பைக்கை வாங்க கெத்தான காரில் வந்த அம்மா-பையன்.. படத்துல இருக்கே அந்த காரோட விலை எவ்ளோ தெரியுமா?..

பணக்காரர்கள் புதிய வாகனம் வாங்குவது ஒன்றும் புதிதல்ல, நாள்தோறும் இந்த சம்பவம் நாட்டில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், ஒரு சில வாகனம் வாங்கும் சம்பவம் மட்டும் பெரிய பேசு பொருளாக மாறிவிடுகின்றன. அந்தவகையிலேயே ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் பரத நாட்டியம் ஆடும் பெண் பைக்கை வாங்கிய நிகழ்வு மிகப் பெரிய அளவில் பேசு பொருளாக மாறியிருக்கின்றது. அவர் அந்த விலை உயர்ந்த பைக்கை வாங்குவதற்கு வந்த காரே அதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

அப்பெண் வந்தது மிக மிக விலை உயர்ந்த லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan) கார் மாடல் ஆகும். இதன் ஒரே ஒரு யூனிட்டின் மதிப்பு மட்டுமே ரூ. 4.5 கோடிக்கும் அதிகம் ஆகும். இத்தகைய காஸ்ட்லியான காரில் வந்தே அந்த பெண் விலையுயர்ந்த பைக்கை வாங்கி சென்றிருக்கின்றார். இவருடன் அவரின் மகனும் வந்திருக்கின்றார்.

Dancer arrives in lamborghini for aprilia rs457

அப்ரில்லா ஆர்எஸ் 457 (Aprilia RS457) பைக் மாடலையே இவர்கள் வாங்கி இருக்கின்றார். இது ஓர் சூப்பர் பைக் மாடல் ஆகும். இந்த பைக்கின் ஒரே ஒரு யூனிட்டே இந்தியாவில் ரூ. 4.20 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த பைக்கை வாங்கவே காஸ்ட்லியான பைக்கில் கெத்தாக வந்திறங்கி இருக்கின்றார் அந்த பணக்கார பெண். இதனாலேயே இந்த வீடியோ தற்போது ஆட்டோ உலகில் தீயாய் பரவிக் கொண்டிருக்கின்றது. அப்ரில்லா ஆர்எஸ் 457 இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட பைக் மாடல்களில் ஒன்றாகக் காட்சியளிக்கின்றது.

இதில் 457 சிசி திறன் கொண்ட பாரல்லல் ட்வின் சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 47 பிஎச்பி மற்றும் 48 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. 6 கியர்பாக்ஸ் மற்றும் மூன்று விதமான ரைடிங் மோட்கள் ஆகியவற்றையும் இந்த பைக்கில் அப்ரில்லா வழங்கி இருக்கின்றது.

இதுதவிர, ஸ்விட்சிங் செய்யும் வசதிக் கொண்ட 3 லெவல் டிராக்சன் கன்ட்ரோல், டூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற அம்சங்களையும் இந்த பைக்கில் வழங்கி இருக்கின்றனர். இத்தகைய பைக்கையே 'பாஸ் லேடி' போல் வந்து சென்றிருக்கின்றார். இவரின் பெயர் சௌம்யா தாஸ் என்பது தெரிய வந்திருக்கின்றது.

Aprilia rs457 bike

இந்தியாவில் உள்ள பிரபலமான பரத நாட்டிய கலைஞர்களில் இவரும் ஒருவர் ஆவார். இவரே இப்போது நடனத்திற்கு அடுத்தபடியாக ஆடம்பர வாகனங்களை வாங்குவதன் வாயிலாக பிரபலமடையத் தொடங்கி இருக்கின்றார். முன்னதாக இவர்கள் 3 கோடி ரூபாய் மதிப்புக் கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-வேகன் (Mercedes-Benz G63 AMG) ஆடம்பர காரை வாங்கியதன் வாயிலாக ஃபேமஸாகினர்.

இப்போது லம்போர்கினி ஹூராகேன் காரில் வந்து அப்ரில்லா பைக்கை வாங்கியதன் வாயிலாக மீண்டும் ஒரு முறை பேசுபொருளாக மாறியிருக்கின்றனர். இவர்கள் பயன்படுத்திய இந்த லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா (Lamborghini Huracan Tecnica) சூப்பர் கார் அதிகபட்சமாக மணிக்கு 325 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

Women arrives in lamborghini for buy bike

இதுமட்டுமல்ல இதற்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட வெறும் 3.2 செகண்டுகளே போதுமானது. இத்தகைய அதீத திறனுக்காக 640 பிஎச்பி ஆற்றல்மிக்க 5.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆடம்பர கார் மற்றும் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே ஒரிசாவில் அரங்கேறிய இந்த சம்பவம் அமைந்து இருக்கின்றது. இந்த பைக்கை பரத நாட்டிய கலைஞர் தன்னுடைய பையனுக்காகவே வாங்கியிருக்கின்றார். இதுபோன்று காஸ்ட்லியான மற்றும் உயர்திறன் கொண்ட பைக்குகளை இளைஞர்களுக்கு வாங்கிக் கொடுக்கும்போது கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இந்தியாவில் அரங்கேறும் பெரும்பாலான விபத்திற்கு பின்னால் அதிக வேகமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, April 28, 2025, 15:09 [IST]
English summary
Classical dancer from orissa arrives in lamborghini to buy aprilia rs457 superbike
மேலும்... #luxury car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X