ஒரே நேரத்துல ரோட்டுலயும் ஒட்டலாம் நினைச்சா பறந்தும் போகலாம்! உலகின் முதல் பறக்கும் காரின் விலை இவ்வளவு தானா?

உலகம் முழுவதும் பறக்கும் கார்களின் வருகை மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சீனாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று பறக்கும் கார் ஒன்றை தற்போது தயார் செய்து சோதனை செய்து வருகிறது. இது குறித்த ஸ்பை புகைப்படங்கள் எல்லாம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த பறக்கும் காரில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கிறது என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

உலகில் பல்வேறு இடங்களில் பறக்கும் கார் குறித்த தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் ஆய்வு உட்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பறக்கும் கார்கள் என்பது சாத்தியமாகி விட்டாலும் இது கமர்சியல் பயன்பாட்டிற்கு வர இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆகும். இந்நிலையில் சீனாவை சேர்ந்த எக்ஸ்பெங்க் மோட்டார் என்ற நிறுவனம் பறக்கும் கார்களை தயாரித்து உள்ளது.

china Xpeng flying car

இந்நிறுவனம் ஒரே நேரத்தில் சாலையில் இயங்கும் முடியும் அதே நேரம் பறக்கும்படியான விடிஓஎல் எனப்படும் தொழிற்நுட்பத்தில் இயங்கும் பறக்கும் காரை தயாரித்து அதற்கு எக்ஸ்2 என பெயர் வைத்துள்ளது. இந்த காரை ஒரே நேரத்தில் சாலையிலும் ஓட்டலாம். அதே நேரம் பறக்க வேண்டும் என்றாலும் உடனடியாக பறக்க முடியும். இப்படியாக தயார் செய்யப்பட்ட இந்த காரை சீன நிறுவனம் தற்போது சோதனை செய்து வருகிறது.

இந்த காரில் மொத்தம் இரண்டு விதமான பாகங்கள் உள்ளன. முதல் பாகம் முழுமையாக சாலையில் பயணிக்கும் காராக இருக்கிறது. மற்றொரு பக்கம் சாலையிலிருந்து நேரடியாக வானில் பறக்கும் விடிஓஎல் எனப்படும் பறக்கும் கார் தொழில்நுட்பத்தைக் கொண்டதாக இருக்கிறது. தற்போது சாலையிலும் வானில் பறக்கவிட்டும் சோதனை செய்யப்படுகிறது.

china Xpeng flying car

பறக்கும் கார்கள் என்பது பயணத்திற்கும் சுற்றுலாவிற்கும் ஏற்ற வகையில் இருக்கிறது. முக்கியமாக எமர்ஜென்சி காலகட்டத்திலும் அவசர காலகட்டத்திலும் இது மிகப்பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பறக்கும் கார்களை எது எதற்கு பயன்படுத்தலாம் என்ற லிமிட் என்பது நம் கற்பனைக்கு எட்டாதபடி இருக்கிறது.

சீன நிறுவனம் தயாரிக்கும் இந்த பறக்கும் காரில் சாலையில் செல்லும்போது நான்கு முதல் ஐந்து பயணிகள் வரை பயணிக்க முடியும். முக்கியமாக குடும்பத்துடன் ஒருவர் பயணிக்கும் போது இந்த காரை பயன்படுத்தலாம். இந்த கார் ஆஃப் ரோடு அம்சங்களுடன் கூடிய 6 வீல் கொண்ட காராக இருக்கிறது. மேலும் இது அனைத்து வீல்களிலும் டிரைவ் சிஸ்டம் இருக்கிறது.

china Xpeng flying car

ஸ்டியரிங்கை பொருத்தவரை பின்பக்க வீல் ஷேரிங் கண்ட்ரோலில் இந்த கார் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலையில் பயணிக்க முடியாத இடங்களில் இந்த காரில் செல்ல வேண்டும் என்றால் அதற்கு இந்த காரில் உள்ள பறக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும். காரில் உள்ள பறக்கும் மாடுலை அடிக்கடி சார்ஜ் செய்யவும் இந்த லேண்ட் மாடுல் கார் உபயோகமாக இருக்கிறது.

இந்த பறக்கும் கார் பறக்கும் மாடுல் மற்றும் மட்டும் முழுமையாக எலெக்ட்ரிக்கில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது குறைவான உயரத்தில் பறக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரைவ் மோடுகள் உள்ளன. அதனால் தானியங்கியாகவும் இந்த கார் செயல்படும்.

இந்த பறக்கும் மாடுலில் உள்ள ரோட்டார்கள் சுலபமாக மடித்து வைக்கும்படி உள்ளன. இதனால் இது எளிதாக லேண்ட் மாடுல் உள்ளே செட் ஆகும்படி உள்ளது. இந்த பறக்கும் காரில் வீல்கள் எதுவும் கிடையாது. அதற்கு பதிலாக நான்கு கால்கள் இருக்கும் படி டிசைன் செய்யப்பட்டுள்ளது.

காருக்குள்ளே இருக்கும் ஒரு சிறிய ஹெலிகாப்டர் போல இது செயல்படும். இதை பெரிய சைஸ் டுரோன் எனவும் நாம் அழைக்க முடியும். இந்த பறக்கும் மாடுல்களில் மொத்தம் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். பாக்கியுள்ளவர்கள் காரிலேயே தான் இருக்க வேண்டும். 2 பேர் மட்டுமே பறக்க முடியும்.

இதன் சிறிய டிசைன் மற்றும் குறைவான ரேஞ்ச் மட்டுமே பறக்கும் திறன் இருப்பதால் இதில் அதிக நபர்களை ஏற்ற முடியாது. இதில் குறைவான ரேஞ்ச் தான் இருந்தாலும் லேண்ட் மாடுல் மூலம் இதை எளிதாக சார்ஜ் ஏற்ற முடியும் என்பதால் ரீசார்ஜ் குறித்து பெரிதாக கவலைப்பட தேவையில்லை.

இந்த பறக்கும் கார் 2024-ம் ஆண்டில் கடைசி காலாண்டில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டெலிவரி என்பது 2025-ம் ஆண்டு கடைசி காலாண்டில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரை மக்கள் பயன்படுத்த சில ஆண்டுகள் வரை ஆகலாம். இதன் விலை மற்றும் இது தயாரிக்கப்படும் திறன் குறித்த மற்ற விபரங்கள் எல்லாம் உறுதியான பின்பு தான் இதன் விற்பனை குறித்த விபரங்கள் எல்லாம் வெளியாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நமக்கு கிடைத்த தகவலின் படி இந்த கார் ரூபாய் 1.15 கோடி என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பறக்கும் கார்களுக்கான விதிமுறைகள் எந்த நாட்டிலும் இதுவரை சரியாக வரவில்லை என்பதால் இது இதிலும் சிக்கல்கள் இருக்கிறது.

மேலும் இந்த காரை பறக்க வைப்பதற்கான திறன் படைத்த டிரைவர்கள் இதுவரை அதிகமில்லை. மக்களுக்கு இதற்கான தனிப் பயிற்சியும் வழங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதற்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்த சவால்களும் உள்ளன. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 6, 2024, 11:28 [IST]
English summary
China xpeng flying car testing first spy shots
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X