டிரைவரே இல்லாத காரில் பயணித்த முதல்வர் ஸ்டாலின்! இதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்குதா
தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில், அங்கு அவர் ஜாகுவார் நிறுவனத்தின் தானியங்கியாக டிரைவர் இல்லாமல் இயங்கும் காரில் பயணித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த கார் எப்படி உருவாக்கப்பட்டது. இந்த கார் எப்படி டிரைவர் இல்லாமல் இயங்குகிறது? இதை யார் யார் பயன்படுத்த முடியும் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் 17 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்காவிற்கு சென்று உள்ளார். அங்கு அவர் பல முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டிற்கு பல்வேறு தனியார் நிறுவனங்களை முதலீடு செய்ய அழைப்பு விடுத்து வருகிறார். இதனால் அவர் அங்கு எங்கே பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார். பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்து செய்து வருகிறார்.

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ பகுதியில் நடந்த அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அப்பொழுது அவர் அமெரிக்காவில் இயங்கி வரும் டிரைவரை இல்லாத காரில் பயணித்தார். ஜாகுவார் நிறுவனம் தயாரித்த இந்த காரில் இவர் பயணித்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.
முதலில் ஸ்டாலின் பயணித்த கார் ஜாகுவார் நிறுவனம் தயாரித்த காராகும். ஜாகுவார் நிறுவனம் என்ற வேமோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் கார்களை மக்கள் பயன்பாட்டிற்காக செயல்படுத்தி வருகிறது. மக்கள் யார் வேண்டுமானாலும் இந்த காரை புக் செய்து டாக்ஸி போல பயன்படுத்திக் கொள்ளலாம்.

வேமோ என்பது கூகுள் நிறுவனம் தானியங்கியான கார்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க தனியாக உருவாக்கிய நிறுவனம். அந்த நிறுவனம் தான் வேணுமோ தற்போது அந்நிறுவனம் தனியாக கார் தயாரிப்பதை நிறுத்திவிட்டு நிறுவனம் தயாரித்து தொழில்நுட்பத்தை ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் கார்களில் பொருத்தி அந்த கார்களை தானியங்கி கார்களாக மாற்ற திட்டமிட்டு வருகின்றது.
இதற்காக அந்நிறுவனம் ஜாகுவார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், ஜாகுவார் நிறுவனத்தின் ஐ-பேஸ் என்ற காரை தானியங்கி காராக மாற்றி தற்போது அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் டாக்ஸி போன்ற செயல்பாட்டில் இருக்கிறது. இந்த காரை பயன்படுத்த ஆப் ஒன்றை வழங்கி உள்ளார்கள். அந்த ஆப்-ல் இந்த காரை புக் செய்தால் நீங்கள் இருக்கும் இடத்திற்கு இந்த கார் வந்துவிடும்.
இது காரில் ஏறி அமர்ந்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை மார்க் செய்தால் மட்டும் போதும் டிரைவரை இல்லாமல் தானியங்கி முறையில் இந்த கார் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று நின்று விடும். முற்றிலுமாக டிரைவரே இல்லாமல் தானியங்கி முறையில் இந்த கார் இயங்குகிறது. அமெரிக்காவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே இந்த கார் சேவை பயன்பாட்டில் இருக்கிறது.
இந்த கார் முழுமையாக தானியங்கி முறையில் இயங்க வேண்டும் என்பதற்காக இந்த காரில் 29 கேமராக்கள், ரேடார், லைடார் உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் உள்ள தகவல்களை வைத்து இந்த கார் தானியங்கி முறையில் எந்த ஒரு வாகனத்தின் மீது மோதாமல் அதே நேரம் காருக்குள் இருக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பாக செயல்பட்டு அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விடும்.
இந்த காரை தற்போது சொந்தமாக யாரும் வாங்க முடியாது. வேமோ நிறுவனம் இந்த காரை தற்போது டாக்ஸி பயன்பாட்டிற்காக சொந்த நிறுவனம் மூலம் நடத்தி வருகிறது. அதனால் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இந்த கார் சேவையை இந்நிறுவனம் நடத்தி வருகிறது. இதை தொடர்ந்து விரிவு படுத்தவில்லை. தற்போது இந்த கார் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது அமெரிக்காவில் பலர் இந்த காரில் பயணிக்க விரும்பி வருகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முற்றிலுமாக டிரைவரை இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் கார்கள் பயன்பாடு உலகில் பல்வேறு இடங்களில் வந்துவிட்டன. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் இப்படியான கார்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த காரை சொந்தக்காரர்களாக பயன்படுத்துவதை விட அமெரிக்காவில் உள்ளதை போல இந்தியாவிலும் டாக்ஸி பயன்பாட்டிற்கு இப்படியான கார்களை அறிமுகப்படுத்தினால் இது மிகப்பெரிய அளவில் பலனை தரும்.


Click it and Unblock the Notifications








