ஈ-ஹாங் பறக்கும் கார் துபாய் நகரத்தில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சீனாவின் விமானத்துறை மற்றும் துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈ ஹாங்க் ஈடுபட்டுள்ளது.

Trending On Drivespark:

சீனாவின் செயற்கை நுண்ணறிவு பெற்ற பறக்கும் கார்- விரைவில்..!!

இன்றைய உலக வாகன துறையில் தலைப்புச்செய்தியாக மாறியுள்ள சீனா பறக்கும் விமானம் எப்போது வெளிவரும் என்ற தகவலை தெரிவிக்க டேரிக் ஸியோங் மறுத்துவிட்டார்.

சீனாவின் செயற்கை நுண்ணறிவு பெற்ற பறக்கும் கார்- விரைவில்..!!

அதற்கு காரணம் தெரிவித்த அவர், போக்குவரத்து துறையின் அடுத்த மைல்கல்லை எட்டிபிடிக்கும் முதல் நிறுவனமாக தாங்கள் தான் இருக்க வேண்டும் என்று கூறினார்.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: China's Start Up Company Developing the No Pilot Licence Neede Flying Car. Click for Details...
Story first published: Tuesday, January 2, 2018, 13:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X