பஸ் ஸ்டான்டில் விமானம் ஏறும் காலம் வெகு தொலைவில் இல்லை ப்ரோ!

Written By:

விரைவாக சென்றுவிடலாம் என்றாலும், வீட்டிலிருந்து ஏர்போர்ட் சென்று, அங்கு வழக்கமான நடைமுறைகளை முடித்துக் கொண்டு விமானத்தில் ஏறி அமர்வதற்கே பல மணி நேரம் பிடிக்கிறது. பின்னர் இறங்கிய பின் அதிலிருக்கும் நடைமுறைகளால் பல மணிநேரத்தை வீணாக செலவழிக்க வேண்டியிருக்கிறது.

உதாரணத்திற்கு பெங்களூரிலிருந்து சென்னை செல்வோர்க்கு, விமான பயணத்தை விட ரயில் அல்லது பஸ் பயணமே தேவலாம் எனும் அளவுக்கு, கால விரயம் ஏற்படுகிறது. நீண்ட தூர பயணங்களுக்கு மட்டுமே விமானப் பயணம் பரவாயில்லை என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், விமான போக்குவரத்தில் ஏற்படும் கால விரயத்தை தவிர்க்கும் விதத்தில் அட்டகாசமான புதிய விமான கான்செப்ட் ஒன்றை சுவிஸ் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கிறது. அதுபற்றிய படங்கள், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 பாட் பிளேன்

பாட் பிளேன்

பாட் எனப்படும் இரண்டு மூன்று விமான கூடுகளை ஒன்றிணைத்து தூக்கிக் கொண்டு பறப்பதற்கான பிரம்மாண்ட விமானத்தை உருவாக்கும் முயற்சிதான் இது. க்ளிப் ஏர் என்ற பெயரில் இந்த கான்செப்ட் வெளியிடப்பட்டிருக்கிறது. எஞ்சின், சக்கரங்கள் பொருத்தப்பட்ட விமானம் தனியாகவும், அதில் பயணிகள் அமர்ந்திருக்கும் விமான கூடு தனி அமைப்பாக இணைத்து செல்லும் விதத்தில் இருக்கும்.

பாட் அமைப்பு

பாட் அமைப்பு

தற்போதுள்ள விமானங்களை போல பயணிகள் அமர்வதற்கான இருக்கை வசதிகள் கொண்ட விமான கூடுதான் பாட். இந்த பாட் அமைப்பில் சக்கரங்கள், எஞ்சின்கள் போன்றவை இருக்காது. அதேநேரத்தில், இவற்றை ரயில் எஞ்சின் மற்றும் டிராக்டர் மூலமாக இணைத்து ரயில் தண்டவாளங்களிலும், சாலையிலும் இழுத்துச் செல்ல முடியும்.

பயன் என்ன?

பயன் என்ன?

அதாவது, விமான பயணிகள் தங்களது அருகாமையிலுள்ள பேருந்து நிலையம் அல்லது ரயில் நிலையத்திலேயே இந்த பாட் விமானங்களில் ஏறி அமர்ந்து கொண்டால் போதுமானது. விமான நிலையத்தில் காத்திருந்து ஏறும் தொந்தரவுகளை தவிர்க்கலாம்.

நேரடி பயணம்

நேரடி பயணம்

உதாரணத்திற்கு, சென்னையிலிருந்து துபாய் செல்லும் பயணிகள் தங்களின் அருகாமையிலுள்ள பேருந்து நிறுத்தத்திலோ அல்லது ரயில் நிலையத்திலோ ஏறிக்கொண்டால் போதுமானது. அங்கிருந்து நேரடியாக துபாய் சென்றுவிடலாம். வீட்டிலிருந்து விமான நிலையத்திற்கு செல்லும் பயணத்தை தவிர்க்க முடியும்.

எப்படி?

எப்படி?

இந்த பாட் எனப்படும் விமான உடல்கூடுகள் 98 அடி நீளமும், 30 டன் எடையும் கொண்டதாக இருக்கும். இவற்றை ரயில் தண்டவாளத்திலும், சாலையிலும் செல்லும் விதத்தில் கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்கும். அண்ணா சாலையிலிருந்து வரும் பாட், அடையாறு சாலையிலிருந்து வரும் பாட் மற்றும் கோயம்பேட்டிலிருந்து வரும் பாட் என மூன்று விமானங்களையும் ஒரு ராட்சத விமானத்தின் அடிப்பாகத்தில் இணைத்து துபாய் எடுத்துச் செல்ல முடியும்.

எளிது

எளிது

போர் விமானங்களில் வெடிகுண்டுகளை அடிப்பாகத்தில் இணைப்பது போன்று, பாட் விமான கூடுகளை ராட்சத விமானத்தின் அடிப்பாகத்தில் எளிதாக இணைக்க முடியும். இதனால், பயணிகள் ஏறி, இறங்குவதற்கும், சரக்குகளை ஏற்றுவதற்கும் பல மணி நேரம் விமானம் காத்துக் கிடக்கும் தேவையும் இருக்காது. இவற்றை கழற்றுவதும் எளிது.

சரக்கு போக்குவரத்திலும்...

சரக்கு போக்குவரத்திலும்...

குறைவான கட்டணத்தில் சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வெகு விரைவாக அனுப்பவும் இந்த பாட் விமானம் பயன்படும். அதாவது, சென்னையில் உற்பத்தியாகும் பிஎம்பிள்யூ கார்களை ஒரு பாட் விமான கூட்டில் ஏற்றி, நேரடியாக டெல்லிக்கு அனுப்ப முடியும். அதேபோன்று, மூன்று பாட் விமான உடல்கூடுகளில் ஒன்றில் முழுவதுமாக சரக்குகளையும், இரண்டில் பயணிகளையும், தேவைக்கு ஏற்றபடி இணைத்து எடுத்துச் செல்ல முடியும்.

வேகம்

வேகம்

இந்த பாடுகளை தூக்கிக் கொண்டு பறக்கும் விமானம், தற்போது பயன்பாட்டில் இருக்கும் நடுத்தர ரக விமானங்களுக்கு இணையான வேகத்தில் பறக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மணிக்கு 700 கிமீ முதல் 900 கிமீ வேகம் என்ற அளவில் இந்த விமானம் பறக்கும்.

 கால விரயம்

கால விரயம்

இதன் மூலம் விமான நிலையங்களில் ஏற்படும் கால விரயம், போக்குவரத்து நெரிசல் வெகுவாக தவிர்க்கப்படும் என்கிறது இந்த கான்செப்ட்டை வெளியிட்டிருக்கும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஃபெடரல் பாலிடெக்னிக்கை சேர்ந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பழசுதான்...

பழசுதான்...

இதுபோன்ற பாட் விமான கான்செப்ட்டுகள் நீண்ட காலமாக வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த பாட் விமான கான்செப்ட்டை தொழில்நுட்ப ரீதியில் சாத்தியப்படுத்துவதற்கான முயற்சிகளை இதனை வெளியிட்ட பொறியாளர் குழுவினர் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர்.

இலக்கு

இலக்கு

2018-2025ம் ஆண்டு காலத்தில் ஒற்றை பாட் சாதனத்துடன் பறக்கும் விமானத்தை தயாரிக்கவும், 2050ம் ஆண்டிற்குள் மூன்று பாட் விமானங்களை தூக்கிக் கொண்டு பறக்கும் விமானங்களை தயாரிக்கவும் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Clip-Air pod planes could change travel forever.
Story first published: Thursday, July 7, 2016, 12:09 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark