"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" சினிமா பாணியில் பதிலளித்த பாஜக எம்பி! என்னதான் ஆச்சு இவர்களுக்கு..!

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி கூறும் வசனத்தைப் போல், பாஜக கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் இந்திய வாகனத்துறை குறித்து அதிர்ச்சிகரமான பதிலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

'மக்கள் செல்வன்' என்று போற்றப்படும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய படம் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்'. இந்த படத்தின் பெயருக்கேற்பவே நம்முடைய கதாநாயகன் விஜய் சேதுபதி, சிறிய விபத்தின் காரணமாக, குறுகிய கால மறதி நோயால் பாதிக்கப்பட்டு தன்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சில விஷயங்களை மறந்து விடுவார்.

அவ்வாறு, அவர் சில நினைவுகளை இழந்திருக்கும் வேலையில், அவருடைய நண்பர் ஒருவர் நடிகர் சிவாஜி இறந்துவிட்டதாக கூற, அதைக்கேட்ட கதாநாயகன் "என்னது... சிவாஜி செத்துட்டாரா?" என பேரதிர்ச்சியுடன் கேட்பார். இந்த காட்சி திரையரங்கில் வரும்போது பெரும் சிரிப்பலையும், நகைப்பலையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியைப் போன்றே, அண்மைக் காலங்களாக நம்முடைய பாரத பிரதமரின் கட்சியான பாஜகவைச் சேர்ந்த சில எம்பிக்கள் பதிலளித்து வருகின்றனர்.

ஆனால், இவர்கள் யாரும் குறுகிய கால மறதி வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. இதன்காரணமாகவே, அவர்கள் கூறிய கருத்துக்களுக்கு மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

அண்மைக் காலங்களாக வெங்காயத்தின் விலை தங்கம் மற்றும் பெட்ரோல் விலையைப் போல கிடு கிடுவென உயர்ந்து வருகின்றது. ஆகையால், கடந்த மாதங்களில் கிலோ ஒன்று வெறும் 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயம் தற்போது 180 முதல் 200 ரூபாய் வரை விற்கப்படுகின்றது.

இதனால், நாட்டில் பெரும்பாலான மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், பலர் வெங்காயம் இல்லாமல் சமைப்பது எப்படி என்று இணையத்தில் தேடி வருகின்றனர்.

இவ்வாறு நாட்டில் பெரும் பரபரப்பான சூழல் நிலவிக் கொண்டிருக்க, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், இந்த அதீத விலையுயர்வுகுறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது, அதற்கு பதிலளித்த அவர், "தான் வெங்காயத்தை அதிகம் விரும்பாத ஓர் நபர். நான் பூண்டு மற்றும் வெங்காயத்தை சாப்பிட மாட்டேன். அதனால் எனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது என பதிலளித்திருந்தார்.

தொடர்ந்து, மத்திய பாஜக அமைச்சர் அஸ்வினி சௌபேவும் வெங்காய விலையுயர்வுகுறித்து சர்ச்சையான கருத்தை ஏஎன்ஐ என்ற செய்தி நிறுவனத்திற்கு கூறியிருந்தார். அதில், "நான் ஒரு சுத்த சைவம். நான் இதுவரை வெங்காயமே சாப்பிட்டது இல்லை. எனவே, சந்தையில் வெங்காயம் எந்த விலையில் விற்கப்படுகின்றது என்ற தகவல் எப்படி எனக்கு தெரியும்" என்று பதிலளித்திருந்தார்.

இவ்வாறு பாஜக கட்சியைச் சேர்ந்த ஒரு சில எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் சர்ச்சையான கருத்தை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர்.

இந்நிலையில், பாஜக கட்சியைச் சேர்ந்த மற்றுமொரு எம்பி இந்திய ஆட்டோமொபைல் துறைகுறித்து சர்ச்சையான பதிலை கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாலிய தொகுதியின் மக்களவை உறுப்பினரான விரேந்திர சிங்தான் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற வேளாண்மைச் சார்ந்த விவாத கூட்டத்தில் கலந்துக் கொண்ட அவர், "வாகனத்துறையில் மந்தநிலை என்பதே இல்லை. நாட்டின் மீது அவதூறு பழியை சுமத்துவதற்காகவே இந்த பொய்யான கருத்துக்கள் பரப்பி வருகின்றனர். நாட்டின் பல வீடுகளில், ஒன்றிற்கு இரண்டு கார்கள் உள்ளன. பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பல மடங்கு உள்ளது. வாகனத்துறையில் மந்த நிலை இருந்தால், எப்படி இவ்வாறு இருக்கும்... என கேள்வியெழுப்பினார்.

அமைச்சரின் இந்த பதில் மக்கள் மத்தியிலும், வாகனத்துறைச் சார்ந்தவர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில், ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் வெளியிட்ட தகவலின்படி, நடப்பாண்டு தொடங்கி சுமார் பத்து மாதங்களுக்கு பின்னர் 2019 அக்டோபர் மாதம் மட்டுமே சிறிய விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அந்தவகையில், தொடர் சரிவைச் சந்தித்து வந்த வாகனத்துறை, விழாக்காலங்களை முன்னிட்டு அறிவித்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளின் காரணமாகவே 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் 0.28 விழுக்காடு விற்பனையை வளர்ச்சியைப் பெற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.

ஆனால், 2019ம் ஆண்டு தொடங்கியது முதல் தொடர் மந்த நிலை மற்றும் சரிவையேச் சந்தித் வந்தது. இதன்காரணமாகவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்காலிக பணியாட்கள் வெளியேற்றம், உற்பத்தி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால், மக்களவை எம்பி-யோ 2019 அக்டோபர் மாத விற்பனையை மட்டுமே கருத்தில் கொண்டு இத்தகைய தகவலை வெளியிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இதுபோன்று பாஜக கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள், பொருளாதாரத்தின் நிலை குறித்து அரசை எதிர்க்கட்சியினர் விமர்சிக்க கூடாது என்பதற்காகவும், எங்களின் வாதங்களை மறுக்கவும் இதுபோன்ற முரண்பட்ட கருத்துக்களை முன்வைப்பதாக எதிர்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் அவர்கள் தரப்பு கருத்தை முன் வைக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Friday, December 6, 2019, 16:25 [IST]
English summary
Claim Of Slowdown In The Automobile Sector Was Made To Defame The Country: BJP Lok Sabha MP.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+