கன்னத்தை தடவியவாறு காரை ஓட்டிச் சென்றவருக்கு ரூ. 500 அபராதம்: போலீஸின் அத்துமீறல்...!

ஓட்டுநர் ஒருவர் காரை ஓட்டிக்கொண்டே கன்னத்தை தடவியதற்காக அபராதம் நோட்டீஸைப் பெற்ற சம்பவம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

டிரைவிங்கின்போது கன்னத்தை தடவியதற்காக ஓட்டுநருக்கு ரூ. 500 அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்: அதிர்ச்சியில் ஓட்டுநர்...!

கார் ஓட்டுநருக்கு ஹெல்மெட் போடவில்லை, பைக்கில் வந்தவர் சீட்பெல்ட் போடவில்லை என இவ்வாறு பல்வேறு விதமான வித்தியாசமான அபராதங்களை நாம் சந்தித்திருப்போம், கேட்டும் இருப்போம். ஆனால், இங்கு முதல் முறையாக கன்னத்தைத் தடவிக்கொண்டே (சொரிந்து) காரை ஓட்டிச் சென்றதற்காக, கார் உரிமையாளர் ஒருவருக்கு அபராத நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

டிரைவிங்கின்போது கன்னத்தை தடவியதற்காக ஓட்டுநருக்கு ரூ. 500 அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்: அதிர்ச்சியில் ஓட்டுநர்...!

இதுகுறித்த செய்தியை பிபிசி ஆங்கில இணையதளம் அண்மையில் வெளியிட்டிருந்தது. அதில், வெளியிட்டிருந்த செய்தியை தற்போது தமிழில் இங்கு காண்போம்.

தெற்கு சீனாவைச் சேர்ந்தவர் ஜிலு லியூ. இவர் கடந்த திங்கள் கிழமை (மே 20) அன்று கிழக்கு ஷன்டோங் பகுதியில் உள்ள ஜினன் பகுதியில் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, அவர் கன்னத்தில் ஏற்பட்ட அரிப்பின் காரணமாக, தடவிக் கொண்டே சொறிந்துள்ளார்.

டிரைவிங்கின்போது கன்னத்தை தடவியதற்காக ஓட்டுநருக்கு ரூ. 500 அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்: அதிர்ச்சியில் ஓட்டுநர்...!

இந்நிலையில், அவர் கடந்து சென்று பாதையில் இருந்த சிசிடிவி கேமிரா, இதுகுறித்த புகைப்படத்தை எடுத்து, லியூ போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி, அபராதத்திற்கான ரசீதை அவரது இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும், அந்த ரசீதில் அவர் கைப்பேசியை பயணத்தின்போது பயன்படுத்தி, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரைவிங்கின்போது கன்னத்தை தடவியதற்காக ஓட்டுநருக்கு ரூ. 500 அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்: அதிர்ச்சியில் ஓட்டுநர்...!

இதனை மறுத்த அவர், தான் தனது கன்னத்தை தடவியதாகவும், போன் பேசவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், இந்த காரணத்தை ஏற்க போக்குவரத்து போலீஸார், அவரிடம் அபராதமாக 50 யுவான்களைச் செலுத்த உத்தரவிட்டுள்ளனர். இது இந்திய மதிப்பில் ரூ. 503 ஆகும்.

டிரைவிங்கின்போது கன்னத்தை தடவியதற்காக ஓட்டுநருக்கு ரூ. 500 அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்: அதிர்ச்சியில் ஓட்டுநர்...!

இதனால், மன உலைச்சல் அடைந்த லியூ, அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படத்தையும், ரசீதையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இதுகுறித்த பல்வேறு உயரதிகாரிகளை அணுகியும் பலனளிக்கவில்லை என மன வேதனையுடன் அதில் தெரிவித்திருந்தார்.

டிரைவிங்கின்போது கன்னத்தை தடவியதற்காக ஓட்டுநருக்கு ரூ. 500 அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்: அதிர்ச்சியில் ஓட்டுநர்...!

இந்த பதிவு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதைத்தொடர்ந்து, பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்தன. இதன்காரணமாக, அந்த அபராதத் தொகையை நகர போக்குவரத்து போலீஸார் ரத்து செய்தனர். இதுகுறித்த தகவலை குளோபல் டைம்ஸ் செய்தித்தாள் வெளியிட்டிருக்கின்றது.

டிரைவிங்கின்போது கன்னத்தை தடவியதற்காக ஓட்டுநருக்கு ரூ. 500 அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்: அதிர்ச்சியில் ஓட்டுநர்...!

மேலும், இதுகுறித்த அந்த நகர போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது,

"சாலைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராக்கள் செயற்கை நுன்னறிவைப் பெற்றி இயங்குகின்றன. இவை, ஓட்டுநர்களின் முறைகேட்டை அவர்களது செயலை வைத்து கண்டுபிடித்து, தானாக புகைப்படங்களை எடுக்கின்றன. அதனடிப்படையில்தான், அவர் கன்னத்தைத் தடவியதை செல்போன் பேசியதாக நினைத்து அபராதச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

டிரைவிங்கின்போது கன்னத்தை தடவியதற்காக ஓட்டுநருக்கு ரூ. 500 அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்: அதிர்ச்சியில் ஓட்டுநர்...!

ஒட்டுமொத்தமாக சீனாவில் தற்போது 170 மில்லியனுக்கும் அதிகமான சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலானவை ஆட்டோ இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் தன்மைக் கொண்டவையாக இருக்கின்றன. மேலும், வருகின்ற 2020ம் ஆண்டிற்குள் 400க்கும் அதிகமான சிசிடிவி கேமிராக்களைப் பொருத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chinese Driver Gets Fine For Scratching His Face. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X