ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிளின் சைனீஸ் 'குளோனிங்' மாடல்!!
உலகின் பிரபலமான கார் மாடல்களை கவலைப்படாமல் காப்பியடிப்பதில் சீனாக்காரர்களை விஞ்ச ஆள் கிடையாது. பிஎம்டபிள்யூ, பென்ஸ், லேண்ட்ரோவர் என சீனக்காரர்களின் கைகளில் புகுந்து வெளிவராத கார் மாடல்களே இல்லை எனும் அளவுக்கு நிலைமை இருக்கிறது.
இந்தநிலையில், உலக அளவில் மிகவும் பிரபலமான ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. உலகின் மிகவும் சொகுசான ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிளின் டிசைனை பார்த்து கட்டம் கட்டிய சீன நிறுவனம் ஒன்று, அதே டிசைனில் ஒரு புதிய மாடலை உருவாக்கியிருக்கிறது.

அந்த வல்லவன்
ஜியாங்சூ ஸின்ரி என்ற சீன நிறுவனம் எலக்ட்ரிக் டூ வீலர்களை தயாரிப்பதில் பிரபலமானது. இந்த நிறுவனம்தான் தற்போது ஹோண்டா கோல்டுவிங் டிசைனை கட்டம் கட்டி தூக்கியிருக்கிறது.

வித்தியாசம்
ஹோண்டா கோல்டுவிங் பைக்கிற்கும், சீன நிறுவனம் உருவாக்கியிருக்கும் காப்பிகேட் மாடலுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் எஞ்சின்தான். ஆம், ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இருக்கும் நிலையில், காப்பிகேட் மாடலில் மின் மோட்டார் கொண்ட மாடலாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

வேறு சில வித்தியாசங்கள்
அப்படியே காப்பியடித்தால், ஊர், உலகம் தூற்றும் என்று எண்ணிய ஜியாங்சூ ஸின்ரி நிறுவனம், ஹெட்லைட் உள்ளிட்டவற்றில் சில மாற்றங்களை செய்திருக்கிறது. அதேநேரத்தில், ஒட்டுமொத்த டிசைன், சேடில், ஹேண்டில்பார், விண்ட்ஸ்கிரீன், பெட்டிகள் உள்ளிட்ட அனைத்தும் ஹோண்டா கோல்டுவிங்தான் என்று அடித்து கூற வைக்கிறது.

ஒரிஜினல்
இதுதான் ஒரிஜினல் ஹோண்டா கோல்டுவிங். சொகுசு கார்களே வெட்கப்பட வைக்கும் அளவுக்கு மிகுந்த வசதிகள் நிறைந்த ஓர் சிறந்த மாடல். பிக்பாய் என்று அழைக்கப்படும் இந்த பைக்கில் சேட்டிலைட் நேவிகேஷன், ஆடியோ சிஸ்டம், ஹீட்டடு சீட் என்று வசதிகளின் பட்டியல் பெரும் நீளம் கொண்டது. இந்தியாவிலும் விற்பனையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications