புகாட்டி காரை காப்பியடிக்க தெரியாமல் காப்பியடித்து காமெடி செய்த சீனர்கள்

காப்பியடித்து ஒரு பொருளை போலவே டுப்ளிகேட் பொருளை உருவாக்கும் சீனர்கள் தற்போது புகாட்டி காரை காப்பியடிக்கிறேன் என்ற பெயரில் காமெடியாக கார் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அந்த சம்பவம் குறித்த செய்தியை கீழ

காப்பியடித்து ஒரு பொருளை போலவே டுப்ளிகேட் பொருளை உருவாக்கும் சீனர்கள் தற்போது புகாட்டி காரை காப்பியடிக்கிறேன் என்ற பெயரில் காமெடியாக கார் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அந்த சம்பவம் குறித்த செய்தியை கீழே படியுங்கள்.

புகாட்டி காரை காப்பியடிக்க தெரியாமல் காப்பியடித்து காமெடி செய்த சீனர்கள்

உலகின் அதிவேக மற்றும் தலைசிறந்த கார்களின் ஒன்றாக கருதப்படுவது தான் புகாட்டி சிரோன் கார். உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் இந்த கார் மீது பெரும் மோகம் உள்ளது. இதை விட விலை உயர்ந்த கார்கள் சில இருந்தாலும் இந்த கார்கள் விலை உயர்ந்த கார்களில் லேட்டஸ்ட் கார்.

புகாட்டி காரை காப்பியடிக்க தெரியாமல் காப்பியடித்து காமெடி செய்த சீனர்கள்

புகாட்டி சிரோன் கார் மீது மோகம் கொண்ட பலர் இந்த காருக்காக எவ்வளவு கோடி பணம் வேண்டும் என்றாலும் செலவு செய்ய தயாராக உள்ளனர். இந்த காரை வாங்கிய பலர் இந்த காருக்கான நம்பர் பிளேட்டை வாங்கவே லட்சங்களிலும் கோடிகளிலும் செலவு செய்து வருகின்றனர்.

புகாட்டி காரை காப்பியடிக்க தெரியாமல் காப்பியடித்து காமெடி செய்த சீனர்கள்

இந்த காரின் டிசைன் மீது அந்நிறுவனம் காப்புரிமையும் பெற்றுள்ளது. இந்நிலையில் உலகில் உள்ள எல்லா பொருட்களையும் காப்பியடித்து டுப்ளிகேட் வடிவமைக்கும் சீனர்கள் இந்த கார் போன்ற ஒரு காரையும் காப்பியடிக்கிறேன் என்ற பெயரில் காமெடி செய்து வைத்துள்ளனர்.

புகாட்டி காரை காப்பியடிக்க தெரியாமல் காப்பியடித்து காமெடி செய்த சீனர்கள்

ஒரிஜினல் புகாட்டி சிரோன் கார் 16 சிலிண்டருடன் 4 டர்போ சார்ஜ் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அது 1500 எச்பி திறனை வெளிப்படுத்தும். இந்த காரின் பிக்கப் சுமார் 42 நொடிகளில் 0-400 கி.மீ., வேகத்திற்கு பிக்கப் செய்யும்.

புகாட்டி காரை காப்பியடிக்க தெரியாமல் காப்பியடித்து காமெடி செய்த சீனர்கள்

ஆனால் சீனர்கள் தயாரித்துள்ள இந்த கார் குறைந்த வேகம் கொண்ட ஒரு எலெக்ரிக் கார். இதில் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 3.35 குதிரை திறனை வெளிப்படுத்தக்கூடியது. மேலும் இந்த காரை தயாரித்த நிறுவனம் இந்த காரின் அதிகபட்ச வேகமாக 50 கி.மீ. வேகத்திற்கு செல்லும் படி விடிவமைத்துள்ளனர்.

புகாட்டி காரை காப்பியடிக்க தெரியாமல் காப்பியடித்து காமெடி செய்த சீனர்கள்

இந்த காரை விடிவமைத்தவர் கூறியதாவது. சீனாவில் உள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இந்த கார் இயங்குவதால் இதை 50 கி.மீ., வேகத்திற்கு மட்டுமே செல்லும் படி தடுத்துள்ளோம். ஆனால் இதன் இன்ஜின் இதை 65 கி.மீ., வேகம் வரை செல்லும் திறன் கொண்டது என கூறியுள்ளார்.

புகாட்டி காரை காப்பியடிக்க தெரியாமல் காப்பியடித்து காமெடி செய்த சீனர்கள்

சீனர்கள் காப்பியடிக்க கூட தெரியாமல் காப்பியடித்த இந்த புகாட்டி காரில் 220 வாட்ஸ் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 10 மணி நேரம் சார்ஜ் செய்தால் சுமார் 150 கி.மீ. வரை பயணம் செய்யும். அதாவது ஒரிஜினல் புகாட்டி கார் சில நிமிடங்களில் கடக்கும் தூரத்தை தான் இந்த கார் முழு பேட்டரி சார்ஜில் கடக்கும் அதற்கும் குறைந்த பட்சம் 3 மணி நேரமாகும்.

புகாட்டி காரை காப்பியடிக்க தெரியாமல் காப்பியடித்து காமெடி செய்த சீனர்கள்

ஒரிஜினல் புகாட்டி சிரோன் காரில் 2 பேர் தான் பயணம் செய்ய முடியும். ஆனால் சீனாவில் உள்ள மோட்டார் வாகன சட்டப்படி இது தயார் செய்யப்பட்டுள்ளதால் இதில் 4 பேர் பயணம் செய்யும் படி 4 சீட்டுடன் இது விடிவமைக்கப்பட்டுள்ளது.

புகாட்டி காரை காப்பியடிக்க தெரியாமல் காப்பியடித்து காமெடி செய்த சீனர்கள்

இந்த காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கண்சோல் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 7 இன்ச் டச் ஸ்கிரீன் உள்ளது. இதில் எம்பி5 வீடியோக்களை பிளே செய்து கொள்ளலாம். அதன் பின் ஸ்போர்ட்டி ஸ்டியரிங் வீல், சைனிங் லிவர், என பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

புகாட்டி காரை காப்பியடிக்க தெரியாமல் காப்பியடித்து காமெடி செய்த சீனர்கள்

தற்போது புகாட்டி காரை காப்பியடித்து விடிவமைத்த நிறுவனம் இதற்கு முன்னர் ஆடி, லாம்போர்கினி போன்ற கார்களின் டுப்ளிகேட்களையும் வடிவமைத்துள்ளது. இந்த கார்கள் குறித்து சீனர்கள் அதிக அதிகவில் பேசி வருகின்றனர்

புகாட்டி காரை காப்பியடிக்க தெரியாமல் காப்பியடித்து காமெடி செய்த சீனர்கள்

நீங்கள் ஆமை போல மெதுவாக சென்று கொண்டே எம்.பி. 5 வீடியோக்களை ரசிக்கும் அளவிற்கு உள்ளது ரசனையும் பொருமையும் இருந்தால் இந்த டுப்ளிகேட் புகாட்டி காரை நீங்கள் நிச்சயமாக வாங்கலாம். சீனாவில் உள்ள சட்டப்படி புகாட்டி கார் விடிவமைக்கப்படாததால் அங்குள்ள மக்கள் அந்த காரை பார்த்திருக்க வாய்ப்பு குறைவு.

Source: CarNewsChina

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #auto news
English summary
Chinese Replica Of Bugatti Chiron Cannot Go Faster Than 50 kmph.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X