பிரபுதேவா உடன் ஆடிய நடன இயக்குநர் இப்போது டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட்ஸ் பைக்கின் உரிமையாளர்..!!
பிரபுதேவா உடன் ஆடிய நடன இயக்குநர் இப்போது டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட்ஸ் பைக்கின் உரிமையாளர்..!!
ரெமோ டிசோஸா, இவர் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடன இயக்குநர் மற்றும் திரைப்பட இயக்குநர். எந்திரன் படத்தில் இடம்பெற்ற அரிமா... அரிமா... பாடலுக்கு நடன காட்சி அமைத்தவரும் இவரே.

சிறப்பான தனது நடன அசைவுக்காக பல விருதுகளை இவர் வாங்கி குவித்திருந்தாலும், ரெமோ டிசோஸா ஒரு பைக் ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டின் படா ஹீரோக்களை போல, இவரது மோட்டார் உலகம் ஆச்சர்யம் தருவதாக உள்ளது. இந்நிலையில் தனது வாகன கலெக்ஷனில் ரெமோ டிசோஸா புதியதாக வாங்கியிருக்கும் பைக் தான் டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட்ஸ் எஸ்.

வெள்ளை நிற பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த பைக், இந்தியாவில் 2017ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியானது. ப்ரீமியம் தர மோட்டார் சைக்கிளான இது ரூ.13.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலை பெறுகிறது.

நடன இயக்குநர் ரெமோ டிசோஸா வாங்கியிருக்கும் டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட்ஸ் எஸ் பைக், உயர்தர சிறப்பம்சங்களை கொண்ட அக்ராபோவிக் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது.
Recommended Video


இத்தாலியை சேர்ந்த டுகாட்டி நிறுவனம் தயாரித்துள்ள முற்றிலும் அதிவேக திறன் பெற்ற மாடலாக சூப்பர்ஸ்போர்ட் எஸ் மோட்டார் சைக்கிள் உள்ளது.
மேலும் இந்த பைக்கை ஓட்டுவதில் அதிக சௌகரியம், மற்றும் புதிய தர டிரன்டிங்கையும் வழங்கும் எல்லா அம்சங்களும் உள்ளன.

டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் எஸ் பைக், பேனிகலே சிரீஸ் போலில்லாமல், ஸ்போர்ட்ஸ் திறனுக்கான தேவையுடன் தயாரிக்கப்பட்டது.
குறிப்பாக புதியதாக ஸ்போர்ட்ஸ் பைக்கை ஓட்ட விரும்புபவர்களுக்கு டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் பயன்பாட்டிற்கு எளிதாகவும் இருக்கும்.

937சிசி டெஸ்டாஸ்ட்ரீட்டா 11 டிகிரி எல்-ட்வின் லிக்குவிட் கூல்டு எஞ்சின் டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் பைக்கில் உள்ளது. இதன்மூலம் 110 பிஎச்பி பவர் மற்றும் 93 என்.எம் டார்க் திறன் உள்ளது.

6-ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றுள்ள இந்த பைக், மின்சார ஆற்றல் கொண்ட தீரி-ஸ்டெப் ஏபிஎஸ், டிடிசி மற்றும் மல்டிபிள் ரைடிங் மோட்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மேலும் டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் ஸ்டேன்டர்டு மற்றும் எஸ் என இரண்டு வித வேரியண்டுகளில் வெளிவருகிறது. குறிப்பாக எஸ் வேரியண்ட் சூப்பர்ஸ்போர்ட் பைக்கில்,

ஓஹ்லின்ஸ் சஸ்பென்ஷன், டுகாட்டி குவிக் ஷிஃப்ட் அப்/டவுன் சிஸ்டம் மற்றும் ரியர் சீட் கௌல் போன்ற தேவைகள் உள்ளன. இவற்றுடன் அக்ரோபோவிக் எக்ஸாஸ்ட் சிஸ்டமும் உள்ளது.

டுகாட்டி நிறுவனம் தயாரிக்கும் சூப்பர் பைக்குகள் இந்தியாவின் பல நட்சத்திர கலைஞர்களிடம் வரவேற்பில் உள்ளது. அதில் புதியதாக இணைந்துள்ளார் நடன இயக்குநர் ரெமோ டிசோஸா.

இந்தியாவில் பல வாகன ஆர்வலர்கள் மத்தியில் சூப்பர்பைக் மீது மோகம் அதிகரித்து வருகிறது. அதற்கு திரைப்பட நட்சத்திரங்கள் உருவாக்கும் தாக்கமும் காரணமாக உள்ளது.

தொடர்ந்து இதுபோல் உருவாகும் வரவேற்பால், டுகாட்டி நிறுவனம் தயாரிக்கும் பைக்குகளுக்கு இந்தியாவில் விற்பனை திறன் அதிகரிக்கும் என்பது ஆட்டோதுறை வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications








