விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம்... ஊரே சிரிக்குது!!

பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கியிருக்கின்றநிலையில், முதலமைச்சரின் மகன் ஹாயாக விலையுயர்ந்த காரில் வெளியில் சுற்றித் திரிந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம்... ஊரே சிரிக்குது!!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் தீவிரம் காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முழு அல்லது தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய் பரவலைக் கட்டுபடுத்தும் பொருட்டு முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.

விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம்... ஊரே சிரிக்குது!!

ஆனால், பலர் இந்த ஊரடங்கிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்காத நிலையே காணப்படுகின்றது. குறிப்பாக, அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூகத்தில் முக்கிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அதிகளவில் ஊரடங்கு உத்தரவை மீறிய வண்ணம் இருக்கின்றனர்.

விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம்... ஊரே சிரிக்குது!!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் சம்பவம் நாட்டில் அரங்கேறியிருக்கின்றது. நமது அண்டை மாநிலமான கர்நாடகாவிலேயே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. மாநிலத்தின் முதலமைச்சரான பிஎஸ் எடியூரப்பாவின் மகன் பிஒய் விஜயேந்திரா, இவரே லாக்டவுண் விதிமீறலில் ஈடுபட்டவர் ஆவார்.

விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம்... ஊரே சிரிக்குது!!

முழு ஊரடங்கு விதி அமலில் இருக்கும் மாநிலங்களில் மக்கள் வெளியில் நாடுமாடுவதற்கு மட்டுமின்றி பொது நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதில், கோவில்கள் சார்ந்த விஷயங்களும் அடங்கும். மக்கள் வழிபாட்டு தளங்களில் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கோவில் பணியாளர்கள் வழக்கமான பூஜைகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் கட்டாயம் அதில் பங்குகொள்ளக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம்... ஊரே சிரிக்குது!!

இந்த மாதிரியான சூழ்நிலையில் கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் மகன் பிஒய் விஜயேந்திரா சாமியை தரிசனம் செய்வதற்காக மைசூரு வெங்கடேஷ்வரா கோவிலுக்கு சென்றிருக்கின்றார். இவரின் இந்த விதிமீறல் நிகழ்வு மாநிலம் முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம்... ஊரே சிரிக்குது!!

மாநிலத்தில் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது கர்நாடகா காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றது. வாகனம் பறிமுதல், உச்சபட்ச அபராதம் என பல அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்கள் மீது எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே தனக்கு விதிகள் பொருந்தாது என்பதை வெளிக்காட்டும் வகையில் முதலமைச்சரின் மகன் விதிமீறல் செயலில் ஈடுபட்டிருக்கின்றார்.

விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம்... ஊரே சிரிக்குது!!

தான் பயன்படுத்தும் சொகுசு கார்களில் ஒன்றான மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரிலேயே பிஒய் விஜயேந்திரா கோவிலுக்கு வந்திருக்கின்றார். தான் மட்டுமின்றி தனது மனைவியையும் அவர் உடன் அழைத்து வந்திருக்கின்றார். கடந்த மே 6ம் தேதி அன்று முதல் கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

வரும் மே 24ம் தேதி வரை அது அமலில் இருக்கும். இந்த நாட்களில் மக்கள் அத்தியாவசிய தேவையை தவிர வேறு எதற்காகவும் வெளியில் வரக்கூடாது என்பது முழு ஊரடங்கின் மிக முக்கியமான நோக்கமாகும். ஆனால், இந்த விதியைக் அமல்படுத்திய எடியூரப்பாவின் மகனே விதியை மீறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.

விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம்... ஊரே சிரிக்குது!!

இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது கர்நாடகாவின் துணை முதல்வர் மிகவும் சர்ச்சையான ஓர் பதிலைக் கூறியிருக்கின்றார். அதாவது, கோவிட்-19 நோயாளிகள் அனைவரும் விரைவில் சுகம் பெற வேண்டி எடியூரப்பாவின் மகனும், மருமகளும் கோயிலுக்கு வந்ததாகக் கூறியிருக்கின்றனர். இந்த பதில் மாநிலத்தில் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.

விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம்... ஊரே சிரிக்குது!!

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஸ் கார் இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 3.0 லிட்டர் டர்போசார்ஜட் வி6 டீசல் எஞ்ஜினுடன் 350 டி எனும் வேரியண்டிலும், 3.0 லிட்டர் டர்போ வி6 பெட்ரோல் எஞ்ஜினில் ஜிஎல்எஸ் 400 வேரியண்டிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
CM BS Yediruppa’s Son BY Vijayendra Breaks Lockdown Restrictions To Visit Temple. Read In Tamil.
Story first published: Thursday, May 20, 2021, 16:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X