பேரனுக்காக 3 குட்டி லம்போர்கினி கார்களை உருவாக்கிய சீன விவசாயி!!

Written By:

தனது பேரனுக்காக, லம்போர்கினி சூப்பர் கார்களை போன்ற தோற்றம் கொண்ட 3 குட்டி கார்களை சீனாவை சேர்ந்த விவசாயி ஒருவர்  உருவாக்கியுள்ளார். பிள்ளைகளுக்காக விலை உயர்ந்த பைக் மற்றும் கார்களை வாங்கி கொடுக்கும் வழக்கம் இருந்தாலும், இந்தளவு சிரத்தையுடன் தனது பேரனுக்காக அவர் தயாரித்து கொடுத்துள்ள கார்கள் பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

பேரனுக்காக 3 குட்டி லம்போர்கினி கார்களை உருவாக்கிய சீன விவசாயி!!

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஸெங்ஸோ என்ற பகுதியை சேர்ந்தவர் குவோ லியான்கியான். இவர்தான் தனது பேரனுக்காக மூன்று லம்போர்கினி கார்களை சொந்தமாக உருவாக்கி கொடுத்துள்ளார்.

பேரனுக்காக 3 குட்டி லம்போர்கினி கார்களை உருவாக்கிய சீன விவசாயி!!

தற்போது 55வயதாகும் லியான்கியான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே இந்த கார்களை உருவாக்கிவிட்டார். ஆனால், தற்போதுதான் அவரது பேரன் சற்று பெரியவனாக வளர்ந்து அந்த காரை ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கிறான்.

பேரனுக்காக 3 குட்டி லம்போர்கினி கார்களை உருவாக்கிய சீன விவசாயி!!

அந்த கார்களில் விவசாயி தனது பேரனுடன் சாலைகளில் வலம் வந்ததுதான் இப்போது மீண்டும் செய்தியாகி உள்ளது. இதுகுறித்து சீன மீடியாக்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

பேரனுக்காக 3 குட்டி லம்போர்கினி கார்களை உருவாக்கிய சீன விவசாயி!!

இந்த கார்களை பொது பயன்பாட்டு சாலையில் செலுத்துவதற்கான அம்சங்களுயன் லியான்கியான் உருவாக்கி உள்ளார். முன்புறத்திற்கான விண்ட்ஷீல்டு கண்ணாடி, ஹாரன், பிரேக்குகள் என அனைத்து விஷயங்களும் உள்ளன.

பேரனுக்காக 3 குட்டி லம்போர்கினி கார்களை உருவாக்கிய சீன விவசாயி!!

இந்த கார்கள் பேட்டரியில் இயங்கும் மின்சார கார்களாக உருவாக்கப்பட்டுள்ளன. மணிக்கு 40 கிமீ வேகம் வரை செல்லும் என்று லியான்கியான் தெரிவித்துள்ளார்.

பேரனுக்காக 3 குட்டி லம்போர்கினி கார்களை உருவாக்கிய சீன விவசாயி!!

இந்த கார்களில் இருக்கும் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஒருவர் அமர்ந்து செலுத்தக்கூடிய வகையில் வடிவமைத்துள்ளார்.

பேரனுக்காக 3 குட்டி லம்போர்கினி கார்களை உருவாக்கிய சீன விவசாயி!!

தான் உருவாக்கிய காரில் பேரன் ஓட்டத் துவங்கியிருப்பது அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், அந்த கார்களை உருவாக்கியதற்கான அர்த்தத்தையும் பெற்றுவிட்ட மகிழ்ச்சியில் உள்ளார் லியான்கியான்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Chinese farmer builds miniature Lamborghini for grandson.
Story first published: Wednesday, February 22, 2017, 22:26 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark