மின்சார வாகனங்களுக்கு வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் சாலை!

சூரிய மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட உலகின் முதல் சாலை சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சாலையில் செல்லும் மின்சார கார்கள் வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் வசதியும் விரைவில் அறிமுக

சூரிய ஒளியிலிருந்து மின் உற்பத்தி செய்யும் வகையில், புதுமையான சாலை ஒன்று சீனாவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. மின்சார வாகனங்களுக்கு வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பமும் இந்த சாலையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மின்சார வாகனங்களுக்கு வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் சாலை!

மின்சார வாகனங்களில் நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது. இதனை தவிர்க்க பல்வேறு நுட்பங்கள் சோதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சீனாவில் சூரிய மின்சக்தி சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது.

மின்சார வாகனங்களுக்கு வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் சாலை!

இந்த சாலை மூன்று அடுக்குகளை கொண்டது. மேல் அடுக்கில் ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட கடினமான தகடுகள் பதிக்கப்பட்டு இருக்கின்றன. அதற்கு கீழே சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றும் திறனை பெற்றிருக்கிறது. கீழ் அடுக்கு நீர் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படாத அடுக்காக அமைக்கப்பட்டு இருக்கிறது.

மின்சார வாகனங்களுக்கு வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் சாலை!

ஜினான் ரிங் எக்ஸ்பிரஸ்வே என்ற விரைவு சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது.

மின்சார வாகனங்களுக்கு வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் சாலை!

இந்த சாலையில் 5,874 சதுர மீட்டருக்கு சூரிய மின் உற்பத்தி தகடுகள் பதிக்கப்பட்டு இருக்கின்றன. இதன்மூலமாக, 800 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

Trending On Drivespark Tamil:

மின்சார வாகனங்களுக்கு வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் சாலை!

ஜினான் ரிங் எக்ஸ்பிரஸ் சாலையில் அமைக்கப்பட்டு இருக்கும் தெரு விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவற்றிற்கு இந்த மின்சாரம் பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மின்சார வாகனங்களுக்கு வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் சாலை!

விரைவில் இந்த சாலையில் செல்லும் மின்சார வாகனங்களுக்கு வயர்லெஸ் முறையில் சார்ஜ் ஏற்றும் நுட்பமும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலமாக, வாகனங்கள் இந்த சாலையில் செல்லும்போது பேட்டரி சார்ஜ் செய்த வண்ணம் இருக்கும்.

மின்சார வாகனங்களுக்கு வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் சாலை!

இதனால், பேட்டரி சார்ஜ் செய்வதற்காக நிற்க வேண்டிய நிலை இருக்காது. அத்துடன் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பமும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும்.

Trending On Drivespark Tamil:

மின்சார வாகனங்களுக்கு வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் சாலை!

கிளு டிரான்ஸ்போர்ட்டேஷன் டெவலப்மென்ட் குரூப் என்ற நிறுவனம் இந்த சாலையை பரீட்சார்த்த முறையில் அமைத்துள்ளது. தற்போது இந்த சாலையில் வாகன போக்குவரத்தும் அனுமதிக்கப்படுகிறது.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
China's solar-powered highway that can charge electric cars.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X