ரூ3.2 கோடி மதிப்பிலான காரை 44வது மாடிக்கு தூக்கி சென்ற தொழிலதிபர்! எதுக்கு இப்படி பண்ணாரு?
சீனாவில் பெரும் பணக்காரர் ஒருவர் தனது ரூ3.2 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரை அவர் வாழ்ந்து வரும் 44ஆவது மாடிக்கு கிரேன் மூலம் ஏற்றியுள்ளார். இவ்வளவு அதிக விலை மதிப்பு கொண்ட காரை இவர் இப்படியாக கிரேன் மூலம் வீட்டின் பால்கனிக்கு ஏற்ற காரணம் என்ன? விரிவாக காணலாம் வாருங்கள்.
சீனாவை சேர்ந்த பெரும் தொழிலதிபர் ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட் காரை சொந்தமாக வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ3.2 கோடியாகும். இவர் தனது குடும்பத்துடன் சீனாவில் உள்ள உயரமான ஒரு பில்டிங்கில் 44-வது மாடியில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு தனக்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் காரை பார்க்கிங்கில் நிறுத்துவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் தனது காரை தனது 44 வது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் பால்கனிலேயே நிறுத்தி விட முடிவு செய்தார். ஆனால் இவ்வளவு விலைமதிப்பு கொண்ட காரை 44 வது மாடி வரை தூக்கிச் செல்வது என்பது கடினமான விஷயம். இதை எளிதாக செய்து முடிக்க அவர் ஒரு இன்ஜினியரிங் நிறுவனத்தை அணுகினார்.
அவர்கள் முதலில் 44வது மாடியில் இந்த காரை நிறுத்த ஒரு கூண்டு போன்ற ஒன்றை இரும்பில் தயார் செய்து அதை இரும்பு கயர்கள் கொண்டு இணைத்து தரை வரை கொண்டு சென்றனர். அங்கு இவரது அதிக விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை அந்த கூண்டிற்குள் ஏற்றி அதை கிரேன் மூலம் 44வது மாடி வரை எடுத்துச் சென்றனர்.

தற்போது அந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் அவரது 44வது மாடியில் உள்ள வீட்டின் பால்கனியில் நிறுத்தப்பட்டுள்ளது. உரிமையாளர் விருப்பப்படும் வரை அந்த கார் அங்கேயே எந்த பிரச்சினையும் இல்லாமல் நிற்கும் படி செட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர் இந்த காரை மீண்டும் ரோட்டில் ஓட்ட வேண்டும் என்றால் இந்த காரை மேலிருந்து கீழே கொண்டு வர வேண்டும்.
அப்படி கீழே கொண்டு வருவதற்கு புதிதாக ஒரு கூண்டு தயார் செய்து அதை மீண்டும் கிரேன் முலம் கீழே இறக்க வேண்டும். இதற்கு சில ஆயிரம் ஆயிரம் டாலர்கள் வரை செலவாகிவிடும். இந்த செலவுக்கான பணத்தை ஒப்பிடும் போது அதற்கு அவர் புதிதாக ஒரு காரையே வாங்கலாம் அந்த அளவிற்கு இவர் இந்த காரை தனது பால்கனியில் பார்க்கிங் செய்வதற்காக மட்டுமே செலவு செய்துள்ளார்.
இப்படியாக பெரும் பணக்காரர்கள் தங்கள் வீட்டு பால்கனியில் தங்கள் காஸ்ட்லியான காரை பார்க் செய்வது என்பது ஒன்றும் புதிதல்ல இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவிலும் மெக்லாரன் செனா ஜிடிஆர் என்ற காரை அதன் உரிமையாளர் 57 வது மாடியில் உள்ள பால்கனியில் பார்க்கிங் செய்துள்ளார்.
இந்த காரின் விலை 39 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது, இப்படியாக அதிக விலையை கொடுத்து காரை வாங்கி அதை உயரமான கட்டிடத்தில் உயரமான இடத்தில் பால்கனியில் நிறுத்தி என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் இருந்துள்ளது.
இவ்வாறான செயல்கள் எல்லாம் கவனத்தை ஈர்ப்பதற்காகவே செய்யப்படுவதாக பலர் கருதுகின்றனர் இதனால் எந்த பயனும் இல்லை என்றும் கூறுகின்றனர். சிலர் பார்க்கிங் பிரச்சினை சமாளிக்கவே இப்படியான விஷயங்களை செய்கிறார்கள் என்றும் என்னதான் கோடீஸ்வரர்களாக இருந்தாலும் பார்க்கிங்கில் பெரும் பிரச்சனைகளை அவர்கள் சந்தித்து வருவதால் இதை செய்து வருவதாக தெரிவித்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதும் பார்க்கிங்கிற்கு மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. என்னதான் பெருங்கோடீஸ்வரர்களாக இருந்தாலும் அவர்கள் சொந்தமாக காருக்கு பார்க்கிங் செய்யும் இடத்தை பெறுவதில் பெரும் சிக்கல்களை செலுத்தி வருகின்றனர். நீங்கள் சொந்தமாக கார் வாங்கும் போது அதை நிறுத்த போதுமான பார்க்கிங் வசதி உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்பு வாங்குங்கள்.


Click it and Unblock the Notifications








