ஹைவேயில் நைட்ல பயம் இல்லாம போகலாம்!! ஒரு கவர்மெண்ட் இதுக்கு மேல வேறு என்ன செய்யும்?

சீனாவில் வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதற விடாமல் தடுக்க புதிய யுக்தியை கையாண்டு உள்ளனர். இது தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம். அத்துடன், எந்த மாதிரியான யுக்தி இது என்பதையும், இந்த முறை எந்த அளவிற்கு சரிப்பட்டு வரும் என்பதையும் இனி பார்க்கலாம்.

கார் தான் இயங்குகிறது என்றாலும், நீண்ட தொலைவு பயணங்கள் எப்போதும் சோர்வை தருபவை. நீண்ட நேரத்திற்கு உழைப்பது கூட முயற்சி செய்தால் முடியும், ஆனால் நீண்ட நேரத்திற்கு ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பது கடினம். முக்கிய பிரச்சனை என்னவென்றால், உடல் எந்த வேலையையும் செய்யாமல் இருந்தால், தானாக தூக்கம் வந்துவிடும்.

chinese highway with laser lights

அதுவும் இரவு நேரங்களில் லாங் டிரைவிங் செய்கிறீர்கள் என்றால், சொல்லவே வேண்டாம் தூக்கம் சொக்கும். கார் 100கிமீ வேகத்தில் சென்றாலும், காருக்குள் நீங்கள் செய்ய வேண்டியது என்னவோ ரோபோட் போல கியர்களை மாற்றுவதும், ஸ்டேரிங் சக்கரத்தை திருப்புவதும் தான். நெடுஞ்சாலை பயணங்களில் கியர்களை அவ்வப்போது மாற்ற வேண்டிய தேவை கூட பெரியதாக ஏற்படாது.

இந்த சவுகரியமான பயணமே சில நேரங்களில் ஆபத்திலும் கொண்டுப் போய் சேர்த்து விடுகிறது. இதனை தவிர்ப்பது எவ்வாறு என நம் இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் சிந்தித்துவரும் நிலையில், சீனா ஓர் புதுமையான யுக்தியை இந்த விஷயத்தில் கையில் எடுத்துள்ளது. அதுதான் லேசர் லைட் அடிப்பது ஆகும்.

chinese highway with laser lights

வழக்கமான விளக்குகளை விட லேசர் லைட்கள் நீண்ட தொலைவிற்கு செல்லக்கூடியவை என்பதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி, வாகன ஓட்டிகள் தூங்குவதை தடுக்க ஓர் வழியை சீன அரசு கண்டறிந்துள்ளது. அதாவது, வாகன ஓட்டிகள் கவனமாக செயல்பட வேண்டிய பகுதிகளில் ஓர் வளைவை உருவாக்கி, அதில் லேசர் விளக்குகள் கட்டி, எதிரே வரும் வாகனங்களுக்கு முன்பாக பாய்ச்சுவதுதான் இந்த யுக்தி.

ஒரே நிறத்திலான ஒளியாக இல்லாமல், கண்ணை பறிக்கக்கூடிய பல்வேறு வண்ண நிறங்களில் லேசர் விளக்குகள் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் முன் வீசப்படுகின்றன. இதன் மூலமாக, ஓட்டுனரின் கவனத்தை பெற்று, அவரை ஓய்வு நிலையில் இருந்து எழுப்பி, கூடுதல் கவனத்துடன் வாகனத்தை ஓட்ட வைப்பதுதான் இந்த முயற்சியின் நோக்கம் ஆகும்.

chinese highway with laser lights

படங்களில் காணப்படும் இந்த குறிப்பிட்ட நெடுஞ்சாலை சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கின்ங்டோ- யின்சுஹான் விரைவுச்சாலை ஆகும். இந்த விரைவுச்சாலை ஆனது சீனாவின் பரபரப்பான கிழக்கு நகரங்களில் இருந்து சற்று வெளியே உள்ளது. அத்துடன், இந்த நெடுஞ்சாலை அமைந்திருப்பது ஓர் பாலைவன பகுதியாகும்.

இதனால், சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் விளக்குகளை தவிர்த்து, சாலைக்கு வெளியே பெரியதாக எந்த வெளிச்சமும் இருக்காது. இதனால், ஓட்டுனர்கள் விரைவாக அசதியாகி தூங்கிவிடுவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் இந்த முயற்சியை சீனா கையில் எடுத்துள்ளது. இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள 17-நிமிட வீடியோவில் நெடுஞ்சாலையின் ஓர் குறிப்பிட்ட தொலைவிற்கு மட்டுமே லேசர் லைட் வெளிச்சம் கொடுக்கப்பட்டு இருப்பதை காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த லேசர் விளக்குகள் ஓட்டுனர் கவனத்தை உறக்கத்தில் இருந்து மீட்டெடுப்பது மட்டுமின்றி, ஓட்டுனர்களுக்கு வீடியோ கேமில் வாகனம் ஓட்டுவது போன்ற உணர்வை தருகிறது. இந்த லேசர் விளக்குகளை நெடுஞ்சாலை முழுவதும் வழங்குவது செலவு ரீதியாக முடியாத காரியம். குறைந்தப்பட்சம், வளைவுகளில் திரும்பும் பகுதிகளிலாவது நம் இந்திய நெடுஞ்சாலைகளில் இவ்வாறான லேசர் விளக்குகளை கொடுத்தால் நன்றாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, November 13, 2023, 23:59 [IST]
English summary
Chinese highway with laser lights check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X