பயன்பாட்டுக்கு வந்தது டபுள்டக்கர் பஸ்!அந்த ஊருக்கு போனா அவரகூட பாக்காம வாங்க இந்த பஸ்ல டிராவல் பண்ணாம வராதீங்க
மீண்டும் டபுள் டக்கர் (இரண்டு அடுக்கு) பேருந்துகள் இந்த உலகில் பயன்பாட்டிற்கு வர தொடங்கி இருக்கின்றன. இந்த நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம் முதல் முறையாக எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பேருந்து (Double-Decker Electric Bus)-களை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றது. கடந்த சனிக்கிழமை அன்றே முதல் மின்சாரத்தில் இயங்கும் இரட்டை அடுக்கு பேருந்தை அந்த மாநிலம் பொது பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தியது. இதனை அம்மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் பச்சை கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தார்.
பொதுமக்களின் போக்குவரத்தை சிறப்பானதாக மாற்றும் பொருட்டே இந்த எலெக்ட்ரிக் இரண்டு அடுக்கு பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இந்தியா முழுக்க மின்சார வாகன பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையிலேயே எலெக்ட்ரிக் பேருந்துகளை உபி அரசாங்கம் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றது.

விரைவில் மாநிலம் முழுக்க உள்ள முக்கிய நகரங்களில் இதுபோன்று இன்னும் பல மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. எரிபொருளில் இயங்கும் பேருந்துகளால் காற்று மாசும், சுற்றுச் சூழலும் பாதிக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையிலேயே இந்தியா முழுக்க ஐசிஇ எஞ்சின் கொண்ட வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகன பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில்கூட டீசல் பேருந்துகள் சிஎன்ஜி வாகனங்களாக மாற்றப்பட்ட சம்பவம் கடந்த காலத்தில் அரங்கேறியது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க, சென்னையில் முக்கிய பகுதிகளில் எலெக்ட்ரிக் பேருந்துகளை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் ஆளும் திமுக அரசு முன்னெடுத்து உள்ளது. இந்த நிலையிலேயே முதல் முறையாக மாநிலத்தில் மின்சார டபுள் டக்கர் பேருந்துகளை உபி அரசாங்கம் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றது.

லக்னோவிலேயே அவை பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த பேருந்துகளில் பிரத்யேக சலுகை பெண் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. 50 சதவீதம் தள்ளுபடி கட்டணத்தில் பெண்களால் இந்த பேருந்தில் பயணித்துக் கொள்ள முடியும். இதுமட்டுமில்லைங்க, சனிக்கிழமை காலை மட்டும் பெண்கள் பயணிக்க முற்றிலும் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
குறிப்பிட்ட ரூட்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்பது கவனிக்கத்தகுந்தது. உபி அரசாங்கம் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கும் எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பேருந்தானது நகர்புற பயன்பாட்டிற்கு உகந்த மற்றும் கம்போர்ட்டான டிராவலுக்கு உகந்த எலெக்ட்ரிக் பேருந்தாகும். படங்களை வைத்து பார்க்கையில் இது சுவிட்ச் இஐவி 22 (SWITCH EiV 22) மாடல் என்பது தெரிகின்றது.

லேட்டஸ்ட் டெக்னாலஜி, அல்ட்ரா மாடர்ன் லுக், உயர் பாதுகாப்பு திறன் என ஏகப்பட்ட சிறப்புகளை இந்த பேருந்து தாங்கியிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. வலது பக்கம் இரண்டு இருக்கைகள், இடது பக்கம் இரண்டு இருக்கைகள் வழங்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு பயணிக்கும் இடையில் போதுமான இடைவெளி இருக்கும் வகையிலேயே அதன் இருக்கைகள் இருக்கும்.
ஒட்டுமொத்தமாக 65 பேரால் இந்த பேருந்தில் அமர்ந்து பயணிக்க முடியும். இந்த டபுள் டக்கர் பேருந்தில் அதிகம் ரேஞ்ச் தருவதற்காக 231 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. 2 ஸ்ட்ரிங், லிக்யூடு கூல்டு, அதிக அடர்த்தி கொண்ட என்எம்சி வகை பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது.
இது ஓர் டூயல் கன் சார்ஜிங் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பேருந்து ஆகும். எனவே விரைந்து இதை சார்ஜ் செய்ய முடியும். மேலும், ஓர் முழு சார்ஜில் 250 கிமீ வரையில் இது ரேஞ்ச் தரும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டபுள் டக்கர் எலெக்ட்ரிக் பேருந்துகள் இன்னும் அதிக அளவில் வரும் நாட்களில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. சென்னையிலும் இந்த வகை பேருந்துகள் பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதுகுறித்த எந்தவொரு உறுதியான தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளையில், சீக்கிரமே வழக்கமான ஏசி பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என தெரிகின்றது.


Click it and Unblock the Notifications









