ஒரு காரால எவ்ளோ பெரிய மனுஷன் தரையில ஒக்காந்துட்டாரு! ஆள் அடையாளமே தெரியல.. ஒரு டைம்ல இவர பாத்தாலே மிரளுவாங்க!!

அசால்டாக காருக்கு முன்னால் தரையில் அமர்ந்தபடி இருக்கும் இவரை யாரென்று தெரிகிறதா?.. இவரை அறிமுகம் செய்ய தேவையில்லை என்றே நம்புகின்றோம். 1999 முதல் 2021 வரை மேற்கிந்திய தீவுகள் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து, பல்வேறு வரலாற்று சாதனைகளைப் படைத்த கிரிஸ் கெயில்-தான் அவர் ஆவார். உலக புகழ்பெற்ற இந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர், தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருக்கின்றார். எதிர் டீம்-களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஓர் சிறந்த பேட்ஸ்மேன் இவர் ஆவார்.

இவர் சிறந்த ஆட்டக்காரர் என்பதாலேயே அவருக்கு 'யுனிவர்ஸ் பாஸ்' என்கிற செல்ல பெயரும் உண்டு. இத்தகைய மிக சிறந்த பேட்ஸ்மேன்-னே தற்போது அசால்டாக தரையில் அமர்ந்தபடி போஸ் கொடுத்திருக்கின்றார். இதற்கு ஓர் காரே காரணம். கிறிஸ் கெயில்-லைப் போலவே இவருக்கு பின்னால் இருக்கும் காரும் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகக் காட்சியளிக்கின்றது.

Chris gayle shows off rolls royce with expensive plate

குறிப்பாக, அந்த கார் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) தயாரிப்பு என்பதைக் காட்டிலும் அந்த காரில் இடம் பெற்றிருக்கும் நம்பர் பிளேட்டே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காட்சியளிக்கின்றது. 'எஃப் 9' (F9) என்கிற பதிவெண்ணைக் கொண்டிருப்பதாலேயே அந்த கார் மதிப்புக் கொண்டதாகக் கருதப்படுகின்றது.

அந்த நம்பரின் மதிப்பு மட்டுமே பல கோடி ரூபாய் என கூறப்படுகின்றது. துபாயில் இதுபோன்ற ஒற்றை இலக்க எண்ணைக் கொண்டிருக்கும் பதிவெண்களுக்கு மிகப் பெரிய டிமாண்ட உள்ளது. இந்தியாவில் ஒரு சில லட்ச ரூபாய்க்கே இந்த மாதிரியான பதிவெண்ணை வாங்கிவிட முடியும். ஆனால், துபாய் போன்ற நாடுகளில் இந்த மாதிரியான ஒற்றை இலக்க பதிவெண்களுக்கு பல கோடி ரூபாயை வாரி வழங்க வேண்டியிருக்கும்.

ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 'எஃப் 9' பதிவெண்ணின் துள்ளியமான மதிப்பு வெளியிடப்படவில்லை. இருப்பினும், அதன் மதிப்பு ரூ. 50 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகின்றது. மேலும், கிறிஸ் கெயில்-யும் இந்த தகவலை உறுதிப்படுத்தி விதமாக, தான் துபாயின் மிகவும் விலை உயர்ந்த 'டாப் 10' நம்பர் பிளேட்டுகளில் ஒன்றைக் கொண்டிருக்கும் காருக்கு முன்னால் இருக்கின்றேன் என பதிவிட்டுள்ளார்.

எனவே, ரோல்ஸ் ராய்ஸ் காரைக் காட்டிலும் பலமடங்கு அதிக விலையைக் கொண்டதே அந்த நம்பர் பிளேட் என்பது தெரிய வந்திருக்கின்றது. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost) கார் மாடலே இதுவாகும். உலக பணக்காரர்கள் பலரின் பிரியமான சொகுசு செடான் ரக கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது.

Rolls royce with expensive plate

அந்த காரின் ஒரே ஒரு யூனிட்டின் மதிப்பு மட்டுமே ரூ. 6.95 கோடிக்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். சொகுசு மற்றும் திறன் வெளிப்பாடு இரண்டிலும் மிக சிறந்த கார் மாடலாக கோஸ்ட் விளங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கு கூடுதல் சிறப்பு சேர்ப்பாக அதன் நம்பர் பிளேட் காட்சியளிக்கின்றது.

6.75 லிட்டர் வி12 வகை பெட்ரோல் எஞ்சினே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 563 பிஎச்பி மற்றும் 900 என்எம் டார்க்கை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவிலும் இந்த காருக்கு ரசிகர்கள் மிக அதிகம் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறிப்பிட்ட சில லட்ச ரூபாய்களை செலவிட்டாலே ஒற்றை இலக்க பதிவெண்ணை வாங்கிவிட முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், உலக நாடுகளில் இதுமாதிரியான சூழல் இல்லை. அதேவேளையில், இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் எஃப் 9 போன்ற மிகவும் ஃபேன்சியான நம்பர் பிளேட்டையேக் கொண்டிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, November 1, 2024, 13:39 [IST]
English summary
Chris gayle shows off rolls royce ghost luxury sedan with expensive plate
மேலும்... #celebrity cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+