காரின் முன்சக்கரம் மோதியும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்து உலகை ஆச்சர்யப்படுத்திய குழந்தை..!! (வீடியோ)

காரின் முன்சக்கரம் மோதியும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்து உலகை ஆச்சர்யப்படுத்திய குழந்தை..!! (வீடியோ)

தாயை பின்தொடர்ந்து சாலையில் சென்ற 3 வயது குழந்தை காருக்கு அடியில் விழுந்து உயிர் பிழைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தாயை பின்தொடர்ந்த குழந்தை மீது மோதியக்கார்... வீடியோ..!!

சீனாவின் குவான்ஷோ என்ற நகரில் பார்சல் ஒன்றை வாங்குவதற்காக ஒரு குடும்பம் சாலையின் பிளாட்ஃபாரத்தில் காத்திருக்கிறது.

தாயை பின்தொடர்ந்த குழந்தை மீது மோதியக்கார்... வீடியோ..!!

அப்போது ஒரு கார் வர உடனே அந்த பெண் ஓட்டுநரை தேடி காரின் அப்புறத்திற்கு சென்று பார்க்கிறார்.

குடும்பத்தினருடன் அதே பிளாட்ஃபாரமில் நிற்கும் குழந்தை ஒன்று, அந்த பெண்ணை தேடி முன்னே செல்கிறது.

தாயை பின்தொடர்ந்த குழந்தை மீது மோதியக்கார்... வீடியோ..!!

குழந்தை பிளாடஃபாரத்தில் இருந்து இறங்கி சாலைக்கு செல்லும் வரை, வீடியோவில் இருக்கும் எந்த குடும்ப உறுப்பினரும் அதை பார்க்கவில்லை.

பெண்ணிடம் பார்சலை கொடுத்துவிட்டு, கார் தொடர்ந்து அந்த இடத்தில் இருந்து நகர்ந்த பின்பு,அக்குடும்பத்தினர் காருக்கு அடியில் குழந்தை விழுந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.

தாயை பின்தொடர்ந்த குழந்தை மீது மோதியக்கார்... வீடியோ..!!

பதறி ஓடி குழந்தையை மீட்கும் அவர்கள், ஏதும் காயம் ஏற்பட்டு இருக்கிறதா என்று சோதனை செய்வதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.

தாயை பின்தொடர்ந்த குழந்தை மீது மோதியக்கார்... வீடியோ..!!

நெஞ்சை பதறவைக்கும் இந்த காட்சி, தற்போது பல சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கார் ஓட்டுநரின் அலட்சியப்போக்கிற்கு கடும் கண்டனங்களை வலைதள வாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

Recommended Video

Horrifying Footage Of A Cargo Truck Going In Reverse, Without A Driver - DriveSpark
தாயை பின்தொடர்ந்த குழந்தை மீது மோதியக்கார்... வீடியோ..!!

குழந்தை காரின் பம்பர் அருகே வந்ததால், அதை ஓட்டுநர் பார்க்க முடியவில்லை. மேலும் கார் முன்னே இருக்கையில் அப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்சல் வாங்க சென்ற அந்த பெண்ணும் பார்க்க இயலவில்லை.

தாயை பின்தொடர்ந்த குழந்தை மீது மோதியக்கார்... வீடியோ..!!

இந்த சூழ்நிலையில் சாலையை கடக்க குழந்தை காருக்கு அடியில் வர, முன் சக்கரத்தை குழந்தை கடந்த உடன் கார் அங்கியிருந்து புறப்பட்டு விடுகிறது.

முன் இரு சக்கரங்களுக்கு நடுவில் குழந்தை இருந்த காரணத்தினால், ஸ்டார்ட் செய்து நகர்ந்த மெல்லிய வேகத்தில் கார் மோதி குழந்தை சாலையில் விழுந்து விடுகிறது.

தாயை பின்தொடர்ந்த குழந்தை மீது மோதியக்கார்... வீடியோ..!!

நல்லவேளையாக சக்கரங்களின் அடியில் சிக்காத நிலையில் குழந்தை காரின் மத்திய பகுதியில் விழுந்ததால், காரின் டயர்கள் குழந்தையை நெருங்காமல் நூலிழையில் கார் அந்த இடத்தில் இருந்து கடந்துவிடுகிறது.

தாயை பின்தொடர்ந்த குழந்தை மீது மோதியக்கார்... வீடியோ..!!

தொடர்ந்து குழந்தைகளின் நடவடிக்கைகள் மீது கவனம் கொள்ளும் தேவையை சீனாவில் நடைபெற்ற இந்த சம்பவம் உலகளவில் உணர்த்திருக்கிறது.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

More from DriveSpark

Article Published On: Friday, December 22, 2017, 12:54 [IST]
English summary
Read in Tamil: China Three year Old Walks In Front Of a Car Run Over and Makes it Alive. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+