சொந்தமாக ஆகாய கப்பலை உருவாக்கிய கிராமத்து விஞ்ஞானி!
பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட சீனாவை சேர்ந்த கிராமத்து இளைஞர் ஒருவர் சொந்த முயற்சியில் ஓர் ஆகாய கப்பலை உருவாக்கி, வெற்றிகரமாக பறக்கவிட்டு சாதனை படைத்துள்ளார்.
அந்த இளைஞருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இத்தனைக்கும் அவர் பள்ளிப்படிப்பை கூட முழுமையாக முடிக்காதவர். விமான தயாரிப்பின் மீது கொண்ட ஆர்வத்தை மட்டுமே வைத்து தனது கனவை நனவாக்கியிருக்கிறார்.

கிராமத்து விஞ்ஞானி
சீனாவின், ஹெனான் மாகாணத்தை சேர்ந்த அவரது பெயர் ஷி சோங்போ. 29 வயதாகும் அவர் தனது 17 வது வயதில் பள்ளிப்படிப்பை விட்டு விட்டு, விமானம் தயாரிக்கும் நிறுவனத்தில் பயிற்சியாளராக சேர்ந்தார்.

ஆர்வம்
விமான தயாரிப்பு நிறுவனத்தில் பயிற்சிக்கு சேர்ந்தவுடன், அங்கு விமான தயாரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து கற்றுக் கொண்டவுடன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சொந்தமாக ஆகாய கப்பலை உருவாக்கும் திட்டத்தை கையிலெடுத்து வெற்றி கண்டுள்ளார்.

சிறு வயது கனவு
சிறு வயதில் தனது சகோதரனின் பாடப் புத்தகத்தில் இருந்த விமானங்களின் படங்களை பார்த்து, விமான தயாரிப்பில் ஆர்வம் கூடியதாக ஷி தெரிவிக்கிறார். அதிலிருந்து சொந்தமாக விமானம் தயாரிக்கும் திட்டம் மனதில் வேருன்றியதாக நினைவு கூர்கிறார்.

ஆகாய கப்பல்
ஷி உருவாக்கியிருக்கும் ஆகாய கப்பல் 23 மீட்டர் நீளமும், 10 மீட்டர் உயரமும் கொண்டது. சமீபத்தில் தனது ஆகாய கப்பலை முதல்முறையாக வெற்றிகரமாக பறக்கவிட்டு சோதனை நடத்தியுள்ளார்.

சாதனை
ஷி உருவாக்கிய ஆகாய கப்பல் வானில் இரண்டு மணி நேரம் வரை மிதந்தது. அத்துடன், 500 மீட்டர் தூரத்துக்கு பயணித்தது. அப்போது, 8 முறை தரையிறக்கியும், மேலே எழும்பியும் தனது தயாரிப்பின் தொழில்நுட்ப சிறப்பை வெற்றிகரமாக பரிசோதித்தார்.

செலவு
இந்த ஆகாய கப்பலை 3 லட்சம் யுவான் சீன பண மதிப்பில் ஷி உருவாக்கியிருக்கிறார். இந்திய மதிப்பில் 30 லட்ச ரூபாயை செலவிட்டிருக்கிறார்.

ஆட்டோமொபைல் செய்திகள் உடனுக்குடன்...!


Click it and Unblock the Notifications








