அப்துல் கலாம் நினைவு நாளில் ஆட்டோ ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சியான சம்பவம்... முழுத் தகவல்கள்..!!

Written By:

அப்துல் கலாமின் 2வது ஆண்டு நினைவு நாளில் சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கலையரசன் வாடிக்கையாளர்களுக்கு கட்டணமில்லா இலவச ஆட்டோ சேவையை வழங்கினார்.

அப்துல் கலாமிற்கு ஆட்டோ டிரைவர் செய்த நன்றிக்கடன்..!!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அனு விஞ்ஞானியான அப்துல் கலாமின் நினைவு நாள் 2வது ஆண்டு நேற்று அனுசரிக்கப்பட்டது.

அவருக்கு மணி மண்டபம் திறக்கப்பட்ட அன்றைய நாளில், சென்னையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் பயணிகளுக்கு இலவச சேவையை வழங்கியுள்ளார்.

அப்துல் கலாமிற்கு ஆட்டோ டிரைவர் செய்த நன்றிக்கடன்..!!

வாடகை ஆட்டோவை ஓட்டி வரும் கலையரசன், காலை 7 மணிக்கு தொடங்கி அன்றைய நாள்முதல் தனக்கு கிடைத்த பயணிகளை இலவசமாக ஆட்டோவில் ஏற்றி சென்றார்.

அப்துல் கலாமிற்கு ஆட்டோ டிரைவர் செய்த நன்றிக்கடன்..!!

சென்னை நந்தனத்தில் ஆட்டோ ஓட்ட தொடங்கி, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, டி-நகர், பாண்டிபாஜார் என பல்வேறு பகுதிகளில் பயணிகளை ஏற்றி சென்றார்.

கலையரசனின் ஆட்டோவில் பயணித்த பலர், அன்றைய நாளில் தங்களது பயணத்திற்காக பணம் கொடுக்க முயன்றுள்ளனர்.

Recommended Video - Watch Now!
2017 Datsun redi-GO 1.0 Litre Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
அப்துல் கலாமிற்கு ஆட்டோ டிரைவர் செய்த நன்றிக்கடன்..!!

ஆனால் அதை முற்றிலும் வாங்க மறுத்து, அப்துல் கலாமின் நினைவு நாளை குறித்தும், அவரது பொன்மொழிகளை பயணிகளிடம் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

அப்துல் கலாமிற்கு ஆட்டோ டிரைவர் செய்த நன்றிக்கடன்..!!

2வது ஆண்டாக தான் செய்து வரும் இந்த இலவச சேவையை பற்றி பேசிய கலையரசன், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மனிதரை நினைவுக்கூர்ந்து இலவசமாக ஆட்டோ ஓட்டுவது பெருமை அளிப்பதாக தெரிவித்தார்.

அப்துல் கலாமிற்கு ஆட்டோ டிரைவர் செய்த நன்றிக்கடன்..!!

ஆட்டோ ஓட்டினால் ஒரு நாள் ரூ.800 வரை கிடைக்கும். இதில் வாடகை மற்றும் பெட்ரோலுக்கும் போக ரூ. 250 மட்டுமே கலையரசனுக்கு மிஞ்சும்.

அதை வைத்து தான் தனது குடும்பம் மற்றும் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.

அப்துல் கலாமிற்கு ஆட்டோ டிரைவர் செய்த நன்றிக்கடன்..!!

இருந்தாலும், இந்தியா மட்டுமில்லாமல் உலகளவில் பலர் போற்றும் தலைவராக வாழ்ந்த அப்துல் கலாமை நினைவு கூர்ந்து இலவசமாக ஒரு நாள் ஆட்டோ ஓட்டுவது எல்லையில்லாத மகிழ்ச்சியை தருவதாக கலையரசன் தெரிவிக்கிறார்.

அப்துல் கலாமிற்கு ஆட்டோ டிரைவர் செய்த நன்றிக்கடன்..!!

மேலும், ஒவ்வொரு வருடமும் இந்த இலவச சேவையை தொடர்ந்து செய்வதாகவும், அதற்கான எந்த தடை வந்தாலும் பொருட்படுத்தாது அப்துல் கலாமை நினைவு கூறுவேன் என்றும் கலையரசன் கூறுகிறார்.

அப்துல் கலாமிற்கு ஆட்டோ டிரைவர் செய்த நன்றிக்கடன்..!!

தனது கருத்துகள், சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளால் பலரை கவர்ந்த அப்துல் கலாம், கொஞ்ச அதிகமாகவே எளிய மக்கள் மற்றும் மாணவர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.

அப்துல் கலாமிற்கு ஆட்டோ டிரைவர் செய்த நன்றிக்கடன்..!!

ஆட்டோ ஓட்டுநர் கலையரசன் போல நம்மில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வியலுக்கு ஏற்றவாறு தலைவர்களை தேர்ந்தெடுத்து அதற்கான பாதைகளை வகுத்தால் எல்லாமுமே இன்பமே.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Chennai City Driver Kalaiarasan Offers Free Rides on Abdul Kalam's Memorial Day. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark