மண்ணைக் கவ்வியது சீனாவின் பிரம்மாண்ட ‘டிராம் பஸ்’போக்குவரத்து ஐடியா...!!

Written By:

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரம்மாண்ட டிராம் பஸ் போக்குவரத்து ஐடியா தோல்வியில் முடிந்துள்ளது.

மண்ணைக் கவ்விய சீனவின் ‘டிராம் பஸ்’ போக்குவரத்து..!!

போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் நகர்ப்புறங்களுக்காக புதுமையான போக்குவரத்து சாதனங்களை உருவாக்கும் முயற்சிகள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. அந்தவகையில், கடந்த மே மாதம் சீனாவில் ஒரு பிரம்மாண்ட பஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

மண்ணைக் கவ்விய சீனவின் ‘டிராம் பஸ்’ போக்குவரத்து..!!

லேண்ட் ஏர்பஸ் என்று அழைக்கப்படும் இந்த பஸ் மாடலை சீனாவை சேர்ந்த ‘டிரான்ஸ்போர்ட் எக்ஸ்ப்ளோரர் பஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

மண்ணைக் கவ்விய சீனவின் ‘டிராம் பஸ்’ போக்குவரத்து..!!

72 அடி நீளம், 26 அடி அகலம் மற்றும் 16 அடி உயரம் கொண்ட இந்த பஸ்சில் 1,200 பயணிகள் வரை பயணம் செய்யலாம் என கூறப்படுகிறது.

மண்ணைக் கவ்விய சீனவின் ‘டிராம் பஸ்’ போக்குவரத்து..!!

இந்த ‛டிராம் பஸ்'சின் சிறப்பு அம்சமே சாலை போக்குவரத்தை எந்த வகையிலும் இடையூறு செய்யாமல் பயணம் செய்வதே. அதாவது சாலையில் இருபுறங்களிலும் தண்டவாளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் இந்த பஸ்கள் செல்லும்.

மண்ணைக் கவ்விய சீனவின் ‘டிராம் பஸ்’ போக்குவரத்து..!!

அவ்வாறு பஸ்கள் செல்லும் போது பஸ்சின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குகை போன்ற அமைப்பு வழியாக ரோட்டில் செல்லும் வாகனங்கள் எந்த வித இடையூறும் இல்லாமல் தாராளமாக செல்லலாம்.

மண்ணைக் கவ்விய சீனவின் ‘டிராம் பஸ்’ போக்குவரத்து..!!

மேலும் இந்த பஸ் ஆங்காங்கே மேம்பாலம் போன்று அமைக்கப்படும் நிறுத்தங்களின் நிறுத்தி ஆட்களை ஏற்றி இறக்கி செல்லும் வசதியுடையது.

மண்ணைக் கவ்விய சீனவின் ‘டிராம் பஸ்’ போக்குவரத்து..!!

இந்த பஸ்சை மணிக்கு 60 கிமீ வேகத்தில் இயக்க முடியும். தண்டவாள அமைப்பில் பயணிப்பதால், வளைவுகளில் கூட வேகத்தை அதிகமாக குறைக்க வேண்டியிருக்காது.

மண்ணைக் கவ்விய சீனவின் ‘டிராம் பஸ்’ போக்குவரத்து..!!

மாடி பஸ் போன்று இருக்கும் இந்த பஸ்சின் மேல்புறத்திற்கு செல்வதற்கு வசதியாக லிஃப்ட் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

மண்ணைக் கவ்விய சீனவின் ‘டிராம் பஸ்’ போக்குவரத்து..!!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த டிராம் பஸ்-கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சீனாவின் கின்ஹுவாங்டாவ் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் 300 மீட்டர் நீளமுடைய சோதனை ஓட்ட தடத்தில் இந்த டிராம் பஸ் பரிட்சார்த்த முறையில் சோதனை செய்யப்பட்டு வந்தது.

மண்ணைக் கவ்விய சீனவின் ‘டிராம் பஸ்’ போக்குவரத்து..!!

இதன் மூலம் பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக அதிகமாக உயரும் என்று கணிக்கப்பட்டது.

மண்ணைக் கவ்விய சீனவின் ‘டிராம் பஸ்’ போக்குவரத்து..!!

எனினும், சாதுர்யமாக தயாரிக்கப்பட்டிருந்த இந்த டிராம் பஸ் டிசைன் தற்போது தோல்வியில் முடிந்துள்ளது. இந்த டிராம் பஸ் ஐடியாவை கைவிட டிரான்ஸ்போர்ட் எக்ஸ்ப்ளோரர் பஸ் நிறுவனத்தினர் முடிவு செய்துள்ளனர்.

மண்ணைக் கவ்விய சீனவின் ‘டிராம் பஸ்’ போக்குவரத்து..!!

300 அடி தூரம் அமைக்கப்பட்டிருந்த தண்டவாளம் தற்போது பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது. டிராம் பஸ் ஐடியா தோல்வியில் முடிந்துள்ளதற்கு சில காரணங்கள் முன்வைக்கப்படுகிறது.

மண்ணைக் கவ்விய சீனவின் ‘டிராம் பஸ்’ போக்குவரத்து..!!

இந்த டிராம் பஸ்சின் அடிப்பாகத்தில் 6 அடி 11 இஞ்ச் (2.1 மீட்டர்) அளவு உயரமே உள்ளது. இதன் வழியாகத்தான் வாகனங்கள் சென்று வர வேண்டும். இது ஒரு பெரிய குறைபாடாடாகும். ஏனெனில் இதனை விட அதிகமான உயரம் கொண்ட வாகனங்கள் இந்த பஸ்ஸை கடக்க இயலாதது பெரிய பாதகமாக உள்ளது.

மண்ணைக் கவ்விய சீனவின் ‘டிராம் பஸ்’ போக்குவரத்து..!!

தற்போது இந்த டிராம் பஸ் முறை தோல்வியில் முடிந்தாலும், இதன் அடிப்படை டிசைன் சாதகமானதாகவே உள்ளது. இதில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டு எதிர்காலத்தில் வேறு உருவம் பெற்ற புதுவகையான போக்குவரத்து முறை கொண்டுவரப்படும் என்றும் கூறப்படுகிறது.

டிராம் பஸ் போக்குவரத்தின் விளக்க வீடியோவை மேலே உள்ள ஸ்லைடரில் காணவும்...

English summary
Read in Tamil about china's Straddling bus concept fails.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark