Just In
- 11 min ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 1 hr ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
- 12 hrs ago
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- 15 hrs ago
தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!
Don't Miss!
- Finance
சீனாவிடம் யாரும் கடன் வாங்காதீங்க.... எச்சரிக்கை விடும் வங்கதேச அமைச்சர்!
- News
"பஞ்சதந்திரம்".. தூக்கத்தை தொலைத்த எடப்பாடி டீம்.. ஓபிஎஸ்ஸிடம் செல்கிறதா அதிமுக.. அடேங்கப்பா பிளான்
- Technology
பாச மலர்களுக்கு அன்பு பரிசு: Slim ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் வாங்கலாம்!
- Movies
கொடி பறக்குது.. ட்விட்டர் புரொஃபைல் பிக்சரை தேசிய கொடியாக மாற்றினார் ரஜினிகாந்த்!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
சீனா-தைவான் போர் மட்டும் வந்துச்சுன்னா இந்தியாவிற்கு இவ்வளவு நஷ்டமா? இதை எதிர்பார்க்கவே மாட்டீங்க...
சீனா -தைவான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டதால் உலகம் முழுவதும் ஆட்டோமொபைல் துறைகள் பாதிப்பு ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

கடந்த சில ஆண்டுகளாகச் சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் துறைக்கு போதாத காலம் என்றே சொல்லலாம். 2020ம் ஆண்டு கொரோனா பரவல் ஏற்பட்டது. இதனால் உலகமே ஸ்தம்பித்தது. இதனால் மக்கள் வாழ்வில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டது. மக்கள் ஒரு இடம் விட்டு வேறு இடத்திற்கு நகர முடியாது என்ற காரணத்தால் ஆட்டோமொபைல் பயன்பாடும் குறைந்துவிட்டது, விற்பனையும் குறைந்துவிட்டது. இதனால் ஆட்டோமொபைல் துறையில் பெரிய அளவில் தள்ளாட்டம் கண்டது.

அதன்பின் 2020 கொரோனா முதல் அலை, 2021 கொரோனா இரண்டாம் அலை என மிகப்பெரிய அளவில் ஆட்டம் காண்ட பின்பு மெல்ல மெல்ல ஆட்டோமொபைல் துறை மீண்டு வரத்துவங்கியது. இந்தியா முழுவதும் வாகன விற்பனை அதிகரிக்கத் துவங்கியது. மக்கள் மத்தியில் பணப்புழக்கம் மெல்ல மெல்ல அதிகரித்தது. இந்நிலையில் மீண்டும் சர்வதேச ஆட்டோமொபைல் துறைக்கு மிகப்பெரிய இடி காத்திருந்தது.

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. இதனால் உக்ரைன் நாடே உருக்குலைந்து போனது. அப்பொழுது யாரும் எதிர்பார்க்கவில்லை ஆட்டோமொபைல் மற்றும் தொழிற்நுட்ப துறைக்கு இது பெரும் பின்னடைவைத் தரும் என்று, உக்ரைன் போர் துவங்கிய சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் செமி கண்டெக்டர்சிப்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது ஏன் ஏற்படுகிறது எங்குப் பிரச்சனை எனப் பார்த்தால் இதற்குப் பின்னால் உக்ரைன் போர் இருப்பது தெரியவந்தது.

அதாவது செமி கண்டெக்டர் சிப்களை தயாரிக்க நியான் வாயு முக்கியம். இந்த நியான் வாயு இரும்பு தயாரிப்பில் உபரி தயாரிப்பாகக் கிடைக்கும் ஒரு பொருள். உலகில் இரும்பு தயாரிப்பில் உக்ரைன் தான் முதலிடத்திலிருந்தது. இதனால் பெரும்பகுதி நியான் வாயு கிடைக்கவில்லை. இதனால் செமி கண்டெக்டர் சிப் பாதிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் உள்ள தொழிற்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்தது.

இந்தியாவில் பல நிறுவனங்கள் தன் உற்பத்தியைக் குறைத்துக்கொண்டன. புக்கிங்கள் பல குவிந்தும் டெலிவரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. உட்சபட்சமாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் எல்லாம் குறிப்பிட்ட மாதம் ஒரு வாகனத்தைக் கூட தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் இதற்கெல்லாம் மாற்று ஏற்பாடுகளைச் செய்து இப்பொழுது தான் ஆட்டோமொபைல் நிறுவனம் மெல்ல மெல்ல சிப் தட்டுப்பாட்டிலிருந்து மீண்டு வருகிறது.

இந்நிலையில் மீண்டும் ஆட்டோமொபைல் துறையில் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டும் படியான ஒரு செய்தி ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதாவது சீனாவிற்கும் தைவானிற்கும் இடையே போர் முளூம் சூழல் உருவாகியுள்ளது. இது மட்டும் நடந்துவிட்டால் மீண்டும் ஆட்டோமொபைல் மற்றும் தொழிற்நுட்ப துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு விடும். மீண்டும் வாகன தயாரிப்பில் மந்தம் ஏற்படும்.

உலகின் மிக அதிக அளவிலான செமி கண்டெக்டர் சிப் தயாரிப்பு நிறுவனம் தைவானில் தான் இருக்கிறது. இதனால் தைவானைச் சீனா தொடர்ந்து தாக்கினால் உலக அளவில் மீண்டும் சிப் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் ஆட்டோமொபைல் நிறுவனம் மீண்டும் கொரோனாவிற்கு முந்தைய நிலைக்கு வந்துள்ளது. மீண்டும் இது போன்ற பிரச்சனை ஏற்பட்டால் அது ஆட்டோமொபைல் துறைக்குப் பேரிடியாகத் தான் இருக்கும்.

சீனா போர் சூழல் குறித்து தைவான் செமி கண்டெக்டர் கம்யூனிட்டி ஏற்கனவே போர் வந்தால் தங்களால் செயல்பட முடியாது என எச்சரித்துள்ளது. இதனால் இப்பொழுதே ஆட்டோமொபைல் துறையினர் பெரும் கலக்கத்தில் இருக்கின்றனர். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றனர். இந்தியாவில் Fedetation of Automobile Dealers Association ஒரு எச்சரிக்கையை அறிவித்துள்ளது. அதன்படி தைவான் தாக்குதலுக்கு உட்பட்டால் இந்தியா உட்படப் பல நாடுகளில் ஆட்டோமொபைல்துறைகளில் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது. இது குறித்த முழு தகவல்களைக் காணலாம்.