Just In
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 10 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- News
அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஷாங்காய் மாக்லேவை விட விரைவாக செல்லும்... உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்து கெத்து காட்டிய சீனா!
ஷாங்காய் மாக்லேவ் ரயிலை விட விரைவாக செல்லக்கூடிய உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய அதிவேக மாக்லேவ் ரயிலின் மாதிரியை சீனா தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு 620 கிலோ மீட்டர்கள் (385 மைல்கள்) வேகத்தில் பயணிக்கும் திறன் உடையது. 21 மீட்டர் நீளம் (69 அடி) உடைய இந்த மாதிரி ரயில், சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு நகரில் வைத்து, கடந்த ஜனவரி 13ம் தேதி பத்திரிக்கையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

அத்துடன் இந்த ரயில் எப்படி இயங்கும்? என்பதை செய்து காட்டுவதற்காக, 165 மீட்டர்கள் (541 அடி) தண்டவாளத்தையும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கட்டமைத்திருந்தனர். இந்த ரயில் அடுத்த 3-10 ஆண்டுகளுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என பேராசிரியர் ஹூ சுவான் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

இவர் தென்மேற்கு ஜியோடாங் பல்கலைகழகத்தின் துணை தலைவர் ஆவார். இந்த பல்கலைகழகம்தான் புதிய அதிவேக மாக்லேவ் ரயிலின் மாதிரியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டது. இதுகுறித்து Xinhuanet செய்தி வெளியிட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய அதிவேக ரயில் நெட்வொர்க்கை கொண்ட நாடாக சீனா உள்ளது. அங்கு 37,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிவேக ரயில் வெட்வொர்க் இருக்கிறது.

அத்துடன் வணிக ரீதியில் இயக்கப்படும் உலகின் அதிவேக ரயிலான ஷாங்காய் மாக்லேவ் ரயிலும் சீனாவில்தான் பயன்பாட்டில் இருந்து வருகிறது. சீனாவின் முதல் அதிவேக மாக்லேவ் ரயில் கடந்த 2003ம் ஆண்டு தனது சேவையை தொடங்கியது. இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 431 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் திறன் உடையது.

ஷாங்காய் புடோங் விமான நிலையத்தையும், ஷாங்காய் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள லாங்யாங் சாலையையும் இந்த ரயில் இணைக்கிறது. ஆனால் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள மாக்லேவ் மாதிரி ரயில் மணிக்கு 620 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் திறனை பெற்றுள்ளது. எனவே உலகின் அதிவேக ரயில் என்ற பெருமையை இது பெறலாம்.

தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் ஷாங்காய் மாக்லேவ் ரயில், தனது அதிகபட்ச வேகத்தை வெறும் 4 நிமிடங்களில் எட்டி விடும். அதாவது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 431 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை அடைய ஷாங்காய் மாக்லேவ் ரயிலுக்கு வெறும் 4 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். இதுபோன்ற புதிய அதிவேக ரயில்களை அறிமுகம் செய்வதில் சீனா தற்போது மிகவும் தீவிரமாக உள்ளது.

குறிப்பாக 2022ம் ஆண்டு பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக உள்கட்டமைப்பு வசதிகளை இன்னமும் மேம்படுத்துவதில் சீனா மிகவும் ஆர்வமாக பணியாற்றி வருகிறது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் சரியாக ஒரு ஆண்டு கால அவகாசம் மட்டுமே உள்ளதால், சீனா முனைப்புடன் பணியாற்றி வருகிறது.

இதன்படி 2022ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரமான ஜாங்ஜியாகோவில் இருந்து பீஜிங் நகருக்கு புதிய 174 கிலோ மீட்டர் அதிவேக ரயில்வே லைனை சீனா கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இதன் மூலம் இரண்டு நகரங்களுக்கும் இடையேயான பயண நேரம் மூன்று மணி நேரத்தில் இருந்து வெறும் 47 நிமிடங்களாக குறைந்துள்ளது.