ரிப்பேரை சரிசெய்யாத கோபத்தில் நடுரோட்டில் மஸராட்டி காரை உடைத்த சீனர்!
கிங்டாவோ: ரிப்பேரை சரிசெய்யமுடியாத கோபத்தில், கோடிக்கணக்கான மதிப்புடைய மஸராட்டி ஆடம்பர காரை சீனாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் கூலிக்கு ஆள் அமர்த்தி நடுரோட்டில் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கிங்டாவோ நகரை சேர்ந்த கோடீஸ்வரர் வாங். கடந்த 2011ம் ஆண்டு இவர் ஆசை ஆசையாய் மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே ஆடம்பர காரை ரூ.3 கோடி கொடுத்து வாங்கினார். சூப்பர் கார் வாங்கியதும் கிங்டாய் நகரத்தை ஒரு ரவுண்டு வந்து சந்தோஷத்தில் திளைத்தார். ஆனால், அந்த சந்தோஷம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.ஏன்...? ஸ்லைடருக்கு வாருங்கள்.

ஜோலி கொடுத்த மஸராட்டி
வாங்கிய ஒரு சில மாதங்களில் வாங்கின் மஸராட்டி காரின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு ஆங்காங்கே நின்று கொண்டது. புதிதாக வாங்கிய காரின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதால், வருத்தமடைந்த அவர் கார் வாங்கிய டீலரிடமே எடுத்து சென்றார். சர்வீஸ் சென்டரில் ரிப்பேர் செய்து வீட்டுக்கு எடுத்து வந்ததும், மீண்டும் கார் 'ஜோலி' கொடுக்க ஆரம்பித்தது.

வெந்த புண்ணில் ஆசிட்
கார் ரிப்பேர் ஆவதும், அதை டீலருக்கு எடுத்து சென்று சர்வீஸ் செய்வதுமே பொழப்பாகி போனதால், வெறுத்துபோனார் அந்த கோடீஸ்வரர். என்னதான் கோடீஸ்வரராக இருந்தாலும், கையிலும், பையிலும் பணம் கொட்டி நிரம்பி வழிந்தாலும், அவரும் சாதாரண மனிதர்தானே. வெந்த புண்ணில், 'ஆசிட்' ஊற்றுவது போல, மெக்கானிக்குகளும் தங்கள் பங்குக்கு காரை சேதப்படுத்தினர்.

கூலிப்படை அமைத்த வாங்
ஆத்திரமடைந்த அவர் டீலருக்கும், கார் நிறுவனத்துக்கும் பாடம் புகட்டும் வகையில், கிங்டாவோ நகரில் நடந்த ஆட்டோ ஷோ ஒன்றின் அரங்கத்தின் முன்பாக தனது காரை கொண்டு வந்து நிறுத்தினார். மேலும், 4 கூலி ஆட்களை பிடித்து வந்து அந்த காரை பெரும் பெரும் சுத்திகளை கொண்டு அடித்து உடைத்து தனது கோபத்தை தீர்த்துக் கொண்டார்.

முந்தைய சம்பவம்
கடந்த 2011ல் இதே பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் லம்போர்கினி கல்லார்டோ சூப்பர் காரை கூலிக்கு ஆள் வைத்து உடைத்த சம்பவம் நினைவிருக்கலாம்.

ஆத்திரம்
லம்போர்கினி தலைமையகம் வரை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் அவர் இவ்வாறு செய்தார்.

அதேபாணியில் கார் உடைப்பு
இதன்மூலம், டீலருக்கும், மஸராட்டிக்கும் தனது எதிர்ப்பை தெரிவிக்கவே இவ்வாறு செய்ததாக வாங் கூறியிருக்கிறார். ஆனால், இது அவரது பட்டப்பெயராம். உண்மையான பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications








