நம்ம சென்னை லிஸ்ட்ல இல்ல... உலகில் இந்த நகரங்களில் எல்லாம் டிராஃபிக் எப்பவும் அதிகமா இருக்கும்!!

மக்கள் அடர்த்தி மிகுந்த மாநகரங்களில் எல்லாமே கிடைக்கும். எந்த அளவிற்கு என்றால், கிராமப்புறங்களில் அரிதாக கிடைக்கக்கூடிய பொருட்களில் இருந்து, மாடர்ன் தொழிற்நுட்பம் வரையில் அத்தனையும் கிடைக்கும். அதேபோல் நினைத்த நேரத்தில் மாநகரத்திற்குள் எங்கிருந்து எங்கு வேண்டுமாயின் செல்லலாம்.

ஆனால் அதேநேரம் மாநகரங்களில் சில பல குறைப்பாடுகளும் உள்ளன. அதில் முக்கியமானது, போக்குவரத்து நெரிசல் ஆகும். உலகின் முக்கியமான மாநகரங்களில் சமீபத்தில் போக்குவரத்து நெரிசல் குறித்து வேர்ல்டு ஆஃப் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. அதன் மூலம் பெறப்பட்ட தரவுகள் மூலம் உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பெயர்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இனி பார்க்கலாம்.

Worst traffic

கிட்டத்தட்ட இந்தியா போன்ற ஒரு தேசம் உலகின் வேறொரு மூலையில் உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் அந்த தேசம் ஆப்பிரிக்க நாடான நைஜீரியா ஆகும். இந்தியாவை போன்று சீரான பொருளாதார வளர்ச்சியை கண்டுவரும் நைஜீரியா நாட்டின் சாலைகளை பார்க்கும்போது நமது இந்திய சாலைகளை பார்ப்பது போன்றே இருக்கும். அப்படியென்றால், போக்குவரத்து நெரிசல் விஷயத்திலும் இந்தியாவை ஒத்ததாக தானே நைஜீரியா இருந்தாக வேண்டும்.

நைஜீரியாவின் முன்னாள் தலைநகரான லாகோஸ் (Lagos) உலகிலேயே மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரம் என வேர்ல்ட் ஆஃப் ஸ்டாடிஸ்டிக்ஸ் அமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. லாகோஸ் நகரத்தில் மக்கள் & வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க துவங்கிய காரணத்தால் 1991இல் நைஜீரியா அரசாங்கம் நாட்டின் தலைநகரை லாகோஸில் இருந்து அபுஜா-ஆக மாற்றியது குறிப்பிடத்தக்கது.

Delhi traffic

லாகோஸிற்கு அடுத்து 2வது மற்றும் 3வது இடங்களில் அமெரிக்க நகரங்களான லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் இருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அமெரிக்க நகரங்களில் பரவலாக போக்குவரத்து நெரிசலை பார்க்க முடியாது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுமாயின் மாற்று பாதைகளை உருவாக்கி நெரிசலை அந்த நாட்டில் குறைத்துவிடுவர்.

இவற்றிற்கு அடுத்து 4வது & 5வது இடத்தில் நம் அண்டை நாட்டின் தலைநகரங்கள் உள்ளன. 4வது இடத்தில் இலங்கையின் தலைநகர் கொழும்புவும், 5வது இடத்தில் வங்காள தேசத்தின் தலைநகர் தாகாவும் உள்ளன. இலங்கை, வங்காள தேசம் இவை இரண்டும் சிறிய நாடுகள் தான். ஆனால் பெரும்பான்மையான மக்கள் நாட்டின் தலைநகரில் வாழ விரும்புவதே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம். என்ன இந்தியாவில் இருந்து ஒரு நகரமும் இல்லையே... என ஆச்சிரியமாக உள்ளதா?

Traffic

அடுத்து அதற்குதான் வருகிறோம்... 6வது இடத்தில் நமது தேசிய தலைநகர் டெல்லி உள்ளது. இடையில் 7வது இடத்தில் சார்ஜா நகரம் இருக்க, 8வது இடத்தில் நமது இந்தியாவின் கொல்கத்தா உள்ளது. அதுமட்டுமின்றி, 10வது இடத்தில் மும்பை உள்ளது. ஆக... இந்த டாப்-10 லிஸ்ட்டிலேயே மொத்தம் 3 இந்திய நகரங்கள் உள்ளன. இந்த வரிசையில் 16வது இடத்தில்தான் பெங்களூர் இருப்பது பெங்களூர்வாசிகளுக்கே சற்று ஆச்சிரியமாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: நீங்கள் பார்த்ததிலேயே மோசமான போக்குவரத்து நெரிசல் எங்கு உள்ளது என நம்மிடத்தில் கேட்டால், நம்மில் பெரும்பாலானோர் பெங்களூர் என்றுதான் சொல்வோம். ஆனால் இந்த லிஸ்ட்டில் பெங்களூரை முந்திக்கொண்டு 3 இந்திய நகரங்கள் முன்னிலையில் உள்ளன. அப்படியென்றால், அந்த நகரங்களில் போக்குவரத்து நெரிசல் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். இந்த லிஸ்ட்டில் டாப்-20 இடத்திற்குள் நமது சென்னை இல்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 31, 2023, 11:39 [IST]
English summary
Cities which have worst road traffic in the world
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X