10 மாசம் இருக்குமா!.. சீனாவில் கர்ப்பமான கார்கள்.. காரை அதிகமாக காதலித்தவர்களால் காருக்கு நேர்ந்த கொடுமை!
'எம்மா ஒரு பத்து மாசம் இருக்குமா'.. என கேட்கும் அளவிற்கு வீங்கிய முன் பக்கத்துடன் கார்கள் சில சீனாவில் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இந்த கார்கள்குறித்த படங்கள் இணையத்தில் வெளியாகி மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக, இணையத்தின் ஹாட் டாபிக்காக அந்த படங்கள் தற்போது மாறி இருக்கின்றன. நிறை மாத கர்ப்பிணியின் வயிறு பெரிதாக இருப்பதைப் போல அந்த கார்களின் பான்னெட் தற்போது வீங்கி இருக்கின்றன. இதை அந்நாட்டைச் சேர்ந்த சிலர், 'எங்கள் கார் கர்ப்பமுற்றிருக்கின்றது' என்கிற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதுவே தற்போது சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. அதேவேளையில், கார்களின் இந்த நிலைமைக்கு கார் காதலர்களின் செயலே காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி என்ன கார் காதலர்கள் செய்தார்கள்?, மேலும், கார்களின் இந்த கர்ப்பத்திற்கு என்னதான் காரணம்? என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க பதிவிற்குள் போகலாம்.

சீனாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கடுமையான வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதனால் சீனா பொதுமக்கள் மட்டுமல்ல அந்நாட்டில் உள்ள வாகனங்களும் கடுமையான சேதங்களுக்கு ஆளாகி வருகின்றன. இந்த நிலையிலேயே முன் பக்கம் வீங்கிய நிலையில் இருக்கும் கார்களின் படங்கள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.
கார் காதலர்கள் சிலர் தங்களின் கார்களின் வெளிப்புறத்தின் கவர்ச்சியை பாதுகாக்கும் பொருட்டு அவற்றின் மீது ஒட்டிய பாதுகாப்பு படங்களே (மெட்டீரியல்) இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. சீனாவில் மட்டுமில்லைங்க இந்தியா மற்றும் பிற உலக நாடுகளிலும் வாகனங்களின் பெயிண்ட் மற்றும் புதுப் பொலிவைக் காக்கும் பொருட்டு கார் ஆர்வலர்கள் அதன் மீது பாதுகாப்பு ஃபிலிம்களை ஒட்டி வருகின்றனர்.
இதுவே அதிக வெப்பத்தைத் தாங்க முடியாமல், எண்ணெய் சட்டியில் போட்ட பூரியை போல உப்பி இருக்கின்றன. இதுசார்ந்த படத்தை வெளியிட் சீனர்கள் சிலர் வெளியிட்டு, கார் கர்ப்பமுற்றிருப்பதாக கிண்டலடித்து வருகின்றனர். பூரி போல் உப்பியிருக்கும் இந்த பெயிண்ட் பாதுகாப்பு ஃபிலிம்கள் ஆஃப்டர்கள் மார்க்கெட்டில் இருந்து வாங்கப்பட்டவை என கூறப்படுகின்றது.
இதனால்தான், விலை மலிவாக கிடைக்கிறது என வெளிப்புற சந்தையில் எந்த பொருளை வாங்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது. சீனாவில் உள்ள அமெரிக்க நிருபர் ஜெனிஃபர் ஜெங், என்பவரே இதுகுறித்து பதிவை முதலில் வெளியிட்டவர் ஆவார். அவரின் ஒற்றை பதிவு மட்டும் சுமார் 357.2 ஆயிரம் பார்வைகளைப் பெற்றிருக்கின்றது.

அவர் ஓர் வீடியோவையும் தன்னுடைய பதிவில் வெளியிட்டுள்ளார். வீடியோவில், ஆடி உட்பட பல்வேறு கார் மாடல்கள் வெயில் தாக்கத்தினால் பாதிப்புள்ளாகி இருக்கம் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. பாதுகாப்பிற்காக ஒட்டப்பட்ட படலத்திற்கே இந்த நிலைமையா என்றே இந்த வீடியோ பலரையும் கேள்வி எழுப்பச் செய்திருக்கின்றது.
கார் காதலர்களால் காரின் பெயிண்டைக் காக்கும் பொருட்டும், காரின் புதிய தோற்றத்தை நீண்ட காலத்திற்கு பாதுகாக்கும் பொருட்டும் பல்வேறு பராமரிப்பு வேலைகள் செய்யப்படுகின்றன. அந்தவகையில், கார்களின் மேற்பகுதியை அலங்கரிக்கும் பொருட்டும், அதன் அழகை பல ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் பொருட்டும் செய்யப்படும் ஓர் செயலே பாதுகாப்பு ஷீல்டு எனப்படும் ஸ்டிக்கர் ஒட்டப்படுவது ஆகும்.
சந்தையில், அதன் தரத்தை பொருத்து அதற்கு விலை நிர்ணயிக்கப்படுகின்றது. அதேவேளையில், மிக மிக குறைவான விலையிலும் இந்த கார் பெயிண்ட் பாதுகாப்பு வேலையை ஒரு சிலர் செய்து தருகின்றனர். ஒரு சில ஆயிரங்களை மிச்சப்படுத்த இதுபோன்றோரை நாடிச் செல்வோருக்கான தக்க பாடமாகவே சீன கார்களின் சம்பவம் அமைந்திருக்கின்றது.
மற்றொரு பக்கம் இந்த ஸ்டிக்கருக்கு பதிலாக, ஸ்டிக்கரை ஒட்டப் பயன்படுத்தப்பட்ட பசையே இதற்கு காரணம் குற்றம் சாட்டி வருகின்றார். அதை சரியாக பயன்படுத்தி இருந்தால், இந்த நிலை பாதுகாப்பு கோட்டிங்கிற்கு ஆகியிருக்காது என்றும் அவர்கள் கூறுகின்றார். அதேவேளையில், மற்றொருபக்கம் ஒரு சிலர் இந்த வீங்கிய ஸ்டிக்கருக்குள் ஒளிந்திருக்கும் வாயுகுறித்த கவலையையும், வேதனையைும் தெரிவித்தனர். குறிப்பாக, இதன் வெடிப்பின்போது வெளியேறும் வாயு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துமோ என்றே பலர் அஞ்சுகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடுமையான வெயிலினால் கார் புதுப் பொலிவை இழுத்தல் மற்றும் கார் பெயிண்ட் உறிந்து வருதல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படக் கூடும். இதைத் தடுக்கும் பொருட்டே சந்தையில் காரின் மேற்பகுதியில் பாதுகாப்பு ஃபிலிம்கள் ஒட்டப்படுகின்றன. ஆனால், அவற்றிற்கே இந்த நிலைமை ஏற்பட்டு இருப்பது மிகப் பெரிய அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









