கார் ஒவ்வொன்றின் விலையும் ரூ.3.5 கோடிக்கும் அதிகம்! டெலிவிரி பெற வந்த இடத்தில் ஷோரூம் கொடுத்த ஷாக்!
புதிய கார் வாங்குவது எப்போதும் ஒரு தனிப்பட்ட அனுபவமாகும். குறிப்பாக விலையுயர்ந்த சொகுசு கார்களை (Luxury Cars) வாங்கும்போது, அந்த அனுபவம் வாடிக்கையாளர்களுக்கு மறக்க முடியாததாக அமைய வேண்டும் என சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் விரும்புகின்றன. இணையத்தில் இதற்கு முன்பும் பல சொகுசு கார் டெலிவரி (Car Delivery) வீடியோக்களை நாம் பார்த்திருக்கிறோம்.
தற்போதும் அப்படியான ஒரு சுவாரஸ்யமான டெலிவரி சம்பவத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். இரண்டு நண்பர்கள் ஒரே நாளில் மெர்சிடிஸ் ஜி-வாகன் (Mercedes G-Wagon) கார்களை வாங்கியுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், டீலர்ஷிப் (Dealership) நிறுவனம் ஹெலிகாப்டர் (Helicopter) பயணத்திற்கு ஏற்பாடு செய்து, டெலிவரி இடத்திற்கு அவர்களை அழைத்து வந்துள்ளது.

இதுதொடர்பான விபரங்களை பெங்களூருவைச் சேர்ந்த சுந்தரம் மோட்டார்ஸ் (Sundram Motors) தங்கள் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஒரு ரிசார்ட்டில் உள்ள ஹெலிபேடில் ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கப்பட்டு, இரண்டு தம்பதியினர் இராஜ மரியாதை உடன் அழைத்துவரப்பட்டனர். அவர்களை டீலர்ஷிப் ஊழியர்கள் வரவேற்றனர்.
இது நடந்த இடம் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இது பெங்களூருக்குள் இருக்கும் ஒரு இடம் என ஊகிக்கப்படுகிறது. இந்த தம்பதியினர், சிறந்த நண்பர்களாகவும் உள்ளனர். இருவரும் நீண்ட நாட்களாக ஜி-வாகன் காரை வாங்க வேண்டும் என்று கனவு கண்டுள்ளனர். சந்தர்ப்பம் கிடைத்ததும், உடனே காரை புக் (Book) செய்துள்ளனர்.

சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த சிறப்பு வாய்ந்த தருணத்தை மேலும் மறக்க முடியாததாக மாற்ற முடிவு செய்தது. கஸ்டமர்கள் டெலிவரி பகுதிக்குச் சென்றவுடன், ஆவண வேலைகள் முடிந்த பிறகு கார்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இருவரும் மேட் பிளாக் மற்றும் சாடின் பிளாக் நிறத்தில் ஜி63 ஏஎம்ஜி (G63 AMG) கார்களை வாங்கியுள்ளனர்.
சக்கரங்கள் கருப்பு நிறத்தில் சிவப்பு நிற பிரேக் காலிப்பர்களுடன் காட்சி அளிக்கின்றன. உரிமையாளர்கள் இருவரும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் காணப்பட்டனர். சுந்தரம் மோட்டார்ஸ் கடந்த 25 ஆண்டுகளாக இந்த வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் இந்த முக்கியமான தருணத்தை மேலும் சிறப்பானதாக மாற்றும் நோக்கில், ஹெலிகாப்டர் பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

கார்களை வீட்டிற்கு ஓட்டிச் செல்லும் முன், வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களை ஆய்வு செய்து, கேக் வெட்டி, மத பூஜைகளையும் ஷோரூமிலேயே வைத்து செய்தனர். கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு, இரண்டு கார்களும் ஹெலிபேட் வழியாக வெளியே ஓட்டிச் செல்லப்பட்டன. பின்னர் ஹெலிகாப்டரும் புறப்பட்டுச் சென்றது.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி ஆனது ஒரு சிறப்பான கார் ஆகும். இது உண்மையான ஜி-வாகனை வாங்க விரும்பும் ஆர்வலர்களின் உச்சப்பட்ச ஆசையாக உள்ளது. அதாவது, ஜி-கிளாஸ் வாகனத்தை காட்டிலும் ஜி63 ஏஎம்ஜி ஆனது விலையுயர்ந்தது மற்றும் ஆஃப்-ரோடு திறன்களை அதிகம் கொண்டது ஆகும். எதிர்காலத்தில் ஜி-வாகன் மின்சார வாகனமாக மாற உள்ளது.

அதனால்தான் மெர்சிடிஸ் நிறுவனம், ஜி-வாகனின் மின்சார மாடலான ஜி580-ஐ சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி கூட ஒரு ஜி63 ஏஎம்ஜி காரை வாங்கி பயன்படுத்தி வருகிறார். ஏனெனில், எதிர்காலத்தில் இந்த வாகனம் ஒரு "கிளாசிக்" காராக மாறக்கூடும். தற்சமயம், மெர்சிடிஸ் ஜி63 ஏஎம்ஜி காரில் 4.0 லிட்டர் V8 டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.
இந்த என்ஜின் 576 bhp சக்தியையும், 850 Nm உச்ச டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது ஒரு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு, என்ஜினின் ஆற்றல் அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. ஒரு புதிய ஜி63 ஏஎம்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.5 கோடிக்கும் அதிகமாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ் ஜி63 ஏஎம்ஜி இந்தியாவிலும் உலக அளவிலும் மிகவும் பிரபலமான எஸ்யூவி கார் ஆகும். பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட ஒரு ஐகானிக் எஸ்யூவி காரை நெருங்கிய நண்பர் உடன் சேர்ந்து டெலிவிரி பெறுவது இளைஞர்கள் பலரது கனவு ஆகும். அதுவும், ஹெலிகாப்டரில் ஷோரூமுக்கு வந்து டெலிவிரி பெறுவது என்பது எவரொருவராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாத ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications









