இஸ்ரோ தென் துருவ பகுதியில் தரையிறங்கியதாக சொன்னது பொய்யா? சீன விஞ்ஞானி அதிரடி பேட்டி!
இஸ்ரோ சந்திரயான் 3 திட்டத்தில் நிலவின் தென் துருவப் பகுதியில் தரை இறங்கியது என அறிவிக்கப்பட்ட நிலையில், சீன விஞ்ஞானியான ஒயூயங் ஸியூயான் சந்திரயான் 3 நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கவே இல்லை என பெரிய குண்டை போட்டுள்ளார்.
இது தற்போது விண்வெளி ஆய்வு மைய உலகில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன விஞ்ஞானி ஏன் அப்படி சொன்னார்? உண்மையில் இஸ்ரோன அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் நிலவின் தென் துருவ பகுதியில் தான் தரை இயங்கியதா? இல்லையா? விரிவாக காணலாம் வாருங்கள்.

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தனது சந்திரயான் 3 திட்டம் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நிலவில் தென் துருவ பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. உலகில் வேறு எந்த விஞ்ஞானிகளும் செய்ய முடியாத சாதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்து காட்டினர். இந்த சாதனைக்கு பிறகு உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் இஸ்ரோவை திரும்பி பார்த்தனர்.
இதன் மூலம் இந்தியா நிலவின் தென் துருவப் பகுதியை தரை இறங்கிய உலகின் முதல் நாடாகவும் நிலவில் தரையிறங்கிய மூன்றாவது நாடாகவும் மாறியுள்ளது. இந்த பெருமையை தற்போது இந்தியர்கள் எல்லோரும் பரபரப்பாக பேசி வரும் நிலையில் சீனாவில் உள்ள விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானியான ஒயூயங் ஸியூயான் என்பவர் சமீபத்தில் இஸ்ரோ நிலவில் தரை இறங்கிய பகுதி நிலவின் தென்துருவ பகுதியே இல்லை என பேசியுள்ளார்.
இது தற்போது விண்வெளி ஆய்வு மைய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒயூயங் ஸியூயான் என்பவர் சீனாவின் நிலவு குறித்த ஆய்வின் தந்தை என போற்றக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய விஞ்ஞானியாக கருதப்படுபவர். இவர் சமீபத்தில் சீன மொழியில் சீன ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்தார். அந்த பேட்டியில் இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் நிலவின் 69.8 டிகிரி தெற்கு லேட்டிட்யூட் பகுதியில் தரையிறங்கியுள்ளது.
நிலவின் தென் துருவ பகுதி என்பது 88.5 மற்றும் 90 டிகிரி ஆகிய சந்திப்பின் இருக்கிறது. அந்த சந்திப்பில் இருந்து சந்திராயன் தரை இறங்கிய இடம் சுமார் 619 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் சந்திரயான் 3 தரை இறங்கிய பகுதியை நிலவின் தென் துருவப் பகுதி என கூற முடியாது என தெரிவித்துள்ளார்.
இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நிலவில் இறங்கிய பகுதி உண்மையில் தென் துருவபகுதி தானா இது ஏன் சற்று தொலைவில் தரையிறங்கியது என்று பலர் பேசி வருகின்றனர். ஆனால் இது தேவையில்லாத பேச்சு தான். இஸ்ரோ தென் துருவத்திற்கு நெருங்கிய பகுதியில் தரையிறங்கியதாக தான் தெரிவித்தது.
நிலவின் தென் துருவப் பகுதியில் ஐஸ் அதிகமாக இருக்கும் என்பதால் தென் துருவப் பகுதியை ஒட்டி தரையிறங்க தகுதியுள்ள பகுதி என்று கருதுவது சந்திரயான் 3 இறங்கிய பகுதி தான் அதனால் தான் சந்திரயான் அப்பகுதியில் தரையிறங்கியுள்ளது. தென் துருவப் பகுதிக்கு மிகவும் நெருக்கமாக தரை இறங்கியது என்று தான் இஸ்ரோவும் தெரிவித்துள்ளது.
மற்ற உலக நாடுகள் எதுவும் தென் துருவப் பகுதிக்கு இவ்வளவு நெருக்கமான இடத்தில் இதுவரை தரை இறங்கியதில்லை. இதனால் தான் இஸ்ரோவின் இதை சாதனை என்று கூறி வருகிறார்கள். சீனாவை சேர்ந்த விஞ்ஞானியும் இதே கருத்தை தான் தெரிவித்துள்ளார்.
இந்தியா தரை இயங்கிய பகுதிக்கு மிக அருகில் தான் கடந்த மாதம் ரஷ்யா விண்வெளி ஆய்வு மையமும் தரையிறங்குவதற்காக லூனார் 25 விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது. ஆனால் அதை எதிர்பாராத விதமாக நிலவில் சென்று மோதியது சாஃப்ட் லேண்டிங் ஆகவில்லை. நிலவின் தென் துருவப் பகுதியில் தரை இயங்குவது தற்போது மிகப்பெரிய உலக அரசியலாக மாறி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக நாடுகள் மத்தியில் இப்படியாக நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்குவது குறித்து அரசியல் உருவாகியுள்ளதால் பலர் இப்படியாக இஸ்ரோவிற்கு எதிராகவும் இஸ்ரோ சொல்லாத விஷயங்களை சொல்லியதாக பேசி வருகின்றனர். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இஸ்ரோ தனது பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications








