போட்ட காசு வீண் போகல! வாடகைக்கு காரை ஓட்டி ஒரே நாளில் ரூ. 59 ஆயிரத்தை சம்பாதித்த கால் டாக்சி டிரைவர்..

கால் டாக்சி ஓட்டுநர் ஒருவர் வாடகைக்கு காரை ஓட்டிய முதல் நாளிலேயே ரூ. 59 ஆயிரத்தைச் சம்பாதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை அந்த வாகன ஓட்டுநரே உறுதிப்படுத்தி இருக்கின்றார். மேலும், இந்த சம்பவம் இந்தியாவில் நடைபெற்றது அல்ல என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. சீனாவிலேயே அது அரங்கேறி இருக்கின்றது. வடக்கு சீனாவின் ஹெனன் பகுதியைச் சேர்ந்தவர் யுன். 30 வயதுமிக்க இவர் சீனாவில் கால் டாக்சி ஓட்டி வருகின்றார்.

உலக நாடுகளைப் போலவே அங்கும் கால் டாக்சி பிரிவிற்கு நல்ல டிமாண்ட் உள்ளது. இதை வெளிக்காட்டும் விதமாகவே தற்போது வெளியாகி இருக்கும் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. வழக்கமான கார்களைக் காட்டிலும் அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்த வாகனத்திற்கே சீன கால் டாக்சி பிரிவில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Chinese man drives maybach for luxury taxi service

இதைக் கருத்தில் கொண்டே யுன் என்கிற அந்த நபர் 2.10 லட்சம் அமெரிக் டாலர் செலவில் சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். இந்திய மதிப்பில் ரூ. 1.8 கோடி ஆகும். இந்த அளவு பெரும் தொகையை கொடுத்தே அவர் அந்த ஆடம்பர காரை வாங்கி இருக்கின்றார்.

அவர் வாங்கியிருப்பது மெர்சிடிஸ் மேபேக் (Mercedes Maybach) ஆடம்பர கார் ஆகும். இதையே வாடகை காராக சீனாவின் முக்கிய நகரங்களில் ஓட்டி வந்திருக்கின்றார். இந்த காரைக் கொண்டு அவர் செய்த முதல் சவாரியிலேயே 700 அமெரிக்க டாலர்கள் சம்பாதித்து இருக்கின்றார். அதவாது, இந்திய ரூபாய் மதிப்பில் அவர் 59 ஆயிரத்தை சம்பாதித்து இருக்கின்றார்.

Chinese man drives maybach for taxi service

குறிப்பு: படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை. சமீபத்திலேயே இந்த தகவலை அவர் வெளியுலகிற்கு கூறியிருக்கின்றார். இந்த நபர் சமூக வலைதள பக்கத்திலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அந்தவகையில், 'Old Yuan Drives a Maybach for Ride-Hailing' எனும் பெயரிலேயே அவர் சமூக வலைதள பக்கங்களை இயக்கி வருகின்றார். இந்த சேனல் வாயிலாக தன்னுடைய ஆச்சரியமளிக்கும் சம்பாத்தியம் பற்றிய தகவலை அவர் பகிர்ந்திருக்கின்றார்.

இந்த தகவலை சீன ஊடகங்கள் சிலவும் உறுதிப்படுத்தி இருக்கின்றன. மேலும், அவர் இதுபோன்று அதிக தொகையை சவாரி வாயிலாக சம்பாதிப்பது முதல் முறையல்ல என்பதையும் கூறியுள்ளார். இதற்கு முன்னதாகவும் அவர் இதுபோன்று பெருந்தொகையை சம்பாதித்திருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், அவர் இப்போதுதான் முதல் முறை லக்சூரி காரை வாடகை வாகனமாக என்றும் நினைத்துக் கொள்ள வேண்டாம்.

அவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்தே ஆடம்பர கார்களைக் கொண்டு வாடகை வாகன சேவையைச் செய்து வருகின்றார். இந்த நிலையிலேயே சென்ற ஆண்டின் இறுதியில் மெர்சிடிஸ் மேபேக் காரை அவர் வாங்கி இருக்கின்றார். இந்த காரை முதல் நாள் ஓட்டியபோதே அவர் ஒரே நாளில், குறிப்பாக, ஒரே சவாரியில் 59 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து இருக்கின்றார்.

ஒரு நாள் முழுக்க அந்த காரை வாடகைக்கு எடுத்த பயணியே இந்த அளவு அதிக வாடகையை அக்காருக்கு வழங்கி இருக்கின்றார். இந்த ஆடம்பர காரை வாங்க தன்னுடைய ஆறு ஆண்டு கால சேமிப்பை அவர் செலவழித்திருக்கின்றார். குறிப்பாக, இதுபோன்று வாடகை வாகனங்களை ஓட்டிச் சம்பாதித்ததில் கிடைத்த ரூ. 58 லட்சம் மற்றும் பிற சேமிப்பான 21 லட்சத்தை முன் தொகையாக கொடுத்தே மேபேக் ஆடம்பர காரை வாங்கியிருக்கின்றார். இதற்கு மாதம் ரூ. 1.7 லட்சம் வரை அவர் தவணை கட்டி வருகின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 30 வயதுமிக்க யுன் இந்த அளவிற்கு மாபெரும் தொகையை மேபேக் காருக்காக செலவு செய்திருப்பது வீண் போகவில்லை. இதன் வாயிலாக பெரும் தொகையை சம்பாதித்து வருகின்றார் என்பது அவருக்கு மட்டுமல்ல அவரை போல வாடகை வாகன சேவையில் ஈடுபட்டு வரும் பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

Source: South China Morning Post

More from DriveSpark

Article Published On: Saturday, April 26, 2025, 5:00 [IST]
English summary
Chinese man earns rs 59000 single trip with rs 1 8 crore mercedes maybach for ride hailing
மேலும்... #luxury car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+