பேரனுக்கான 'குட்டி' லம்போர்கினி காரை உருவாக்கி அசத்திய சீனர்!
தனது பேரனை பள்ளிக்கூடம் அழைத்துச் செல்வதற்காக குட்டி கார் ஒன்றை உருவாக்கி அசத்தியிருக்கிறார் சீனாவை சேர்ந்த ஓல்டு குவோ என்ற விவசாயி. மொபட்டில் அழைத்துச் செல்லும்போது பாதுகாப்பு இருக்காது என்று கருதி தனது பேரனை பத்திரமாக கூட்டிச் செல்வதற்கார இந்த காரை சொந்தமாக வடிவமைத்துள்ளார்.
அந்த காரை லம்போர்கினி சூப்பர் கார் டிசைனில் வடிவமைத்து தனது வடிவமைப்பு திறனுக்கு வலு சேர்த்துள்ளார். அந்த காரில் இருக்கும் சிறப்பம்சங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.

எலக்ட்ரிக் கார்
2 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் கொண்ட இந்த குட்டிக் கார் பேட்டரியில் இயங்குகிறது. 5 பேட்டரிகளை கொண்டிருக்கும் இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்யும்போது 60 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும்.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி
ஸ்டெயின்லெஸ் பாடி கொண்ட இந்த காரை தனது ஒர்க்ஷாப்பிலேயே ஒருங்கிணைத்துள்ளார். ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை வெட்டி, ஒட்டும் வேலைகளை தனது ஒர்க்ஷாப்பிலேயே செய்துள்ளார்.

விலை மதிப்பு
815 டாலர் மதிப்பில் இந்த குட்டி எலக்ட்ரிக் காரை தயாரித்துள்ளார். இதற்கு 6 மாதங்கள் பிடித்ததாகவும் கூறியிருக்கிறார்.

லம்போ ஸ்டைல்
இந்த கார் லம்போர்கினி காரின் டிசைன் அம்சங்களை கொண்டுள்ளது. இதன் கதவுகள் கூட லம்போர்கினி கார்களில் இருப்பது போன்ற சிசர் டிசைன் கொண்டதாகவே இருக்கிறது.

அம்சங்கள்
ஸ்டீயரிங் வீலில் முன்புறம் மற்றும் பின்புறம் இயக்குவதற்கான பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்டீரியோ சிஸ்டம் ஒன்றையும் பொருத்தியுள்ளார். மேலும், லம்போர்கினி லோகோவையும் ஆன்லைனில் வாங்கி ஸ்டீயரிங் வீலில் பொருத்தி அழகு பார்த்துள்ளார்.

கன்வெர்ட்டிபிள்
இந்த காரில் பவர் விண்டோஸ் வசதி இருக்கிறது. மேலும், மழை வந்தால் தானாகவே மூடிக்கொள்ளும் கூரையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, இது ஒரு பர்ஃபெக்ட் காராகவே வடிவமைத்துள்ளார்.

சாலையில் இயக்கலாமா?
இந்த காரில் அவர் பெருமிதத்துடன் வலம் வருகிறார். இந்த காரை முக்கிய சாலைகளில் ஓட்டிச் செல்ல அனுமதி இல்லை.


Click it and Unblock the Notifications








