விஜய் வீட்டிலிருந்து வெளியே வந்த கப்பல் மாதிரியான சொகுசு கார்.. கால்களை நீட்டி போட்டு படம் பாத்துட்டே போகலாம்!

நடிகர் விஜய்யின் வீட்டில் இருந்து கப்பல் மாதிரியான ஓர் சொகுசு கார் வெளியே வரும் வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. காரின் முன் பக்கத்தை முழுமையாக இந்த வீடியோவில் பார்க்க முடிகின்றது. இந்த காட்சிகளின் அடிப்படையில் வைத்து பார்க்கையில், அந்த கார் மாடல் லெக்சஸ் (Lexus) நிறுவனத்தின் சொகுசு வாகனமான எல்எம் 350எச் (LM 350h) என்பது தெரிகின்றது. இது ஓர் எம்பிவி வகை கார் மாடல் ஆகும். இது பார்க்க மட்டுமல்ல, பயன்பாட்டு விஷயத்திலும் உல்லாச கப்பலைப் போலவே இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதனால்தான் இந்த காருக்கு இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் விஜய் இந்த காரை வாங்கிய சம்பவமும் உள்ளது. இந்தியாவில் எல்எம் 350எச் கார் மாடல் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Vijay s new lexus lm 350h

மிக மிக சொகுசான ரைடு அனுபவத்தை விரும்புவோருக்காக 4 சீட்டர் ஆப்ஷனும், சொகுசு வசதி, அதேவேளையில் குடும்பத்துடன் டிராவல் செய்ய வேண்டும் என்பவர்களுக்காக இந்த கார் மாடலில் 7 சீட்டர் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது. இந்த இரண்டில் எந்த வேரியண்டை நடிகர் விஜய் வாங்கியிருக்கின்றார் என்பது துள்ளியமாக தெரியவில்லை.

அதேவேளையில், அவர் எல்எம் 350எச் மாடலின் 4 சீட்டர் ஆப்ஷனை வாங்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், அல்ட்ரா லக்சூரி அம்சங்களை 4 சீட்டர் வெர்ஷனிலேயே காண முடியும். குறிப்பாக, வீட்டுக்குள் இருந்துக் கொண்டே பயணிப்பதைப் போன்ற ஓர் ரைடு அனுபவத்தை வழங்க முடியும்.

அதாவது, 7 பேர் அமர்ந்து போகின்ற அளவிற்கு பெரிய உருவம் கொண்ட காரில் வெறும் 4 இருக்கைகள் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கும் என்றால், அதில் எந்த அளவிற்கு சொகுசு வசதி இருக்கும் என்பதை நீங்களே ஓர் மன கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

இதன் சொகுசு வசதிகளுக்கு ஏற்ப விலையிலும் மிக உயர்ந்ததாகவே இந்த தேர்வு இருக்கும். இந்தியாவில் இதன் ஒரே ஒரு யூனிட் மட்டுமே ரூ. 2.50 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், 7 சீட்டர் வெர்ஷனை ரூ. 2 கோடிக்கே வாங்கிக் கொள்ள முடியும்.

Vijay s new lexus lm 350h

ஆனால், இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். எனவே ஆன்-ரோடில் இதைவிட கொஞ்சம் கூடுதலாக இதன் விலை இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஏற்கனவே கூறியதைப் போல இதன் 4 சீட்டர் வெர்ஷன் மிக மிக லக்சூரி அம்சங்களைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, இதன் இருக்கையில் படுத்துக் கொண்டு பயணிக்கின்ற அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இத்துடன், பயணத்தின்போது பொழுதுபோக்கும் விதமாக பெரிய திரை ஒன்று வழங்கப்பட்டு இருக்கும். இந்த திரை சரியாக டிரைவர் இருக்கைக்கு பின்னால் இருக்கும். உட்பக்கத்தின் முழு அகலத்தையும் ஆட்சி செய்யும் வகையில் அந்த திரை இருக்கும். இத்துடன், டிரைவர் பகுதிக்கும், பயணிக்கான பகுதிக்கும் இடையில் ஓர் தடுப்பு சுவர் போன்ற அமைப்பு இருக்கும்.

இது பயணிக்கான பிரைவேட்டான பயணத்தை வழங்கும். தொடர்ந்து ஓட்டுநரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், அந்த சுவரில் உள்ள கண்ணாடி திரையை இறக்கிவிட்டு தொடர்புக் கொள்ளலாம். இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய ஓர் கார் மாடலாகவே எல்எம் 350எச் காட்சியளிக்கின்றது.

குறிப்பாக, குளிர்பானங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஏதுவாக சிறிய குளிர்சாதன பெட்டி வசதி, குடைகளை வைப்பதற்கான இடம், இரட்டை சன்ரூஃப், எச்விஏசி (HVAC)-க்கான டச் கன்ட்ரோல்கள், இருக்கைகளைக் கன்ட்ரோல் செய்வதற்கான வசதி உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. 2.5 லிட்டர், 4 சிலிண்டர், இன்-லைன், 16 வால்வுகள் கொண்ட டிஓஎச்சி, செயின் டிரைவ் எஞ்சினே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதன் சிசி திறன் 2,487 ஆகும். இந்த எஞ்சின் 142 kW பவரையும், 242 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், இந்த காரில் ஹைபிரிட் அம்சமும் வழங்கப்படுகின்றது. இது தனித்துவமாக 134 kW மற்றும் 270 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

இது முன் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கும் மோட்டாரின் திறன் ஆகும். பின்பக்கத்திலும் ஹைபிரிட் தொழில்நுட்பத்தின்கீழ் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கும். அது, 40 kW மற்றும் 121 என்எம் டார்க்கை வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் விதமாக நிக்கல் மெட்டர் ஹைட்ரைட் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கியதாகவே லெக்சஸ் எல்எம் 350எச் சொகுசு எம்பிவி கார் இருக்கின்றது. இத்தகைய ஆடம்பர வகை காரையே நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தற்போது வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

அதேவேளையில், இந்த சொகுசு கார் அவருடைய வீட்டில் இருந்து வெளியேறும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் பதிவெண்கூட இல்லாத நிலையே நம்மால் காண முடிகின்றது. எனலே இந்த காரை அவர் மிக சமீபத்திலேயே வாங்கியிருக்கலாம் என யூகிக்க முடிகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லெக்சஸ் நிறுவனம் இந்த காரின் டெலிவரி பணிகளை சமீபத்திலேயே தொடங்கியது என்பது கவனிக்கத்தகுந்தது. சொகுசு கப்பல்களுக்கு இணையான ஆடம்பர வசதிகளைத் தாங்கிய கார் மாடலே இதுவாகும். இந்த காரில் பயணிக்கும் போது சாலையில் உள்ள பள்ளம்-மேடு மற்றும் வெளியில் ஏற்படும் சத்தம் என எதுவும் கேட்காதாம். இதனால்தான் பணக்காரர்கள் மத்தியில் இந்த கார் வரவேற்பை இப்போது வரவேற்பு தொடங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 13, 2024, 19:04 [IST]
English summary
Cinema star vijay buys luxurious lexus lm 350h mpv here is price and features details
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+