மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் புதிய புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்!

Written By:

மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த புதிய புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய புல்லட் ரயில் குறித்த சிறப்புத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் புதிய புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்!

ஃபக்ஸிங் என்ற பெயரில் இந்த புதிய புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ரயில் சிஆர்400ஏஎஃப் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. முழுக்க முழுக்க சீனாவிலேயே இந்த புதிய தலைமுறை புல்லட் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் புதிய புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்!

அதிகபட்சமாக மணிக்கு 400 கிமீ வேகம் வரை செல்லும். சராசரியாக மணிக்கு 350 கிமீ வேகத்தில் இந்த ரயில் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் புதிய புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்!

சீனத் தலைநகர் பீஜிங் நகரிலிருந்து ஷாங்காய் நகருக்கான வழித்தடத்தில் இந்த புதிய புல்லட் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இரு நகரங்களையும் இந்த புல்லட் ரயில் 5 மணி 45 நிமிடங்களில் இணைக்கிறது.

மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் புதிய புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்!

வழியில் ஜினான், ஷாங்டாங் மற்றும் தியான்ஜின் உள்ளிட்ட 10 முக்கிய நகரங்களில் நின்று செல்கிறது. தற்போது பீஜிங்- ஷாங்காய் இடையிலான வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு 5.5 லட்சம் பயணிகள் செல்கின்றனர். அவர்களுக்கு இந்த புதிய புல்லட் ரயில்கள் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் புதிய புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்!

இந்த புதிய புல்லட் ரயில்கள் வேகத்தில் மட்டுமல்ல, பாதுகாப்பு அம்சங்களிலும் மிகவும் சிறந்தவை. அசாதாரண சூழல்நிலைகளில் தானியங்கி பிரேக் மூலமாக ரயிலை நிறுத்தும் வசதி இருக்கிறது.

மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் புதிய புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்!

மேலும், ரயிலின் இயக்கம், தொழில்நுட்ப பிரச்னைகள் குறித்து எளிதாக கண்காணித்து எச்சரிக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களையும் இந்த புல்லட் ரயில்கள் பெற்றிருக்கின்றன.

மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் புதிய புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்!

ரயில் பயணிக்கும் இடம் மற்றும் அதன் இயக்கம் பற்றிய நிகழ்நேரத் தகவல்களை கட்டுப்பாட்டு அறையிலிருந்து துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.

மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் புதிய புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்!

உலகிலேயே மிகப் பெரிய புல்லட் ரயில் கட்டமைப்பை சீனா பெற்றிருக்கிறது. சீனாவில் 22,000 கிமீ தூரத்திற்கான புல்லட் ரயில் தடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. உலகிலுள்ள புல்லட் ரயில் வழித்தடங்களை ஒப்பிடும்போது, 60 சதவீத அளவிற்கான புல்லட் ரயில் கட்டமைப்பு சீனாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Picture credit: news.cn & chinanews.com

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
China's 'Next Generation' Bullet Train Launched- Details.
Story first published: Tuesday, June 27, 2017, 12:40 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos