அந்த அழகு பதுமையோட அப்பாவா இவரு! பொண்ண தமிழ் சினிமால மட்டும் நடிக்க வெச்சாருன்னா பல நடிகைகள் மார்க்கெட் காலி!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த புதிய தலைமுறை கியா கார்னிவல் (New-gen Kia Carnival) கார், வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை எவ்வளவு? என்பது தெரிவதற்கு முன்னரே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், முன்பதிவு (Bookings) செய்து விட்டனர். இது மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், 2 ஆயிரம் பேர் முன்பதிவு என்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது. புதிய தலைமுறை கியா கார்னிவல் கார், 63.90 லட்ச ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-showroom Price) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 4 ஸ்போக் ஸ்டியரிங் வீல், ட்யூயல் சன்ரூஃப், 3 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 11 இன்ச் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, போஸ் பிரீமியம் 12 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் அடாஸ் என ஏகப்பட்ட வசதிகளை (Features) எல்லாம் புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் கொண்டுள்ளது.

Chunky Panday-Ananya Panday

செயல்திறனை பொறுத்தவரையில் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 193 பிஎஸ் பவர் மற்றும் 441 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

டிசைனை (Design) பொறுத்தவரையில், எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், எல்இடி டெயில்லேம்ப்கள், 18 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் மற்றும் புலி மூக்கு க்ரில் அமைப்பு உள்ளிட்டவை எல்லாம், புதிய தலைமுறை கியா கார்னிவல் காரின் கவனம் ஈர்க்க கூடிய அம்சங்களாக உள்ளன.

Chunky Panday Takes Delivery Of New-gen Kia Carnival

புதிய தலைமுறை கியா கார்னிவல் கார், பல்வேறு அதிநவீன வசதிகளுடன், சொகுசான பயணத்தை வழங்குவதால், இந்தியாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தொடர்ந்து வாங்கி வருகின்றனர். இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா (Suresh Raina) போன்றவர்களை உதாரணமாக கூற முடியும்.

இந்த வரிசையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சங்கி பாண்டேவும் (Chunky Panday), புதிய தலைமுறை கியா கார்னிவல் காரை வாங்கியுள்ளார். இவர் ஸ்டூடியோ ஒன்றுக்கு புதிய தலைமுறை கியா கார்னிவல் காரில் வந்த வைரல் வீடியோ (Viral Video) சமீபத்தில் சமூக வலை தளங்களில் பரவியது.

இந்த வரிசையில் புதிய தலைமுறை கியா கார்னிவல் காரை, சங்கி பாண்டே டெலிவரி எடுத்தபோது எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இவர் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவின் (Ananya Panday) தந்தை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

எனவே அனன்யா பாண்டேவும், புதிய தலைமுறை கியா கார்னிவல் காரை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய நிலையில் அனன்யா பாண்டே தனது பயணங்களுக்கு ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Range Rover Autobiography) உள்ளிட்ட கார்களை எல்லாம் பயன்படுத்தி வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

கிரிக்கெட் வீரர் ரியான் பராக் (Riyan Parag) இணையத்தில் 'Ananya Panday Hot' என ஒரு முறை தேடிய சம்பவம் வெளி உலகிற்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து நாடு முழுக்க அனன்யா பாண்டே பிரபலமானார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் இன்னும் நேரடி தமிழ் படங்களில் எதிலும் நடிக்கவில்லை. அது நடக்க வேண்டும் என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை கியா கார்னிவல் கார், சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்தது. சொகுசான பயணங்களை எதிர்பார்க்கும் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்களின் போன்றவர்களுக்கு புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

Image Courtesy: All about Automobiles

More from DriveSpark

Article Published On: Tuesday, November 19, 2024, 17:19 [IST]
English summary
Chunky panday takes delivery of new gen kia carnival viral pics
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+