உலகின் மிகப்பெரிய 'ஆம்பிபியஸ்' விமானத்தை தயாரித்த சீனா!

By Saravana Rajan

தரையிலும், தண்ணீரிலும் தரையிறக்கும் தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட உலகின் மிகப்பெரிய விமானத்தை சீனா அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 7 ஆண்டுகள் ஆராய்ச்சி மற்றும் கட்டுமானத்திற்கு பின்னர் இந்த விமானத்தின் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த மெகா ஆம்பிபியஸ் விமானம் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

உலகின் மிகப்பெரிய ஆம்பிபியஸ் விமானத்தை தயாரித்த சீனா!

இதுவரை உலகின் தயாரிக்கப்பட்ட ஆம்பிபியஸ் ரக விமானங்களில் மிகப்பெரியதாக கூறப்படுகிறது. சீனாவின் அரசுத் துறை விமான தயாரிப்பு நிறுவனமான ஏவியேஷன் இன்டஸ்ட்ரீ கார்ப்பரேஷன் ஆஃப் சீனா என்ற நிறுவனம்தான் இந்த விமானத்தை தயாரித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய ஆம்பிபியஸ் விமானத்தை தயாரித்த சீனா!

ஏஜி600 என்ற பெயரில் அழைக்கப்படும், இந்த விமானம் 53 டன் எடை கொண்டது. போயிங் 737 ரக விமானத்திற்கு இணையான வடிவத்துடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஆம்பிபியஸ் விமானத்தை தயாரித்த சீனா!

கடல்சார் மீட்புப் மற்றும் இதர பணிகள் மற்றும் காட்டுத் தீயை அணைக்கும் பணிகளை மனதில் கொண்டு இந்த விமானத்தை கட்டமைத்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய ஆம்பிபியஸ் விமானத்தை தயாரித்த சீனா!

காட்டுத் தீயை அணைக்கும் பணிகளின்போது வெறும் 20 வினாடிகளில் 12 டன் கடல் நீரை இந்த விமானத்தில் உள்ள டேங்கில் நிரம்பிவிடுமாம்.

உலகின் மிகப்பெரிய ஆம்பிபியஸ் விமானத்தை தயாரித்த சீனா!

இயற்கை பேரிடர் சமயங்களில் மீட்புப் பணிகளுக்கும் இந்த விமானத்தை பயன்படுத்த முடியுமாம். ஒரே நேரத்தில் 50 பேரை மீட்டுக் கொண்டு வரும் இடவசதி உள்ளது. மிக மோசமான வானிலைகளில் கூட இந்த விமானத்தை தண்ணீரில் நேரடியாக தரை இறக்கி மீட்புப் பணிகளை செய்ய முடியும்.

உலகின் மிகப்பெரிய ஆம்பிபியஸ் விமானத்தை தயாரித்த சீனா!

ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் அதிகபட்சமாக 4,500 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. மணிக்கு 500 கிமீ வேகத்தில் பறக்குமாம்.

உலகின் மிகப்பெரிய ஆம்பிபியஸ் விமானத்தை தயாரித்த சீனா!

இதுவரை 17 விமானங்களுக்கு ஆர்டர்கள் வந்துள்ளதாம். மேலும், தென் சீனக் கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு இந்த விமானத்தை சீன அரசு பயன்படுத்தும் வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

விமான தயாரிப்பு துறையில் இது ஒரு புதிய மைல்கல் என்று சீனாவின் பிரபலமான பத்திரிக்கைகள் புகழாராம் சூட்டியிருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
China unveils world's largest amphibious Plane.
Story first published: Monday, July 25, 2016, 11:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X