ஃபோர்டு ஆலைக்கே நேரா கிளம்பி போயிட்டாங்க!.. சீக்கிரமே இந்தியாவுக்கு ஃபோர்டு மீண்டும் வந்திரும் போலையே!

இந்தியாவை விட்டு வெளியேறி இருக்கும் ஃபோர்டு (Ford) நிறுவனத்தை மீண்டும் இந்தியா வருமாறு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அழைப்பு விடுத்திருக்கின்றார். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆகஸ்டு மாத இறுதியில் அமெரிக்கா சென்றார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அவர் அமெரிக்காவின் சிக்காகோவில் அமைந்திருக்கும் ஃபோர்டு ஆலைக்கு சென்றார். அங்கு நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் செய்த, அவர் மீண்டும் இந்தியாவில் செயல்பாட்டைத் தொடங்குமாறு அந்த நிறுவனத்திற்கு சிறப்பு அழைப்பு விடுத்தார்.

உலக புகழ்பெற்ற அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு இந்தியாவை விட்டு வெளியேறி மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிறுவனம் 2021 ஆம் ஆண்டே இந்தியாவை விட்டு வெளியேறியது. போதிய அளவு வரவேற்பு இல்லாத காரணத்தினால் இந்த நிறுவனம் நாட்டை விட்டு வெளியேறியது.

Stalin met with ford representatives

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் தொடர்ச்சியாக விற்பனை சரிவு மற்றும் நிதி சுமை காரணமாகவே இந்த நிறுவனம் நாட்டை விட்டு வெளியேறியது. இதற்கு இந்தியாவில் போட்டி அதிகரித்ததாலும், மேலும், ஃபோர்டின் தாரிப்புகள் சந்தையின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு அப்டேட் செய்யப்படாத காரணத்தினாலுமே அது நாட்டை விட்டு வெளியேறியது.

இதனால்தான் தன்னுடைய கார்களை விற்பனையில் இருந்து அகற்றி ஃபோர்டு கையோடு, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கார் உற்பத்தி பணிகளையும் அது நிறுத்தியது. இந்த நிலையிலேயே ஃபோர்டு நிறுவனம் சமீப சில காலமாக இந்தியாவில் மீண்டும் கால் தடம் பதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

CM stalin ford vist

இந்த மாதிரியான சூழலிலேயே அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றிருக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் தமிழகத்தில் தன்னுடைய செயல்பாட்டைத் தொடங்குமாறு அழைப்பு விடுத்து உள்ளர். நிறுவனத்தின் தமிழக ஆலை இப்போதும் அதன் வசமே இருப்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், மற்றுமொரு ஆலை தற்போது டாடா மோட்டார்ஸ் வசம் சென்றிருக்கின்றது.

எனவே நிறுவனம் இந்தியாவிற்கு மீண்டும் வரும் எனில் கட்டாயம் தமிழகத்தின் சென்னை ஆலையிலேயே அது உற்பத்தி பணிகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த முறை அது மின்சார வாகனங்களை அதிக அளவில் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் வெளியான தகவல்களும் இதையே உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் இப்போது மின்சார வாகனங்களுக்கு தேவை பலமடங்கு அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. ஆகையால், இந்த தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் அது தன்னுடைய தயாரிப்புகளைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஃபோர்டு நிறுவனத்திற்கும், தமிழகத்திற்குமான உறவு என்பது முப்பது ஆண்டு கால பந்தம் ஆகும்.

நிறுவனம் தன்னுடைய செயல்பாட்டை முதன் முதலில் தமிழகத்தில் 1990இல் தொடங்கியது. இந்த நிலையிலேயே 2021 செப்டம்பரில் அது நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்தது. இது ஃபோர்டு கார் பிரியர்கள் பலருக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்த நிலையிலேயே முக ஸ்டாலின் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்.

ஃபோர்டு நிறுவனத்தின் இன்டர்நேஷன் சந்தை பிரிவிற்கான தலைவர் கே ஹார்ட் மற்றும் சர்வதேச அரசு விவகாரங்களின் துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி, நாட்டின் இயக்குநர் (அரசு விவகாரங்கள்) ஸ்ரீபாத் பட் ஆகியோரும் இந்த கலந்துரையாடலின்போது கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. தமிழக அரசின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் பங்கேற்றனர். இவர்களுடன் தமிழக அரசு சார்பில் டிஆர்பி ராஜா உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் இந்த முறை சர்வைவ் செய்ய வேண்டும் எனில் அது புதுப்பித்த மற்றும் சந்தையை பூர்த்தி செய்கின்ற மாதிரியான தயாரிப்பைக் கொண்டு வந்தால் மட்டுமே முடியும். எனவே கவர்ச்சிகரமான தயாரிப்பையே அது இம்முறை விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 11, 2024, 19:51 [IST]
English summary
Cm stalin met with ford representatives in chicago
மேலும்... #ford
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+